பாதுகாப்பான தீபாவளி… குழந்தைகளுக்கான பாதுகாக்கும் முறைகளும் உணவுகளும்...

பாதுகாப்பான தீபாவளி… குழந்தைகளுக்கான பாதுகாக்கும் முறைகளும் உணவுகளும்...

தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று. விதவிதமான உணவுகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டம் அதிகம்தான். ஆனால், அனைத்து உணவு பண்டங்களும் உடலுக்கு நல்லதா எனக் கேட்டால் பதில் இல்லை. பாதுகாப்பான அதே சமயம் ஆரோக்கியமான தீபாவளியை எப்படி கொண்டாடுவது எனப் பார்க்கலாம். நல்ல உணவுகளுடன் தொடங்கட்டும் தீபாவளி. தீபாவளி என்றாலே தின்பண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல தின்பண்டங்களை செய்து கொடுக்கலாம். பட்டியல் இதோ…

அதிரசம்

தீபாவளிக்கு பெரும்பாலான வீட்டில் செய்யக்கூடிய பண்டம் இது. பச்சரிசி, வெல்லம், சுக்குத்தூள் சேர்த்து செய்யப்படும். ஆரோக்கியமான உணவு இது. 11 மாத + குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுக்குத்தூள் இருப்பதால் செரிமானமாக உதவும்.

எள்ளு முறுக்கு

பச்சரிசி மாவு, உளுந்து மாவு, எள்ளு, நெய், உப்பு சேர்த்து மாவு பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சில் வைத்து பிழிந்து கொள்ளவும். எண்ணெயில் பொரித்து எடுத்தால் எள்ளு முறுக்கு தயார். குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

ராகி பக்கோடா

பக்கோடா பிடிக்காதவர்கள் இல்லை. கடையில் வாங்குவது பாதுகாப்பானது அல்ல. ராகி மாவு, பச்சரிசி மாவு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நீங்களே மாவு பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்து எடுத்தால், ராகி பக்கோடா தயார்.

தினை இனிப்பு பொங்கல்

தினை அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், தேங்காய் துண்டுகள், தண்ணீர் கலந்து செய்ய கூடியவைதான் தினை இனிப்பு பொங்கல். இறுதியாக, நெய்யில் வறுத்து முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகள் சேர்ப்பது இன்னும் சுவையாக இருக்கும். உடலுக்கு எனர்ஜி கொடுக்கும். மிக மிக சத்தான உணவு இது. இதையும் படிக்க: குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் 20 உணவுகள்... ellu urundai Image Source : Food52

எள்ளு உருண்டை

கருப்பு எள்ளில் செய்தால் மிக மிக நல்லது. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்து செய்யுங்கள். எள் சாப்பிட்டால் கர்ப்பப்பைக்கு நல்லது. குழந்தைகள் சாப்பிட்டு வர எடை அதிகரிக்கும்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

கடலை உருண்டை

நிலக்கடலையை வறுத்து வெல்லப்பாகில் உருட்டி செய்வார்கள். மிகவும் சத்தான தின்பண்டம் இது. குழந்தைகளுக்கு அவசியம் கொடுங்கள். குழந்தைக்கு திட்டமிடும் ஆண் சாப்பிட, ஆண்மை அதிகரிக்கும். வலிமையும் கிடைக்கும்.

பாசிப் பருப்பு உருண்டை

பாசிப்பருப்பை தொலியுடன் அரைத்து மாவாக்க வேண்டும். வெல்லப்பாகைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல்கள் அல்லது பொடிதாக அறிந்த தேங்காய் துண்டுகள் போட்டு சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். 7-8 உருண்டைகளை எடுத்து அரிசி மற்றும் உளுந்து மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தால், ஆரோக்கியமான பாசிப்பயறு உருண்டைகள் தயார். புரதச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

உளுந்து வடை

சத்தும் சுவையும் அதிகம். 10 மாத குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம். பெண்கள் சாப்பிட்டு வர இடும்பு எலும்புகளுக்கு நல்லது. உளுந்தில் கிடைக்கும் புரதச்சத்து மிகவும் நல்லது. உடல் எடை அதிகரிக்க உதவும். இஞ்சி சேர்ப்பதால் செரிமானத்துக்கும் உதவும். ilai adai Image Source : sharan India

இலை அடை

வாழை இலையில் மடித்து செய்யும் சத்தான உணவு இது. பச்சரிசி மாவு, தேங்காய்த் துருவல், வெல்லம், நெய், உப்பு, ஏலத்தூள் இருப்பதால் ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இருக்கிறது. வாழை இலையில் வைத்து மூடி, கட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைப்பதால் வாழை இலையில் உள்ள சத்துகளும் உணவில் கலந்துவிடும். இட்லியைவிட ஆரோக்கியத்தை அளிக்கும் இனிப்பான உணவு. இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்...

குழந்தைகளைப் பாதுகாக்க வழிகள்…

பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும். பட்டாசு ஏற்படுத்தும் மாசு சூழலையே கெடுக்கும். வீசிங், ஆஸ்துமா, குழந்தைகள், பெரியவர்கள், இதய நோயாளிகள் என அனைத்து மக்களுக்கும் கேடு. தீபம் ஏற்றி பாதுகாப்பாகத் தீபாவளியை கொண்டாடுங்கள். தீபம் + ஒளிதான் - தீபாவளி… பட்டாசு + ஒலி கிடையாது. தின்பண்டங்கள் சாப்பிட்டாலும் இஞ்சி மரப்பா, இஞ்சி லேகியம், தீபாவளி லேகியம் போன்றதை குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். செரிமானத்துக்கு உதவும். சிறு குழந்தைகளின் காதில் பஞ்சு, மப்ளர் கட்டி விடலாம். பெரிய குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் பெரியவர்கள் உடன் இருக்க வேண்டும். பட்டாசு காயங்கள் ஏதாவது ஏற்பட்டால் இன்க், ஆயின்மெட் எனத் தாங்களாகவே எதையும் தடவ வேண்டாம். மருத்துவரிடம் காண்பியுங்கள். தொங்கும் ஆடைகள், தளர்ந்த ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு கட்டாயம் செருப்பு அல்லது ஷூ அணிந்த பிறகே வெளியே செல்ல அனுமதியுங்கள். குழந்தைகள் பட்டாசுகளைத் தொட்டு இருந்தால், கைகளில் சோப் போட்டு நன்கு கழுவி விடுங்கள். கடையில் பலகாரங்களை வாங்குவதைவிட வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. இதையும் படிக்க: தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null