கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்... உண்மை நிலை என்ன?

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்... உண்மை நிலை என்ன?

குழந்தைகாக திட்டமிட்டு இருக்கிறீர்களா... நீங்கள் கர்ப்பிணியாகவும் இருக்கலாம்... வாழ்த்துகள்… பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். இது சரியா… இது நார்மலா… இதுபோல நிறைய கேள்விகள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம்… மகிழ்ச்சியாக உங்களது கர்ப்பக்காலத்தை அனுபவியுங்கள்.

என்னென்ன பயம்? அதன் உண்மை காரணங்கள் என்னென்ன?

#1. பிறவி குறைபாடுகள்

  • டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் இன்னும் பல பிறவி குறைபாடுகளை நினைத்து, நீங்கள் பயப்படலாம்.
  • எப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்ததோ அன்றிலிருந்து குழந்தையின் நன்மைகாக அதிகம் யோசிப்பீர்கள்.
  • பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள் என்பதால் நிம்மதி கொள்ளுங்கள்.
  • தற்போதெல்லாம் நிறைய ஸ்கேன், பரிதோசனைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிடலாம்.
  • அதில் நிறைய பிரச்னைகள், மிகவும் சிறிய விஷயமாக இருக்கலாம். அதை குணப்படுத்தியும் விடலாம்.
  • உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிடுகிறீர்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்... mood swings in pregnancy
  • தினமும் ஃபோலிக் ஆசிட் உணவுகள், மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.
  • நரம்பு தொடர்பான, வளர்ச்சி தொடர்பான அனைத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிக முக்கியம். எனவே சத்துள்ள உணவுகளுக்கே முதலிடம்.
  • பயம் குழந்தையை அதிகம் பாதிக்கும் என்பதால் அமைதி கொள்ளுங்கள். தியானம், இசை கேட்பதில் ஈடுபடுங்கள்.
இதையும் படிக்க: ரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்...

#2. கருசிதைவு

  • 10 - 20% கருசிதைவு ஏற்படத்தான் செய்கிறது.
  • க்ரோமோசோமல் அப்நார்மலிட்டி எனும் பிரச்னை மூலம் கருசிதைவாகுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை.
  • இதெல்லாம் இருந்தாலும் உங்களது மைண்ட், எண்ணம், மனம் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும்.
  • பாசிட்டிங் எண்ணெங்கள் (நேர்மறை எண்ணங்கள்), இருந்தாலே எதையும் வெல்ல முடியும்.
  • நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே நடக்கும்.
  • கெஃபைன் உள்ள பொருட்களை அறவே தவிர்க்கவும்.
  • நிக்கோட்டீன் இருப்பதையும் தவிர்க்கவும். சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருக்க வேண்டாம்.
  • குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால், கருசிதையும் வாய்ப்புகள் அதிகம்.
  • ரத்தப்போக்கு இருந்தால் தொடக்கத்திலே மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.

# 3. குறை பிரசவம்

  • பெரும்பாலான தாய்மார்கள் குறைபிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்கள்.
  • 37 வாரம் முடியாமல் முன்னராக குழந்தை பிறந்தால், அந்த பிரசவத்தை குறை பிரசவம் எனச் சொல்லப்படுகிறது.
  • இப்போதெல்லாம் 37-வது வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தாலும் அதற்கேற்ற தக்க சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.
  • யூட்டரின், சர்விகல் அப்நார்மலிட்டி இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள்.
depression in pregnancy
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
  • குறை பிரசவம் வரலாம் என டாக்டர்கள் முன்னரே யூகிக்கப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பார்கள். பயம் வேண்டாம்.
  • உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இவற்றை சீராக, சரியாக வைத்துக் கொள்வது தாய்மார்களின் பொறுப்பு.
  • இந்த 3 விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால் பயம் எதற்கு? உடல் எடையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...

# 4. தொப்புள் கொடி சுற்றிக் கொள்வது

  • நிறைய கதைகளை கேட்டிருப்போம் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி உள்ளது.
  • இதை நீங்கள் கேள்விப்பட்டால் உங்கள் எண்ணங்கள் மூலம் சரிசெய்யுங்கள்.
  • வயிற்றில் உள்ள அந்த நீர் மூலமாக தானாக தொப்புள் கொடி சரியாகிவிடும். சிலருக்கு சரியாகவில்லை என்றாலும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள்.
  • கரு உண்டான நாள் முதலே நல்லவை, பாசிட்டிவ் விஷயங்களை சொல்லிக் கொண்டே இருங்கள். எல்லாமே நன்றாக நடக்கும்.

# 5. உடல் எடை அதிகரிப்பது

  • இது எல்லாருக்கும் நடக்க கூடிய விஷயம். புதிது அல்ல…
  • உங்களது உடலின் தோற்றம் மாறுகிறதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில மாதங்களிலே பிரசவத்துக்கு பின்னர் சரியாகிவிடும்.
  • எடையை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், கர்ப்பக்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.
  • நீங்களாக எந்த வொர்க்அவுட்டும் செய்ய வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

# 6. வலி மிகுந்த பிரசவம் இருக்குமா…

Fear about delivery pain
  • பிரசவத்தை நினைக்கும்போது பயம்.
  • பிரசவ வலி வந்தவுடன் மருத்துவமனைக்கு சரியாக செல்ல முடியுமா எனப் பயம்.
  • பிரசவ வலி, பனிக்குடம் உடைதல் இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். இதெல்லாம் உலகம் அறிந்த உண்மை.
  • உங்களுக்கு நீங்களே விழிப்புணர்வு ஊட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக நடக்கும்.
  • சுலபமான பிரசவம் நடக்கும்.
  • உங்கள் குழந்தையிடம் நீங்கள் தொடக்கத்திலிருந்தே பேசுங்கள். நீ பிரசவம் சமயத்தில் சுலபமாக வந்துவிடு எனச் சொல்லுங்கள். நிச்சயம் குழந்தைக்கு உங்களது வார்த்தை புரியும்.
இதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க... சாப்பிட வேண்டிய 22 உணவுகள்...

# 7. குழந்தை வளர்ப்பு

  • குழந்தை பிறந்தாகிவிட்டது. மகிழ்ச்சியும் ஆனந்த கண்ணீரிலும் ஆழ்ந்து இருக்கிறீர்கள்.
  • தாய்ப்பால் கொடுப்பது, டயாப்பர் மாற்றுவது, குழந்தை தும்முவது, அழுவது எல்லாமே புதிய விஷயம்தான்.
  • உங்களுக்கு எந்த பயமும் வேண்டாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதே குழந்தை வளர்ப்பு பற்றி நல்ல புத்தகங்கள், மாம்ஸ் கம்யூனிட்டி போன்றவற்றில் இணைந்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்களது குழந்தை வளர்ப்பு கலையும் எளிமையாகும். குழப்பங்கள் வேண்டாம். நிறைய தாய்மார்கள் இணைந்த குழுக்கள் உள்ளன. அதில் கர்ப்பமாக இருக்கும்போதே சேர்ந்து கொள்ளுங்கள்.
  • நிறைய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம்.
  • எல்லாமே உங்கள் கையில் இருக்கிறது. பாசிடிவ் எண்ணங்களை மனதில் விதையுங்கள். எல்லாமே நன்றாகவே நடக்கும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துகள்...
இதையும் படிக்க: கர்ப்பக்கால விதிகள்… செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null