கணவன் மனைவி உறவை மகிழ்ச்சியாக்க உதவும் 10 வாழ்க்கை ரகசியங்கள்…

கணவன் மனைவி உறவை மகிழ்ச்சியாக்க உதவும் 10 வாழ்க்கை ரகசியங்கள்…

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக, பிரச்னையில்லாமல் போவது என்பது இன்று அரிதாகிவிட்டது. நிறைய சலிப்பு, கோபம், வருத்தம், வெறுப்பு, ஏக்கம், புரிதல் இல்லாதது போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி வெற்றி காண்பது… கணவன் மனைவி பந்தத்தை எளிமையான முறையில் வலிமையாக்குவது எப்படி?

உறவுகளை பலமாக்கும் வளமாக்கும் 10 சீக்ரெட்ஸ் (10 Secrets to have a healthy relationship)

#1. பாராட்டி தள்ளுங்கள்…

சின்ன விஷயம் முதல் பெரிய விஷயம் வரை, அனைத்துக்கும் பாராட்டுங்கள். உங்கள் மனதில் சுமாரானது எனப்பட்டால் கூட பரவாயில்லை. பாராட்டித் தள்ளுங்கள். பாராட்டினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் பாராட்டுவதில் என்ன கஷ்டம். காசா, பணமா… பாராட்டுதானே அள்ளி விடலாம். இதனால் நிஜமாகவே உறவில் மேஜிக் நடக்கும்.

#2. இரண்டு வார்த்தைகள்…

எதை வாங்கி கொடுத்தாலும் சரி… எதை உங்களுக்கு பரிசாக தந்தாலும் சரி… சின்ன விஷயம் முதல் பெரிய முடிவுகள் வரை… உங்களுக்கு சின்ன புன்னகையைத் தரும் எதுவாக இருந்தாலும்… இரண்டு வார்த்தைகளை நினைவில் வையுங்கள்… ஒன்று, நன்றி…(Thanks) இன்னொன்று, சூப்பர் (Super)… இது இரண்டுமே நேர்மறை வார்த்தைகள். மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்கும். happy marriage life Image Source : Catholic Match

#3. உங்களது தோற்றத்தில் கவனம் செலுத்துங்கள்…

அழகு என்பது மனதில்தான் உள்ளது. தோற்றத்தில் அல்ல… புத்துணர்ச்சி, ஃப்ரெஷ், மகிழ்ச்சி, ஃபீல் குட்… இப்படியான விஷயங்கள் தோற்றத்தில் பிரதிபலிக்கும். கிரீம் பூசுகிறோமா, டியோ அடிக்கிறோமா… சிரித்த முகத்துடன் உற்சாகமாக, புத்துணர்வாக இருங்கள்… இதற்கு பணம் செலவழிக்க தேவையில்லை. மனம் வைத்தாலே போதும்.

#4. ஆரோக்கியமான, சிறிய இடைவேளி

என் முன்னேதான் அனைத்தையும் பேச வேண்டும். உன் வாலட்டில் இருப்பது என்னவென்று எனக்கு அவசியம் தெரிய வேண்டும். உன் ஃபேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள்… ஏன் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில், டிபி மாற்றுகிறாய்… எதுக்கு பியூட்டி பார்லர் போகுறா… இப்படி ஓவராக பர்சனில் இறங்காமல் அவரவர் விருப்பத்துக்கு, சுகந்திரத்துக்கு மதிப்பு கொடுத்து ஆரோக்கியமான இடைவேளியை அமைத்து கொள்ளுங்கள்… ‘நச’ என்ற பெயர் கிடைக்காது. வெறுப்பும் வராது... என் துணை எனக்கு வரம் என்ற பெயர் கிடைக்கும்.

#5. சின்ன சின்ன பரிசு…

பரிசு என்பதே பெரியதுதான்… பெரிய பரிசு தான் மதிப்பை கூட்டுமோ… என்றில்லை... சின்ன சின்ன பரிசுகள் கூட பேரின்பத்தை வரவைக்கும். கைகுட்டை, சிறிய கீ செயின், பேனா, பிடித்த கம்மல், வாலட், டி-ஷர்ட், பிடித்த பாடி-ஸ்ப்ரே போன்ற சின்ன சின்ன பரிசுகள் கூட உங்களது உறவை மேம்படுத்தும். பெரிய எதிர்பார்ப்புகளை கூட பூர்த்தி செய்துவிடும். இதையும் படிக்க: சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ்  healthy marriage life Image Source : Elite Daily

#6. ஒரு ஆழமான வார்த்தை

ஆழமான வார்த்தை இது என்று சொல்லலாம். ஒருமுறை இதை இழந்து விட்டால் திரும்ப பெறுவது கடினம். இதைப் பெறுவதற்கும் கொஞ்சம் கடினம்தான். ஆனால், இது இரண்டு பேருக்கும் கிடைத்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். என்ன என்கிறீர்களா? நம்பிக்கை… அதானா எல்லாம்.

#7. இரண்டு கோள்கள்…

மார்ஸ், வீனஸ் புத்தகம் நிறைய பேர் படித்திருப்போம். கணவனும் மனைவியும் இரண்டு கிரகத்திலிருந்து வந்தவர்கள். வெவ்வேறு வாழ்வியல் பழக்கம், உணவுப் பழக்கம், குடும்ப வழக்கம், பிடித்தவை, பிடிக்காதவை, கருத்துகள், முடிவுகள் என அனைத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு. ‘ஏறக்குறைய’, ‘முன்னபின்ன’ போன்ற இப்படியான வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். விருப்பங்கள் ஓரளவுக்கு ஒன்றாக இருந்தாலும் ஓ.கே செய்து விடுங்கள். 100% - காக காத்திருக்க வேண்டாம். 10-ல் 6 பொருத்தமாக இருந்தாலே போதும்… ‘பர்ஃபெக்‌ஷனிஸ்ட் (Perfectionist)’ பட்டம் வேண்டாமே. இதையும் படிக்க: நகங்கள் காட்டும் நோய் அறிகுறி... நகங்களைப் பராமரிப்பது எப்படி?  how to make love with life partner Image Source : New york post

#8. அதென்ன டிசைன்

டிசைன், டிசைன் எல்லோரும் சொல்றாங்க… என்ன டிசைன்னுதான் புரியவே இல்லை. இவருக்கு இவள் கிடைத்தது, டிசைன். இவளுக்கு இவன் கிடைத்ததும், டிசைன். நடுவில் வரக்கூடிய பிரச்னையும் டிசைன். அந்த பிரச்னை முடிவுக்கு வருவதும் டிசைன். நீங்கள் நீங்களாக இருப்பதும், சில சமயங்களில் வேறு போல மாறுவதும் ‘டிசைன்’ என்றால் எதிர் நபர் அப்படி மாறுவதும் டிசைன்தான். இந்த ‘டிசைன் ஃபார்முலா’ புரிவதற்கு கொஞ்சம் கஷ்டம் என்றாலும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களது டிசைனும் அழகாகும். உறவுகள் பலப்படும்.

#9. கூல்… ஜில்.. ஐஸ்… குளிர்காலம்… குளிர்ச்சி…

குளிர் நமக்கு எவ்வளவு பிடிக்கும். ஐஸ்கிரீம்கூட அவ்வளவு பிடிக்கும். கூலாக இருப்பதில் என்ன ஒரு ஆனந்தம். இப்படி குளிருக்கு, ஜில்லுக்கு, ஐஸ்ஸூக்கும் இவ்வளவு ரிலாக்ஸை தரும் சக்தி இருக்கிறது. இதை வாழ்க்கையிலும் அமூல்படுத்துங்கள். கோபம், வெறுப்பு, வஞ்சம், பழி வாங்குதல், இருப்பு கட்டி வைத்தல், சரியான சமயத்துக்காக காத்திருத்தல் இதெல்லாம் எதிர்மறை செயல்கள். உங்களது உடலையும் ரத்தத்தையும் சூடாக்கும். மகிழ்ச்சி, ஆனந்தம், சிரிப்பு, காதல், அன்பு, பிடித்தம், புரிதல்… இவையெல்லாம் குளிர்த்தன்மை கொண்டவை. உங்களையும் உங்களது உடலையும் கூலாக்கும். ஹாட் சீசனாக இருக்கும் உங்கள் மனதை, ஜில் சீசனாக மாற்றுங்கள்… வாழ்வில் தென்றல் வீசட்டும். இதையும் படிக்க: தாய்ப்பால், குழந்தைகளின் உரிமை... எங்கும் எந்த நேரத்திலும்…  love life after marriage with life partner Image Source : Womens Health

#10. ஒற்றை வார்த்தை - அனைத்தையும் தரும்

உலகில் இந்த ஒற்றை வார்த்தையை அனைவரும் நினைத்தாலே, அடுத்த நிமிடமே இந்த உலகம் அமைதியால் தழுவும். ஆகச் சிறந்த பெருவார்த்தை அது… ‘ மன்னிப்பு’... பெருந்தன்மை மிக்க செயல்… பேரின்பத்தைத் தரும். பேரன்பை கொடுக்க வல்லது. உறவுகளில் ஆழமான திருப்புமுனையை கொடுக்கும். எதிர்பாராத திருப்புமுனையைகூட தரும். இழந்ததை மீட்டுக் கொடுக்கும். இழக்காமல் இருப்பதைகூட தவிர்க்கும். இந்த மன்னிப்பிலே… சில விதிமுறைகள் உண்டு... ஒருமுறை செய்வது தவறு… மீண்டும் மீண்டும் செய்வது திமிரு… எந்த தவறை மன்னிக்க வேண்டும். எந்த தவறை மன்னித்துவிட்டு மறக்கலாம். எந்த தவறை மன்னித்த பிறகு மறக்க கூடாது என்பதை அழகாக பட்டியலிட்டு கொள்ளுங்கள். சிலருக்கு, மன்னிப்பு என்பது பாடம்… பலருக்கு, மன்னிப்பு என்பது ஆரம்பம். மகிழ்ச்சி ஆரம்பமாகட்டும். உறவில் நல்மாற்றம் ஆரம்பமாகட்டும். ஆனந்தம் ஆரம்பமாகட்டும். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null