கலர் கலர் சாலட் தரும் கம்ப்ளீட் சத்துகள்... புதிய சுவையில் புதிய ரெசிபிகள்...

கலர் கலர் சாலட் தரும் கம்ப்ளீட் சத்துகள்... புதிய சுவையில் புதிய ரெசிபிகள்...

சாலட் என்றால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. ஏன் பெரியவர்களுக்குகூட பிடிக்காது. ஆனால், சாலட் சத்துகள் நிறைந்தது. உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் இந்த வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று சாலட். இந்த சாலட்டை சுவையாக, கலர்ஃபுல்லாக  செய்து சாப்பிட்டால் அடம் பிடிக்கும் குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

புதுமையான, சுவையான முறையில் சாலட் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

5 ஹெல்தி டேஸ்டி சாலட் 

#1. பீட்ரூட் கேரட் மாங்காய் சாலட்

beetroot salad

தேவையானவை

 • துருவிய பீட்ரூட் – 1/2 கப்
 • துருவிய கேரட் – ½ கப்
 • மாங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
 • தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
 • ஊறவைத்த நிலக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
 • எலுமிச்சை ஜூஸ் – பிழிவதற்காக
 • மிளகுத் தூள் – ¼ டீஸ்பூன்
 • இந்துப்பு – சிறிதளவு

தாளிக்க

 • கடுகு, உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
 • கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

 • அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய், மாங்காய் போட்டு கிளறவும்.
 • பின், இதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.
 • மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.
 • தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.
 • இறுதியாக. எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

பலன்கள்

 • ரத்தம் உற்பத்தியாக உதவும்.
 • உயிர்சத்துகள் நிறைந்துள்ளன.
 • விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • பார்வைத் திறன் மேம்படும்.
 • மலச்சிக்கல் நீங்கும்.
 • பல் முளைத்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 உணவுகள்

#2. காய்கறி, பயறு சாலட்

cucumber salad

தேவையானவை

 • பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – 1 கப்
 • வேகவைத்த தட்டப்பயறு அல்லது கொண்டைக்கடலை – 50 கிராம்
 • தக்காளி – 1
 • பச்சை குடமிளகாய் – 1
 • தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
 • இந்துப்பு, மிளகுத்தூள் – சிறிதளவு
 • எலுமிச்சை சாறு – தேவையான அளவு
 • நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

 • தட்டப்பயறு அல்லது கொண்டைக்கடலை வேகவைத்துக் கொள்ளவும். பயறு நன்றாக ஆற வேண்டும்.
 • வெள்ளரிக்காய், தக்காளி, குடமிளகாய் பொடியாக அறிந்து கொள்ளவும்.
 • தட்டப்பயறைக் காய்கறிகளுடன் கலக்க வேண்டும்.
 • உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.

பலன்கள்

 • உயிர்ச்சத்துகள் கிடைக்கும்.
 • சருமத்துக்கு மிகவும் நல்லது.
 • வெயிலுக்கு ஏற்ற சாலட்.
 • நீர்ச்சத்தை உடலில் சேர்க்கும்.
 • தொண்டை வறட்சியை நீக்கும்.
 • புத்துணர்வு கிடைக்கும்.
 • கல்லீரலுக்கு நல்லது.
 • தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு நல்லது.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

#3. கிரீன் சாலட்

green salad

தேவையானவை

 • பாலக் கீரை – 1 கப்
 • நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1
 • வேகவைத்த கொண்டைக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
 • வேகவைத்த பேபி கார்ன் – 6 துண்டுகள்
 • இந்துப்பு, மிளகுத்தூள் – சிறிதளவு
 • எலுமிச்சை சாறு – பிழிய

செய்முறை

 • சுடு தண்ணீரில் பாலக் கீரை இலைகளை 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.
 • பெரிதாக பாலக் இலைகளை அறிய வேண்டும். இதில் தக்காளி சேர்க்கவும்.
 • இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும்.
 • மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • இந்துப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

பலன்கள்

 • ரத்தசோகை நீங்கும்.
 • முடி வளர்ச்சிக்கு நல்லது.
 • பெருங்குடல், சிறுகுடலுக்கு நல்லது.
 • ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 • நீர்ச்சத்துகள், நார்ச்சத்துகள் உடலில் சேரும்.
 • வயிற்றுக்கு நல்லது.

#4. நேந்திரப்பழ சாலட்

banana salad

Image Source : wikihow.com

தேவையானவை

 • நேந்திரம் பழம் – 1
 • தோல் சீவிய ஆப்பிள் – 1
 • தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
 • பொடித்த நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
 • முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடித்தது – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

 • வட்டமாக நேந்திரப் பழத்தை அறியவும்.
 • ஆப்பிளை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
 • இது இரண்டையும் ஒன்றாக சேர்த்து, அதில் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 • இந்தப் பழ சாலட்டில் பொடித்த நட்ஸ் தூவிக் கொள்ளவும்.
 • இறுதியாக, பொடித்த நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாகக் கிளறவும்.
 • 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டால் நாட்டுச் சர்க்கரை கரைந்திருக்கும்.
 • இப்போது, இதை எடுத்து சாப்பிடலாம்.

பலன்கள்

 • பொட்டாசியம், மல்டிவிட்டமின்கள் நிறைந்துள்ளன.
 • மூளை வளர்ச்சிக்கு நல்லது.
 • எடை அதிகரிக்க உதவும்.
 • ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
 • குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
 • குழந்தைகளின் வயிறு நிறையும்.

#5. ஃப்ரூட்ஸ் சாலட்

fruits salad

Image Source : chabad.org

தேவையானவை

 • தோல் சீவிய ஆப்பிள் – 1
 • வாழைப்பழம் – 1
 • சதுரமாக வெட்டிய அன்னாசி – ½ கப்
 • உடைத்த முந்திரி – 2 டீஸ்பூன்
 • மாதுளை – 2 டேபிள் ஸ்பூன்
 • பேரீச்சை – விதை நீக்கியது 4
 • மில்க் மெய்ட் – 2 டீஸ்பூன்
 • தேன் – சிறிதளவு

செய்முறை

 • அனைத்துப் பழங்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
 • அதில் உடைத்த முந்திரி, பேரீச்சையை சேர்க்கவும்.
 • மில்க் மெய்ட் சேர்த்துக் கலக்கவும்.
 • தேன் ஊற்றிப் பரிமாறவும்.

பலன்கள்

 • விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.
 • உடலில் உள்ள அமிலத்தன்மை நீங்கும்.
 • உடல் குளிர்ச்சியாகும்.
 • வெயிலுக்கு ஏற்ற சாலட்.
 • பல் முளைத்த குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றது.

இதையும் படிக்க : 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் ரெசிபி வகைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null