குழந்தைகளுக்கு தரக்கூடிய ஆரோக்கியமான 7 வகை டசர்ட் ரெசிபி…  (6 மாதம் - 1 வயது)

குழந்தைகளுக்கு தரக்கூடிய ஆரோக்கியமான 7 வகை டசர்ட் ரெசிபி… (6 மாதம் - 1 வயது)

இனிப்பு ரெசிபிகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இதை டசர்ட் என்றும் சொல்வார்கள். ஆனால், நாம் குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால், நிச்சயம் அவ்வகை உணவுகளை ஆரோக்கியமான முறையிலே செய்ய வேண்டி இருக்கும். ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எப்படி ரெசிபிகளை செய்யலாம் என இங்குப் பார்க்கலாம். பசும் பால், வெள்ளை சர்க்கரை இல்லாத ஹெல்தி டசர்ட் ரெசிபிகளைப் (healthy desert recipes) பற்றிப் பார்க்கலாம். ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஏற்றது.

ஹெல்தி டசர்ட்… இனிப்பு ரெசிபி…

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, டேட்ஸ் சிரப் சேர்க்கலாம்.

பசும் பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பால், தாய்ப்பால், ஃபார்முலா பால் சேர்க்கலாம்.

முழு நட்ஸ் பதிலாக நட்ஸ் பவுடரை சேர்க்கலாம்

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

#1. உலர்பழ பால்ஸ்

தேவை

பொடியாக அறிந்த பேரீச்சைகள் – அரை கப்

பொடியாக அறிந்த அத்திப்பழம் – ¼ கப்

நட்ஸ் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் – ¾ கப்

சூடான ஃபார்முலா பால் – ¼ கப்

செய்முறை

பேரீச்சையும் அத்தியையும் சூடான பாலில் ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.

பாலை வடிகட்டி ஊறவைத்தவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

ஓட்ஸை வாணலியில் போட்டு நன்கு வறுக்கவும்.

ஓட்ஸ் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், நட்ஸ் பவுடர், அரைத்து வைத்த பேரீச்சை அத்தி கூழ் எல்லாம் போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

தேவைப்பட்டால் மீதம் இருக்கும் ஃபார்முலா பால் சேர்த்துப் பிசையலாம்.

சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான உலர்பழ பால்ஸ் ரெடி.

8+ மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

இதையும் படிக்க : டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…

2. ஆப்பிள் ராகி அல்வா

desserts recipes

Image Source :  veg recipes of india

தேவை

இனிப்பான ஆப்பிள் – 1 பெரியது

ராகி மாவு – 3-4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – ¾ கப்

நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

ஆப்பிளைத் தோல் நீக்கி, நன்கு அரைத்து ஆப்பிள் ப்யூரி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் ராகி மாவு கொட்டி நன்கு கலக்கவும்.

கட்டிகள் சேராதபடி நன்கு கலந்துவிடவும். நெய் சேர்க்கலாம்.

ராகி மாவு கெட்டியாகும் வரை வேக விடவேண்டும்.

அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஆப்பிள் ப்யூரி கொட்டி கிளறவும். சுவையான ஆப்பிள் ராகி அல்வா ரெடி.

6 + மாத குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம். ஒரு வயது + குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் இதில் டேட்ஸ் சிரப், நட்ஸ் பவுடர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });


#3. பாதாம் லட்டு

toddler food recipes

தேவை

பாதாம் – 1 கப்

உலர்ந்த தேங்காய்த் துருவியது – 1 கப்

டேட்ஸ் சிரப் – 1 கப்

ஏலக்காய் – 2

பாதியாக நறுக்கிய பாதாம் – 4

செய்முறை

பாதாமை மணம் வரும் வரை வறுத்து ஓரமாக வைக்கவும்.

அதேபோல துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

பாதாம், தேங்காய்த் துருவல், ஏலக்காய் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

பாத்திரத்தில் இந்த பவுடரை கொட்டி, அதில் டேட்ஸ் சிரப் தேவையான அளவு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

லேசாக சூடும் இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்க சுலபமாக இருக்கும்.

சூடு ஆறிவிட்டால் லேசாக சூடு செய்து உருண்டைகளைப் பிடிக்கலாம்.

பிடித்த உருண்டைகளில் பாதியாக நறுக்கிய பாதாமை ஒட்ட வேண்டும்.

8-10 நாட்கள் வரை இதை சேமித்து வைக்கலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் (Carrot Dates Kheer) ரெசிபி

#4. ஃப்ரூட் டசர்ட்

தேவை

மசித்த வாழைப்பழம் – ½ கப்

துருவிய ஆப்பிள் – 2 டேபிள் ஸ்பூன்

டேட்ஸ் சிரப் – 1 டீஸ்பூன்

பனஞ்சர்க்கரை – 1 டீஸ்பூன்

செய்முறை

மசித்த வாழைப்பழத்தையும், துருவிய ஆப்பிளையும் நன்கு கலக்கவும்.

இதில் தேவையான டேட்ஸ் சிரப் சேர்த்துக் கலக்கவும்.

இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ச்சியானதும் பரிமாறலாம்.

8+மாத குழந்தைகளுக்கு, ஃப்ரிட்ஜில் வைக்காமல் தரலாம். 1 வயது + குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்துத் தரலாம்.

#5. மிக்ஸட் ஃப்ரூட் லஸ்ஸி

easy dessert recipes

Image Source :  youtube

தேவை

சீசனில் கிடைக்கின்ற 4 வகை பழங்கள் – தலா ¼ கப்

தயிர் – ½ கப்

டேட்ஸ் சிரப் – 2 ஸ்பூன்

செய்முறை

மிக்ஸியில் 4 வகை பழங்களை போட்டு, அதில் தயிர், டேட்ஸ் சிரப் கலந்து அரைக்கவும்.

அதைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

சுவையான, மிக்ஸட் ஃப்ரூட் லஸ்ஸி தயார்.

இதையும் படிக்க : 8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி

#6. அவல் யோகர்ட் பழக்கலவை

தேவை

அவல் – ¾ கப்

யோகர்ட் – 1 கப்

நறுக்கிய பழங்கள் – அரை கப்

பொடியாக அறிந்த நட்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

பனஞ்சர்க்கரை – 1 ஸ்பூன்

செய்முறை

5 நிமிடங்களுக்கு அவலை ஊற வைக்கவும்.

பழங்களை சிறிது சிறிதாக நறுக்கவும்.

தயிரையும் பனஞ்சர்க்கரையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.

இந்தத் தயிரில் அவல், நறுக்கிய பழங்கள், நட்ஸ் சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#7. வாழைப்பழ ஐஸ்கிரீம்

easy dessert ideas

Image Source : clean plates

தேவை

வாழைப்பழம் – ½ கப்

பட்டைத் தூள் – ½ டீஸ்பூன்

தாய்ப்பால் / ஃபார்முலா பால் – அரை கப்

செய்முறை

நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

பிறகு, வாழைப்பழத்துண்டுகள், பால், பட்டைத்தூள் கலந்து மிக்ஸியில் அடிக்கவும்.

ஒரு கப்பில் இந்த கூழை போட்டு குழந்தைக்கு சாப்பிட கொடுக்கலாம்.

சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்தும் கொடுக்கலாம்.

இதையும் படிக்க : 7 நாளைக்கு 7 வகையான காலை நேர ஈஸி, ஹெல்தி சமையல்… 1 வயது + கிட்ஸ் ரெசிபி…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null