குழந்தையின் சருமத்தை மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றும் குளியல் பொடி

குழந்தையின் சருமத்தை மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றும் குளியல் பொடி

கறுப்போ மாநிறமோ… எல்லாமே அழகுதான். குழந்தைகள் பிறந்தவுடன் சிவப்பாக இருக்கின்றன. பின் வளர வளர தன் தாய், தந்தையின் நிறத்துக்கு வந்து விடுகின்றன. மாநிறம் என்பது அழகான நிறம். நிறத்தில் எந்த அழகும் இல்லை. மனதில் மட்டுமே அழகு. ஆனால், பலரும் குழந்தை கறுப்பாக இருக்கிறது என என்னென்னமோ காஸ்மெட்டிக்ஸ் வாங்கி குளிக்க வைக்கிறார்கள். இது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.  இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட (Herbal Bath Powder) நமக்கு கைக் கொடுக்கும்.

இயற்கையான முறையில் சருமம் பளிச்சிட, அழகாக, ஆரோக்கியமாக இருக்க வழி (Natural way to remove darkness) இருக்கிறது. அந்த வழிமுறையைப் பற்றிப் பார்க்கலாம்.

குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக்கும் மேஜிக் பொடி

தேவையானவை

  • பச்சைப் பயறு – 1/4 கிலோ
  • முட்டையின் வெள்ளைக் கரு – 4
  • ரோஜா – 8
  • கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
  • பூலாங்கிழங்கு – 50 கிராம்

green gram for babies skin

செய்முறை

பச்சைப்பயறில் உள்ள கல், மண் நீக்கி விடுங்கள்.

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.

பச்சைப்பயறு இருக்கும் பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை ஒரு பெரிய பிளேட்டில் வைத்துக் காய வையுங்கள். பரவலாக பரப்பி வையுங்கள்.

தினமும் ஒரு நாள் எடுத்து லேசாக கிளறி பரப்பி விடுங்கள்.

நான்கு நாட்கள் வீட்டிலே வைத்துக் காய வைக்கலாம்.

அவரவர் ஊரின் வானிலைக்கேற்ப 4-6 நாட்களுக்குள் நன்றாக காய்ந்துவிடும்.

நான்கு நாள் கழித்து நன்றாக காய்ந்ததும் கட்டி, கட்டியாக இருக்கும். அதை கைகளாலே உதிர்த்துவிட முடியும்.

இதனுடன் கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இதை அரைக்க மெஷின் வைத்திருக்கும் கடைகளில் கொடுத்தும் அரைக்கலாம் அல்லது வீட்டிலும் அரைக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளைக் குளிப்பாட்டி (Newborn Baby Bath) பராமரிப்பது எப்படி?

 

wild turmeric for babies skin

எப்படி பயன்படுத்துவது?

பிறந்த குழந்தை முதல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பூசி வந்தாலே சருமம் ஆரோக்கியமாகி, பிரகாசமாகவும் மாறும்.

பிறந்த குழந்தைக்கு, பெரியவர்களுக்கு என அவரவருக்கு ஏற்ற அளவில் எடுத்து அதில் சிறிது தண்ணீர்விட்டு குழைத்து பூசி குளிக்கலாம்.

சிலர் சோப் போட்டு குளிக்கும் பழக்கம் கொண்டவர்கள், சோப் போட்டு குளித்த பிறகு இதை பூசி குளித்து விடலாம். அதன் பிறகு சோப் போட கூடாது.

முட்டை சேர்த்திருப்பதால் துர்நாற்றம் வீசுமோ என எண்ணம் வேண்டாம். முட்டையின் வெள்ளைகரு துர்நாற்றம் வீசாது.

காயவைத்து, கூடுதலாக சில நல்ல பொருட்களை சேர்ப்பதால் எந்த வித கெட்ட வாசனையும் வராது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி? (Homemade Babies Bath Powder)

herbal bath powder paste for babies

Image Source : My Healthy Kiddoo

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி? (Homemade Baby Shampoo)

பலன்கள்

எந்த சரும நோய்களும் வராது.

சருமம் கறுத்து போகாது.

சருமத்தில் துர்நாற்றம் வீசாது.

நல்ல வாசனையைக் கொடுக்கும்.

ஈரப்பதம் பராமரிக்கப்படும்.

சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குழந்தை பிறந்த நிறத்தைவிட சற்று கூடுதலான சிவப்பழகுடன் இருக்கும்.

சிவப்பழகு என்பது சருமத்தின் அழகை சொல்வது, சருமம் சீராக இருக்கும்.

கறுப்பு திட்டுக்கள் நீங்கிவிடும்.

சூரிய கதிர்களால் சருமம் டேன் ஆவது தடுக்கப்படும்.

டேன் ஆன சருமத்தில் இதைப் பூசினாலும் நாளடைவில் டேன் நீங்கும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி? (Homemade Oatsmeal soap for babies)

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null