கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர்.
குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும். சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும்.
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது அல்லவா… அதை நிறுத்தச் சொல்லி குழந்தைக்குப் பழக்கப்படுத்துவது நல்லது.
ஈறுகளின் உள்ளே பல்லின் வேர்ப்பகுதியும், ஈறும் சேரும் இடங்களில் ஏற்படக்கூடிய திசுக்களின் பிரிவாக்கம் மற்றும் பெருக்கமே குழந்தைகளுக்கு விரல் சூப்ப தூண்டுகிறது.
ஈறுகளில் தோண்டுகின்ற ஒரு வித ‘நம நம’ உணர்ச்சியைத் தொடர்ந்து, பெரும்பாலான குழந்தைகள் கட்டைவிரலின் வாயின் உள்ளே விட்டுக்கொண்டு, விரல்களை ஈறுகளால் அரைக்கத் தொடங்குகின்றனர்.
இதைத் தொடர்ந்து உதட்டின் இடைவெளி வழியாக வெளியாகும் எச்சிலை உறிஞ்சுகின்றன.
இது குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிப்பது போன்ற உணர்வு, புட்டிப்பால் குடிப்பது போன்ற உணர்வைத் தருவதால் இந்தப் பழக்கத்தை குழந்தைகள் தொடர்ந்து செய்கின்றன.
பெரும்பாலான குழந்தைகள் 3 அல்லது 4-வது மாதத்தில் விரல் சூப்பும் பழக்கத்தைத் தொடங்குகின்றன.
இந்த 3-4 மாதங்களில் விரல் சூப்ப தோன்றினால், பல் வளர்ச்சி தூண்டுகிறதால் இப்படி குழந்தைகள் கை சூப்புகின்றன எனப் புரிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறந்து 6 அல்லது 7 மாதத்திற்குள் கை சூப்பும் பழக்கத்தைத் தானாகவே விட்டு விடுகின்றன.
7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க: குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றலாமா?
Image Source : Credit redorbit.com
குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு.
இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.
இதையும் படிக்க: பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா?
வாயில் இருக்கும் கையை மெதுவாக எடுத்து விடுங்கள்.
கை மெதுவாக எடுத்த உடனே வந்தால், குழந்தையின் கை சூப்பும் பழக்கத்தை உங்களது முயற்சியால் விரைவில் நிறுத்திவிடலாம்.
இது இப்போதுதான் தொடங்கிய பழக்கம் என்பதற்கான அறிகுறி.
கொஞ்சம் பெரிய குழந்தைகள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வைக்க நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியாத இருக்கும்.
Image Source : Credit blog.appystore.in
2 வயது ஆன பிறகு குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை ஓரளவுக்கு நிறுத்திவிடுவர்.
ஆனால் 2 வயது மேலேயும் கை சூப்பிக் கொண்டிருந்தால், அவசியம் நீங்கள் அவர்களை நீங்கள் கவனித்தாக வேண்டும்.
ஏனெனில் 4 வயதுக்கு மேல் கை சூப்பிக் கொண்டிருந்தால் பற்கள் வளருவதில் பிரச்னை வரும்.
இதையும் படிக்க: அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?
#1. எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.
#2. பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.
#3. போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.
#4. கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.
#5. கை சூப்பும் குழந்தைகளிடம் அதிக நேரம் பெற்றோர், பாதுகாவலர் செலவழிக்க வேண்டும்.
#6. கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
#7. தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.
#8. கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.
இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…
Image Source : Credit mekheochamcon.com
#9. கை சூப்பாமல் இருந்ததையும் பாராட்ட வேண்டும். அதாவது குழந்தைகள் விரல் சூப்பாத நேரத்தில் பாராட்டுங்கள்.
#10. தட்டிக் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், கட்டி அணைத்தல், பொம்மைகளை வாங்கித் தருதல், பரிசுகளைத் தருதல் இப்படி பாராட்டினால் குழந்தைகள் விரைவில் கை சூப்புவதை நிறுத்தும்.
#11. விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.
#12. விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.
#13. குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.
#14. எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.
#15. கை சூப்பும் குழந்தைகள் பெற்றோரால், பெரியவர்களால் திட்டப்படும் போது தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர்.
#16. குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.
#17. தாய்ப்பால், புட்டிப்பால் நிறுத்தியவுடன் சில குழந்தைகள் விரல் சூப்ப தொடங்குவார்கள். அவர்களுக்கு நீங்கள் பொறுமையாக எடுத்து சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
#18. எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
Source : ஆயூஷ் குழந்தைகள்
இதையும் படிக்க: நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, தகவல்கள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null