ஒவ்வொரு பருவத்திலும் சரியான எடை, உயரம், மன முதிர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவை சரியாக நடக்க வேண்டும். இது எல்லாக் குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது முக்கியம். (Height, Weight and Growth Chart for babies)
இதற்கான சரியான அளவுகோல்கள் உள்ளன. அளவுகோலின்படி இல்லாமல் இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு இருக்கலாம். அதை சரிசெய்துகொள்ள இந்தப் பதிவு உதவும்.
0 - 4 வயது குழந்தைகளின் வளர்ச்சியும் அட்டவணையும்...
பிறந்த குழந்தை
- புதிய சூழ்நிலையால் குழந்தையின் எடை குறையும். கொஞ்சமான எடையை இழப்பார்கள். இது இயல்பு.
- அதன் பிறகு அவர்கள் பெரியவர்களாவதற்காக வளர வளர வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
குழந்தைகளுக்கு வளர்ச்சி எதில் எல்லாம் இருக்க வேண்டும்?
- உடல் வளர்ச்சி
- மன வளர்ச்சி
- புரிந்து கொள்ளும் திறன்
- சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப இருக்கும் வளர்ச்சி
- உணர்வு தொடர்பான முதிர்ச்சி ஆகியவை இருக்க வேண்டும்.
குழந்தையின் எடை
- குழந்தை பிறந்தவுடன் எடையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- 6 மாதத்துக்கு ஒரு முறை குழந்தையின் எடையைப் பார்க்கலாம்.
- 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எடையைப் பார்க்கலாம்.
இதையும் படிக்க : குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?
குழந்தையின் உயரம்
- குழந்தைகள் பிறக்கும்போது சராசரியாக 50 செ.மீ உயரம் இருப்பார்கள்.
- வளர வளர குழந்தையின் உயரமும் அதிகரித்துக் கொண்டே போகும்.
இதையும் படிக்க : குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் 15 உணவுகள்
குழந்தையின் தலை - சுற்றளவு
- குழந்தையின் தலையின் சுற்றளவில் மாறுதல்கள் தொடர்ச்சியாக நடக்கும்.
- பிறக்கும்போது குழந்தையின் தலை சராசரியாக 35 செ.மீ இருக்கும்.
பற்கள் - வளர்ச்சி
- குழந்தை பிறப்பதற்கு முன்னரே அவர்களின் ஈறுகளுக்கு அடியில் பல் உருவாக ஆரம்பித்துவிடும்.
- 6 - 7 மாதம் - மையப்பகுதியில் வெட்டு பற்கள் உருவாகும்.
- 8 மாத + குழந்தைகள் - மேல் தாடையில் கீழ் தாடையில் கோரைப்பற்கள் உருவாகும்.
- 2 வயது - கடவாய் பற்கள் உருவாகும்.
- 3 வயதுக்கு முன்பு - 20 பற்கள் தோன்றியிருக்கலாம்.
- இவையெல்லாம் பால் பற்கள்தான். இவை விழுந்து புதிதாக முளைக்கும். இவை தற்காலிகமான பற்கள்.
- பெற்றோர்கள் இந்த பால் பற்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்க கூடாது.
- குழந்தைகள் உணவைக் கடித்து சாப்பிடுவதற்கு இந்த பால் பற்கள் உதவுகின்றன. எனவே, கவனம் தேவை.
- சுத்தமாக, சரியாக பற்களை பராமரிக்க வேண்டும்.
- முகப்பொலிவை, அழகை தருவதும் பால்பற்கள்தான்.
- பால் பற்களை சரியாக பராமரித்தால், பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்கள் சரியானதாக இருக்கும்.
இதையும் படிக்க : குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்
குழந்தையின் மைல்கற்கள் - வளர்ச்சி சரியா? எந்த வயதில் எதை செய்ய வேண்டும்?
1-வது மாதம் - தலையைத் தூக்குதல்
2-வது மாதம் - சிரித்தல், புன்னகைத்தல்
3-வது மாதம் - பொருட்களை பிடிக்க முயற்சி செய்தல்
4-வது மாதம் - பொருட்களை பிடித்தல்
5-வது மாதம் - பொருட்களை கெட்டியாக பிடித்தல், சரியாக உட்காருதல்
6-வது மாதம் - அசையும் பொருட்களை பிடித்தல்
Image Source : Baby Gooroo
7-வது மாதம் - உதவி இல்லாமல் தானே உட்காருதல்
8-வது மாதம் - பிறர் உதவியுடன் நிற்க பழகுவது
9-வது மாதம் - பொருட்களை பிடித்து நின்று கொண்டு இருப்பது
10-வது மாதம் - தரையில் தவழுதல்
11-வது மாதம் - எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது
12-வது மாதம் - எதையாவது பிடித்துக்கொண்டு தரையில் இருந்து எழுந்து நிற்பது.
ஒரு வயது ஒரு மாதம் - படி ஏறுதல், 2-3 வார்த்தைகளை பேசுதல்
ஒரு வயது 2-வது மாதம் - உதவி இல்லாமலே நிற்பது
ஒரு வயது 3-வது மாதம் - பிறர் உதவி இல்லாமல் தானே நடப்பது
ஒரு வயது, 9 மாதம் முதல் 2 வயது வரை
- சின்ன சின்ன வார்த்தைகளை வைத்து வாக்கியமாக பேசுதல்.
- பிளாக்ஸில் (செவ்வக கட்டங்கள்) விளையாடுதல்
இதையும் படிக்க : குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் - ஸ்மூத்தி வகைகள்…
2 வயது
- ஆடைகளை தானே போடுவது
- ஷூ போடுவது
- சாக்ஸ் போடுவது
- சட்டை போடுவது
- பிளாக்ஸில் (கட்டங்களில்) விளையாடுவது
3 வயது
- பிளாக்ஸில் விளையாட்டில் முன்னேற்றம் இருக்கும்.
- தன் பெயரை சொல்லுதல்.
- தான் ஆணா பெண்ணா எனக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்.
- குதித்து விளையாடுதல்.
- 3 சக்கர சைக்கிள்களில் விளையாட ஆரம்பித்தல்.
Image Source : Healthline
3 - 4 வயதில்
- நன்றாக குழந்தைகள் பேசும்.
- உணவை எடுத்து தானே சாப்பிட ஆரம்பிக்கும்.
- பல வார்த்தைகள் குழந்தைகளுக்கு தெரிந்து இருக்கும்.
- தன் தேவை என்ன எனக் குழந்தைகளுக்கு சொல்ல தெரியும்.
- அடிப்படையான மொழி வார்த்தைகளை, எண்களை சொல்லி கொடுத்தால் குழந்தைக்கு மனப்பாடமாக சொல்ல தெரியும்.
- இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து குழந்தைகளின் வளர்ச்சியில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
- ஏதாவது சில வளர்ச்சிகளில் பிரச்னை இருந்தால் தொடக்கத்திலே கண்டுபிடித்து, சிகிச்சை செய்வது நல்லது.
- குழந்தையின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறதா என ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது.
Source : குழந்தைகளுக்கான உணவுகளும் - கொடுக்கும் முறைகளும்
இதையும் படிக்க : வெயிலுக்கு இதமான 5 ஹெல்தி, டேஸ்டி சாலட்…
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null