ஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது?

ஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது?

தாய்ப்பால் தரலாமா ஃபார்முலா மில்க் தரலாமா என்பதே தாய்மார்களுக்கு பெரும் குழப்பம். (Breastmilk vs Formula Feeding). தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பாராட்டுக்கள். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு சில டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம். ஃபார்முலா மில்க் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை (Formula milk Feeding) என்னென்ன?

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிடியாட்ரிக்ஸ், அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன், உலக சுகாதார நிறுவனம், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், நம் வீட்டு பாட்டிமாக்கள் முதற்கொண்டு தாய்ப்பாலே சிறந்தது என்கின்றனர்.

தாய்ப்பால் குடிப்பதால் அலர்ஜி, நோய் தாக்கம் ஆகியவை இருக்காது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்

 • காது தொற்று
 • வயிற்றுப்போக்கு
 • சுவாச கோளாறுகள்
 • அலர்ஜி
 • ஆஸ்துமா
 • சர்க்கரை நோய்
 • உடல் பருமன்
 • திடீரென குழந்தைகள் இறக்கும் பிரச்னை ஆகியவை வராமல் தடுக்கப்படும்.

தாய்ப்பால் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள்

mother milk for babies

Image Source : Mother Nature Network

 • குழந்தைக்கு எளிமையாக செரித்துவிடும்.
 • ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளைவிட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு செரிமான எளிதாக நடைப்பெறும்.
 • விட்டமின்கள், தாதுக்கள் தாய்ப்பாலில் நிறைந்துள்ளன.
 • தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு நாளைக்கு 500 கலோரிகளை இழக்கிறாள். இதனால் இயற்கையாகவே உடல் எடை குறைகிறது.
 • குழந்தையின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

இதையும் படிக்க: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரவேண்டும்… ஏன்?

தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் என்ன செய்வது?

 • நோய் தாக்கம் போன்ற காரணத்தினால் உங்களால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை என்றால் ஃபார்முலா பவுடர் பால் (Formula powder Milk) கொடுக்கலாம்.
 • ஃபார்முலா பால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஓரளவுக்கு உதவும்.
 • 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது நல்லது.
 • 6 மாதத்துக்கு பிறகு தாய்ப்பால் சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை என்றால் நீங்கள் ஃபார்முலா பால் கொடுக்கலாம்.

ஃபார்முலா மில்க்…

formula milk for babies

Image Source : Mom Junction

இதையும் படிக்க: குழந்தையின் முதல் 1000 நாட்கள் … 21 கட்டளைகள்..!

 • அலுவலகம் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்கள் இதைப் பயன்படுத்தலாம்.
 • எப்போதெல்லாம் ஃபார்முலா மில்க் தரலாம்?
 • குழந்தையின் பசி பொறுத்து நீங்கள் கொடுக்கலாம்.
 • 1-2 மாத குழந்தையாக இருந்தால் 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை தரலாம்.
 • 3-4 மாத குழந்தை எனில், 3-4 மணி நேரத்துக்கு ஒரு முறை தரலாம்.

ஃபார்முலா மில்க் நீங்களே தயாரிக்க முடியுமா?

சரியான ஃபார்முலா தெரியாமல் நீங்களே தயாரிப்பது சரியான முயற்சி அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் ஃபார்முலா மில்கை குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஃபார்முலா மில்க் பாட்டிலை ஸ்டரிலைஸ் செய்ய வேண்டுமா?

steel bottles for babies

 • ஆம். கட்டாயம் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
 • கொதிக்கும் நீரில் பாட்டிலை போட வேண்டாம் ஆனால் சூடாக இருக்கும் நீரில் சிறிது நேரம் பாட்டிலை போட்டு வையுங்கள்.
 • குழாயைத் திருப்பி வேகமான தண்ணீரில் காட்டி சுத்தப்படுத்தலாம்.
 • பாட்டிலை சுத்தப்படுத்த தற்போது சில கருவிகள் வந்துள்ளன. அதை வாங்கி பயன்படுத்தலாம்.
 • முடிந்த அளவு பிளாஸ்டிக் பாட்டில் தவிர்த்து ஸ்டீல் பாட்டில்கள் தற்போது வருகின்றன. அதை வாங்கி பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்க: தாய்ப்பால் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், அதற்கான பதில்கள்… 

ஃபார்முலா மில்கின் அளவு என்ன?

 • உங்கள் குழந்தை ஃபார்முலா மில்க் குடித்த பிறகு வாந்தி எடுத்தாலே நீங்கள் ஃபார்முலா மில்கை அதிகமாக தருகிறீர்கள் என அர்த்தம்.
 • வயிறு வலி குழந்தைக்கு இருந்தாலும் நீங்கள் ஃபார்முலா மில்க் கொடுக்கும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஃபார்முலா மில்க் சரியான அளவில் கொடுத்தால்…

 • குழந்தையின் எடை சீராக இருக்கும். சரியான எடை அதிகரித்தும் இருக்கும்.
 • ஃபார்முலா மில்க் குடித்த பின் குழந்தை மகிழ்ச்சியாக இருந்தாலே, நீங்கள் கொடுக்கும் அளவு சரி. சிரித்து, குஷியான ஒரு உணர்வில் இருப்பது நல்ல அறிகுறி.
 • 5-6 டயாப்பர், 6-8 துணியை நீங்கள் உங்கள் குழந்தைக்கு மாற்றுகிறீர்கள் என்றாலும் நீங்கள் ஃபார்முலா மில்க் கொடுக்கும் அளவு சரி.

ஃபார்முலா மில்க் தயாரித்தல்…

hand washing

Image Source : Benefits Bridge

 • நன்றாக கைகளை சுத்தம் செய்யுங்கள்.
 • குறைந்தது 20 நொடிகளாவது உங்கள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
 • சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி ஃபார்முலா மில்கை தயாரியுங்கள்.
 • ஃபார்முலா மில்க் வாங்கும் போது…
 • அதன் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்குங்கள்.
 • ஃப்ரீசரில் வைக்க கூடாது.
 • மிகவும் சூடான இடத்திலும் வைக்க கூடாது.
 • ஸ்டவ், சூரிய வெளிச்சம், ஒவன், சுடு நீர் இருக்கும் இடங்களில் ஃபார்முலா மில்க் வைக்க கூடாது.
 • காபினெட் அல்லது ஷெல்ஃபில் வைக்கலாம்.
 • ஒரு முறை ஃபார்முலா பவுடர் கேனை திறந்துவிட்டால் ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிடுங்கள்.

இதையும் படிக்க: 0 – 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null