6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்... எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும்?

6 + மாத குழந்தைகளுக்கான சத்தான உணவு பட்டியல்... எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும்?

குழந்தைக்கு தாய்ப்பால், புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். இதைத் தவிர வேறு என்னென்ன உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது எனப் பார்க்கலாம். குழந்தை வளர வளர என்னென்ன உணவுகளை அறிமுகம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.

6 மாத தொடக்கத்தில்

பருப்பு வேகவைத்த தண்ணீர் காய்கறி வேகவைத்த தண்ணீர் ஆகியவற்றைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.

6 மாத குழந்தைகள் உணவு

காய்கறிகள், பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றை நன்கு வேகவைத்து மசித்து குழந்தைக்கு ஊட்டலாம். உப்பு, காரம் சேர்க்காமல் தருவது நல்லது. கொடுக்கும் உணவு இளஞ்சூடாக இருப்பதே நல்லது. 6+ மாத குழந்தைகளுக்கானப் பழங்களின் மசியல் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம், அவகேடோ, முலாம் பழம் ஆகியவற்றை நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆப்பிளை வேகவைத்து மசித்துத் தருவது நல்லது.

கஞ்சி உணவுகள்

porridge for babies Image Source : great british chef அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி, சம்பா கோதுமை கஞ்சி, சிறுதானிய கஞ்சி வகைகள், ராகி கஞ்சி ஆகியவற்றை செய்து கொடுக்கலாம். இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

பருப்பு கூழ்

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை வேகவைத்து மசித்து சிறிது நீர் கலந்து கொடுக்கலாம். ஏதேனும் ஒரு வகை பருப்பு ஒருநாள் என மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு 30 கிராம் எடுத்து, அதனுடன் தண்ணீர் கலந்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்து நீர்த்த தன்மையில் குழந்தைக்கு கொடுக்கலாம்.

மசித்த காய்கறிகள்

பச்சை காய்கறிகளை வேகவைத்து மசித்துத் தரலாம். கீரைகளை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். இதனுடன் சிறிது பருப்பையும் சேர்த்துக் கொள்வது நல்லது. கேரட், உருளை, கீரை ஆகியவற்றை பருப்புடனோ காய்கறிகளுடனோ கஞ்சியுடனோ சேர்த்து மசித்துக் கொடுத்தல் நல்லது.

இட்லி சிறந்த உணவு

வீட்டிலே இட்லியைத் தயாரித்து சாம்பாருடன் குழந்தைக்கு ஊட்ட மிகவும் நல்லது. காலை, இரவு உணவாக இட்லியைத் தருவது நல்லது. ராகி இட்லி, திணை இட்லிகூட செய்து கொடுக்கலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

இடியாப்பம்

idiyappam for toddlers Image Source : Archanas Kitchen குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. செரிமானமாவது எளிது. இட்லி, இடியாப்பம் ஆகியவை குழந்தைக்கான சிறந்த உணவுகளில் முதலிடம்.

ஆவியில் வேகவைத்த தோசை

தோசை மாவை தவாவில் கொஞ்சம் தடிமனாக ஊற்றி, கொஞ்சமாக எண்ணெய் விட்டு மூடிபோட்டு வேக வைக்க வேண்டும். இதைக் குழந்தைகளுக்கு தரலாம்.

சூப் வகைகள்

விதவிதமான சூப் வகைகளை வீட்டிலே செய்யலாம். காய்கறி, பருப்பு, கீரை சூப், சிறுதானிய சூப் எனப் பல்வேறு வகை சூப்களை செய்யலாம். இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்... 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…

8 மாத குழந்தைகள்

ரவை உணவுகள்

ரவை உணவுகளை அறிமுகம் செய்யலாம். ரவை உப்புமா, கிச்சடி, ரவை இட்லி, ரவை தோசை, ரவை கஞ்சி,ரவையால் செய்த கீர் ஆகியவற்றை குழந்தைக்கு செய்து தரலாம்.

ரொட்டி உணவுகள்

சப்பாத்தியை சிறிய துண்டாக்கி ஃபார்முலா பாலில் ஊறவைத்து மசித்துத் தரலாம். பருப்பு கூழில் சப்பாத்தியை ஊற வைத்து மசித்துக் கொடுக்கலாம். காய்கறி மசியலுடன் சப்பாத்தியை மசித்துக் கொடுக்கலாம்

அசைவ உணவு

முட்டையின் மஞ்சள் கருவை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விட்டமின் ஏ, டி ஆகியவை உள்ளன. தேவையான கொழுப்பு சத்து, இரும்பு சத்து நிறைந்துள்ளன.

பருப்பு சாதம்

சாதத்தை மசித்து வேகவைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து மசித்துக் குழந்தைக்கு ஊட்டலாம்.

1 வயது குழந்தைகள்

egg for kids Image Source : livestrong

வெள்ளை முட்டை

முட்டையின் வெள்ளை பாகத்தை வேகவைத்துக் கொடுக்கலாம்.

அவல் உணவுகள்

பல்வேறு வகையான சத்துகள் கொண்டது. அவலை அப்படியே தராமல் தண்ணீரில் ஊறவைத்து மிருதுவாக்கி கொடுக்க வேண்டும். அவலை ஃபார்முலா பாலில் ஊறவைத்துக் கொடுத்தல் நல்லது. அவல் உப்புமா, அவல் இட்லி, அவல் தோசை, அவல் கிச்சடி, அவல் பொங்கல் செய்து ஊட்டலாம்.

2 வயது குழந்தைகள்

அடை உணவுகள்

பருப்பு, தானியங்கள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட அடைகளை செய்து கொடுக்கலாம் கீரை அடை, பருப்பு அடை, பச்சைப்பயறு அடை, சிறுதானிய அடை என செய்து தரலாம். இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி

ஊத்தப்பம்

துருவிய கேரட், வேக வைத்த காய்கறிகள், புதினா, கொத்தமல்லி சேர்த்த விதவிதமான ஊத்தாப்ப வகைகளை குழந்தைகளுக்கு செய்து தரலாம். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null