குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்...

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்...

குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள் நிறையவே வந்துவிட்டன. ஆனால், ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளும் உள்ளன. அது தெரியாமல் இருப்பதால்தான் பிரச்னையே. ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பயமின்றி உங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன் நீங்கள் வளர்க்கலாம்.

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள் 

#1. கடலை மிட்டாய் (அல்லது) கடலை உருண்டை

peanut balls for kids

Image Source : Credit yummytummyaarthi.com

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

 • வெல்லம் சேர்க்கப்பட்ட கடலை உருண்டை அவ்வளவு நல்லது. இரும்புச் சத்து கிடைக்கும். நல்ல கொழுப்பு உடலுக்கு சேரும். ரத்தசோகை நீங்கும்.
 • கடலையை அவித்து சுண்டலாக்கி சாப்பிட்டாலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். நார்ச்சத்தும் அதிகம்.
 • குழம்பிலும் கடலையை போட்டு செய்யலாம். சில குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
 • நிலக்கிடலை உள்ள சத்துகளால் சருமம் மினுமினுப்பாகும். மலச்சிக்கல் தீரும்.

#2. கமர்கட்

 • கடைகளில் கமர்கட்டை இப்போது பார்க்க முடிவதில்லை. ஆனால், வீட்டிலே எளிமையாக செய்து விடலாம்.
 • முற்றிய தேங்காயைத் துருவி அதை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.
 • அதே வாணலில் பொடித்த வெல்லத்தைப் போட்டு பாகாக ஆக்க வேண்டும். பின்னர் ஏலப்பொடியை சேர்த்து கிண்டவும். சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். அவ்வளவுதான் கமர்கட் ரெடி.
 • நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இரும்புச்சத்து கிடைக்கும். ஆரோக்கியமான இனிப்பு நொறுக்கு தீனியாக இதைச் சாப்பிடலாம்.

#3. உலர்திராட்சை

raisins for kids

Image Source : Credit lamafoods.com

இதையும் படிக்க: குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ் உணவுகளுக்கான 21 ரூல்ஸ்…

 • கொட்டை இருக்கும் கறுப்பு உலர்திராட்சையே நல்லது. அதில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.
 • உலர்திராட்சைகளை ஊறவைத்து மசித்து, கூழாக்கி சிறு குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர ஊட்டச்சத்துகள் கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
 • பெரிய குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுக்கலாம். 20 நம்பர் என உலர்திராட்சையை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள்.

#4. பேரீச்சை

 • மிகவும் சத்தான உணவுகளில் பேரீச்சையும் ஒன்று. இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, விட்டமின்கள் நிறைந்துள்ளன.
 • 6 மாத குழந்தைக்கு கூட முன்னாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த பேரீச்சையை மசித்துத் தரலாம்.
 • பெரிய குழந்தைகளுக்கு தினமும் 3-4 கொடுத்து வர, அவர்களின் உடல்நலம் மேம்படும்.

#5. நெய்

healthy food for toddlers

Image Source : Credit purewow.com

இதையும் படிக்க: குழந்தைக்கு எந்த மாதத்திலிருந்து சிறுதானியங்களைத் தரலாம்?

 • நெய்யை எப்போதும் உருக்கிதான் சாப்பிட வேண்டும்.
 • சுடு சாதத்தில், தோசை போன்ற உணவுகளில் நெய் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்து வருவது நல்லது.
 • கல்லீரல் பலப்படும். உடலுக்கு குளிர்ச்சியாகும். ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க உதவும்.
 • நல்ல கொழுப்பு உடலில் சேர்ந்து சருமத்துக்குப் பாதுகாப்பளிக்கும்.

#6. உளுந்து லட்டு

 • உளுந்தை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் நெய், நாட்டுச் சர்க்கரை, சிறிது ஏலக்காய்ப் பொடித்து போட்டு செய்யப்படும் இந்த உளுந்து லட்டு. ஆரோக்கிய லட்டு எனலாம்.
 • குழந்தைகளுக்கு தேவையான புரதத்தை அள்ளித் தரும்.
 • குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். எடை அதிகரிக்க உதவும்.
 • எலும்புகள் உறுதி பெறும். பெண் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது.
 • ஊட்டச்சத்துக் குறைப்பாடை நீக்கும்.

#7. கீரை – மல்டி டிஷ்

healthy food for babies

Image Source : Credit bbcgoodfood.com

இதையும் படிக்க: 6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்…

 • கீரையை சாப்பிட வைக்க பெரும்பாடு படவேண்டியதிருக்கும். ஒருநாள் துவரப்பருப்புடன் கீரைப் போட்டு சாம்பார் வைப்பது, இன்னொரு நாள் பாசி பருப்புடன் கீரை சேர்த்து சாம்பார் வைப்பது இப்படி போன்ற முயற்சியால் குழந்தைக்கு கீரையின் சத்துகள் சேரும்.
 • கீரை கூட்டு, நெய் கொஞ்சம் சேர்த்து, தேங்காய்த் துருவிப் போட்டு சுவையாக கொடுத்து வர குழந்தைகளுக்கு சிறந்த உணவு.
 • கீரை சூப் வைத்தும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் நீங்கள் கீரையை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
 • கீரை கட்லெட் கூட சிறந்த வழி.

#8. பாசிப்பயறு கேரட் சாலட்

 • கேரட்டை துருவிக் கொள்ளுங்கள். பாசிப்பயறை முளைக்கட்டி வைத்துக் கொள்ளலாம் அல்லது 8 மணி நேரம் ஊறவைத்த பாசிப்பயறை கேரட்டுடன் சேர்த்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து, லேசாக மிளகுத் தூள் தூவி குழந்தைக்கு கொடுக்கலாம்.
 • பல்வேறு விதமான உயிர்சத்துகள் கிடைக்கும். வயிற்றுக்கு நல்லது.
 • உடல் குளுமையாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும்.
 • உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். உடல் பலமாகும்.

#9. பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி

healthy snacks for kids

Image Source : Credit bbcgoodfood.com

இதையும் படிக்க: பொன்னியைவிட பல மடங்கு சத்துகள் உள்ள 10 பாரம்பர்ய அரிசி வகைகள்… குழந்தைக்கு தருவது எப்படி?

 • பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி இந்த நான்கிலும் தலா 3 என எடுத்து தினமும் உங்கள் குழந்தைக்கு கொடுத்து வாருங்கள்.
 • மூளையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
 • மூளை புத்துணர்வு கிடைக்கும். படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
 • விட்டமின் இ சத்து கிடைக்கும்.
 • நல்ல கொழுப்பு உடலில் சேர்ந்து உடல் உறுதியாகும்.
 • சருமம் அழகாகும்.

#10. ஸ்மூத்தி

 • பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்துடன் யோகர்ட், ஆப்பிளுடன் வாழைப்பழம் மற்றும் யோகர்ட், அவகேகோவுடன் யோகர்ட் இப்படி பழங்களுடன் யோகர்ட் சேர்த்து ஸ்மூத்தி செய்து கொடுக்கலாம்.
 • இந்த வெயில் காலத்துக்கு மிக சிறந்த பானமாக இருக்கும்.
 • உடலுக்கு நீர்ச்சத்தும் கிடைக்கும். உயிர்ச்சத்துகளும் கிடைக்கும்.
 • குழந்தைகளுக்கும் பிடித்தமான உணவாக மாறும்.
 • யோகர்ட்டில் உள்ள நல்ல பாக்டீரியா குழந்தைகளின் வயிற்றை ஆரோக்கியமாகப் பராமரிக்கும்.

#11. கட் ஃப்ரூட்ஸ்

healthy foods for kids

Image Source : Credit netmums.com

இதையும் படிக்க: குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

 • அழகான வடிவத்தில் பழங்களை நறுக்கி அதில் பாப் ஸ்டிக் சொருகி குழந்தைகளிடம் கொடுக்கலாம்.
 • அல்லது அதை ஃபிங்கர் ஃபுட்ஸாக சாப்பிடுவார்கள். கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று ஆக்கியும் தரலாம்.
 • ஆப்பிள், வாழை, மாதுளை, அன்னாசி, கிவி, மாம்பழம் ஆகியவற்றை நறுக்கி அதில் திராட்சைகளை சேர்த்து லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து, லேசாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை மேலே தூவி கொடுக்கலாம்.
 • சத்தான உணவு சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • விட்டமின்கள் கிடைக்கும். பார்வை திறன் மேம்படும்.

#12. அவல் உணவு

 • எப்போதும் சிவப்பரிசி அவலைப் பயன்படுத்த வேண்டும். வெள்ளை அவலை தவிர்க்கலாம்.
 • சிவப்பரிசி அவலில் ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. சிறிது நேரம் ஊற வைத்த அவலில் நாட்டுச் சர்க்கரைப் போட்டு பசும்பால் ஊற்றி குழந்தைக்கு கொடுக்கலாம்.
 • அவல் பாயாசம் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இருக்கும்.
 • அவல், துருவிய தேங்காய், வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, பொடித்த நட்ஸ் போட்டு லேசாக பசும் பால் ஊற்றி குழந்தைக்கு தரலாம்.
 • பலத்தைத் தரும் உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 • ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

#13. முட்டை

healthy food for kids

Image Source : livestrong.com

  • ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முட்டைத் தரலாம்.
  • உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
  • அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
  • உடலுக்கு போஷாக்கைத் தரும்.
  • அவித்த முட்டை மிகவும் நல்லது. முட்டை பொடிமாஸ் கூட செய்து கொடுக்கலாம்.
 • சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகுத் தூள் சேர்த்து முட்டை ஆம்லெட் செய்து தரலாம்.

குழந்தைகளுக்கு வீட்டில் செய்ய கூடிய உணவுகள் எப்போதும் பாதுகாப்பானது… ஆரோக்கியமானதும்கூட… நமக்கு தெரிந்த நாம் சாப்பிட்ட வந்த உணவுகள் குழந்தைகளுக்கு நல்லது. புதிது புதிதாக நாம் அறியாத அந்நிய உணவுகளைத் தவிர்க்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null