கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்

கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்

முகம், கை, கால்கள் எல்லாம் பளிச்சென்று அழகாக இருக்கும். ஆனால், தொடை மற்றும் தொடை இடுக்குகளில் மட்டும் கருமை படிந்திருக்கும். ஏன்? என்ன காரணங்கள்? தீர்வு என்ன? வீட்டு வைத்திய முறைகளிலே தீர்வு இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பின்பற்றினால் விரைவில் பலன் தெரியும்.

தொடையின் உள்பகுதியில் கருப்பு படிந்திருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஹார்மோனல் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.

தொடையை மறைப்பது மட்டுமே இதற்கான தீர்வாக முடியாது. சில வீட்டு வைத்திய முறைகளை முயற்சி செய்து பாருங்கள்.

கருப்பான தொடை மற்றும் தொடை இடுக்குகளை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

எலுமிச்சை சாறு

 • இயற்கை பிளீச் என்று எலுமிச்சை சாறை சொல்லலாம்.
 • சருமத்தில் கருப்பாக இருக்கும் பகுதியை லைட்டாக மாற்றும்தன்மை இதற்கு உண்டு.
 • விட்டமின் சி அதிகம் உள்ளதால் புதிய செல்களை உருவாக்க உதவும்.
 • எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியாக்கும் என்பதால், இதைப் பயன்படுத்திய பிறகு சருமத்தை மாய்ஸ்சரைசர் போட்டு தேய்ப்பது நல்லது.
 • ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விடவும்.
 • வாரம் 3-4 முறை இப்படி செய்யலாம்.
 • சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், சிறிதளவு தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து தடவலாம்.

கற்றாழை ஜெல்

aloevera gel for skin

Image Source : Livestrong

 • குளிர்ச்சி தரக்கூடியது கற்றாழை.
 • இரண்டு கால்கள் உராய்வதால் ஏற்படும் கருமையை நீக்க சிறந்த வீட்டு வைத்தியம் இது.
 • சருமத்தை மிருதுவாக்கும்.
 • கருமை படிந்திருப்பதை நீக்கும்.
 • கற்றாழையின் தோலை நீக்கி, சதைப்பகுதியை நன்கு பேஸ்டாக்கி, அதை தொடைப் பகுதியில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவுங்கள்.

இதையும் படிக்க : சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ்

ஆரஞ்சு தோல்

 • ஆரஞ்சு தோலை சேகரித்து வைத்து, அதை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • சருமத்துக்கு சிறந்த பிளீச்சிங் எஃபெக்டை தரும்.
 • தேவையான அளவு ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து, சிறிதளவு தேனுடன் கலந்து தொடையில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 • வாரம் 2-3 முறையாவது இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.

பாதாம் எண்ணெய்

 • ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தொடைப் பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
 • 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

coconut oil to remove darkness

Image Source : Healthline

தேங்காய் எண்ணெய்

 • இயற்கையான மாய்ஸ்சரைசர் இது.
 • அனைத்து சருமத்துக்கு இந்த சிகிச்சை பொருந்தும்.
 • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தொடைப் பகுதியில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விடுங்கள்.
 • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த சிகிச்சையை செய்யலாம்.

இதையும் படிக்க : ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

பேக்கிங் சோடா

 • கருமையான சரும நிறத்தை வெள்ளையாக்கும்.
 • சூரிய கதிர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்கும்.
 • சென்சிடிவ் சருமம் உடையவர்கள், ஒருமுறை செக் செய்து விட்ட பின் பயன்படுத்துவது நல்லது.
 • பால் அல்லது சூடான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்டாக்கவும்.
 • ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • இதை நன்கு கலந்து, தொடையில் தடவி, சர்குலர் மோஷனில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
 • வாரம் 4 முறை செய்யுங்கள். பலன் கிடைக்கும்.

கிளிசரின்

 • ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தொடைப் பகுதியில் இரவில் தடவி மறுநாள் காலையில் கழுவலாம்.
 • பலன் நிச்சயம்.

இதையும் படிக்க : பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

தக்காளி பேஸ்ட்

 • ஓட்ஸ் பவுடர், தக்காளி விழுது ஆகியவை கலந்து பேஸ்டாக்கி தொடையில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
 • கரும்புள்ளிகள் இருந்தால்கூட மறைந்துவிடும். தொடையில் உள்ள கருப்பும் நீங்கும்.

yogurt for skin
யோகர்ட்

Image Source : Health Magazine

 • சூரிய வெளிச்சத்தால் உங்களது தொடைப் பகுதி கருப்பாகி இருந்தால் இந்த தீர்வு உங்களுக்கு பயன்படும்.
 • சருமத்துக்கு நல்லது.
 • சன் டேன் நீக்கும்.
 • எந்த சுவையும் சேர்க்கபடாத பிளெயின் யோகர்ட்டை தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
 • வாரம் 3 முறை செய்யுங்கள்.

இதையும் படிக்க : நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

கடலை மாவு பேக்

 • 2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் யோகர்ட் கலந்து தொடை பகுதியில் தடவலாம்.
 • 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.
 • வாரத்தில் 2-3 முறை செய்து வர பலன் தெரியும்.

மஞ்சள்

 • சரும சுருக்கங்கள், சரும பிரச்னை, கருமை படிதல் ஆகியவற்றுக்கு தீர்வளிக்கும்.
 • தொடை இடுக்குகளில் அதிகமான மெலானின் சுரப்பதால் கருமை படியும். அதற்கு சிறந்த தீர்வு இது.
 • பாலாடையில் மஞ்சள் தூள் கலந்து தொடைப் பகுதியில் தடவுங்கள்.
 • 20 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவுங்கள்.
 • தினமும் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்து வர வேண்டும்.

இதையும் படிக்க : நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட நீங்கும்… இயற்கை வழி வைத்தியம் 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null