சர்க்கரை நோய் முழுவதும் குணமாக என்ன செய்ய வேண்டும்?!

சர்க்கரை நோய் முழுவதும் குணமாக என்ன செய்ய வேண்டும்?!

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்னும் இந்த வியாதி பலரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. உலக சுகாதார மையம் உலகிலேயே அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியர்களே ஆவர் என்று கணித்து உள்ளது. இந்த வியாதி பரம்பரை காரணமாக வர வாய்ப்புள்ளது. அதாவது நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற இரத்த வழி சொந்தங்களில் யாருக்காவது இந்த நோய் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) இருந்தால் அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் தாக்க வாய்ப்பு அதிகம். மேலும் தவறான உணவுப் பழக்கங்களும் இந்த நோய்க்கான மிகப்பெரிய காரணியாகும். ஒரு முறை இந்த வியாதி தாக்கிவிட்டால் தொடர்ச்சியாகச் சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும்.

இந்த பதிவில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதைப் பற்றியும், இந்த நோய்க்கான வீட்டு வைத்திய முறைகள் பலவற்றைப் பற்றியும் தெளிவாகக் காணலாம்.

சர்க்கரை நோய் (Sarkkarai Noi) என்றால் என்ன?

சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும்.

இரு வகைகள்

பொதுவாக இந்த சர்க்கரை வியாதியில் இரண்டு வகை உண்டு.டைப் ஏ என்பது சிறுவயதில் ஏற்படுவது. இந்த டைப் ஏ வகையில் வைரஸ் கிருமியானது கணையத்தைத் தாக்கி இன்சுலின் சுரப்பில் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். ஒருகட்டத்தில் இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும்.இந்த வகை 15 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை அதிக அளவு பாதிக்கிறது. இதில் பெரும் சோகம் என்னவென்றால் இந்த பாதிப்புக்கு ஆளான குழந்தைகள் தங்களின் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் பயன்படுத்த வேண்டி உள்ளது.

நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியம்:

டைப் பி சர்க்கரை நோய் வகையானது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் நோய் தாக்கும். இப்பொழுது இரண்டாம் வகை சர்க்கரை நோயைக் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) குணப்படுத்த சில வீட்டு வைத்திய முறைகளைப் பார்க்கலாம்.

நாவல் பழக்கொட்டை

நாவல் பழங்களின் கொட்டைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த கொட்டைகளை நன்கு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியைத் தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்துக்கொண்டு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் என்ற அளவில் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி அருந்த வேண்டும்.தினமும் காலையில் இவ்வாறு செய்து வந்தால் நீரிழிவு நோய் குறைந்துவிடும்.

கருஞ்சீரகம்

இது ஒரு அற்புதமான மூலிகையாகும். மரணத்தைத் தவிர மற்ற அத்தனை விதமான நோய்களுக்கும் இந்த கருஞ்சீரகம் சிறந்த மருந்து என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கருஞ்சீரகத்தை அப்படியே அல்லது பொடியாக அரைத்து தினமும் உட்கொள்வதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை

இந்த இலவங்கப்பட்டையைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் அரை ஸ்பூன் என்ற அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது மேலும் கெட்டக் கொழுப்பைக் கரைப்பதிலும் பெயர் பெற்றது.

கற்றாழை

இந்த கற்றாழை இயற்கையின் கொடை என்றால் மிகையல்ல. கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி உள்ளிருக்கும் வளவளப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
இந்த சாற்றைத் தினமும் அருந்தி வர, இரண்டாம் வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

வெந்தயம்

வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். வெந்தயக்கீரையைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இரத்தத்தின் சர்க்கரை அளவு சீரான அளவில் இருக்கும். மேலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரையும். படிக்க: இரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகள்

வேப்பம்பூ பொடி

வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி ,துளசி பொடி மற்றும் நாவல் பழக் கொட்டை பொடி முதலியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு அரை ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழிமுறை சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரிய அளவில் கை கொடுக்கும்.

பாகற்காய்

இந்த பாகற்காயில் இன்சுலின்-பாலிபெப்டுடைட் என்னும் ரசாயனம் உள்ளது.இந்த வேதிப் பொருளானது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய் பொரியல், பாகற்காய் சூப் மற்றும் பாகற்காய் குழம்பு போன்றவற்றைத் தயாரித்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கை இலைகள்

முருங்கை இலைகளைப் பறித்துக் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். படிக்க: முருங்கை கீரை பயன்கள்.

ஆளி விதைகள்

ஆளி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உணவிற்கு பிந்தைய ரத்தத்தின் சர்க்கரை அளவு நல்ல முறையில் குறைந்து சீரான அளவிற்கு வரும்.

கருந்துளசி இலை

துளசி மகத்துவமான மூலிகை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த துளசி இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கும் துணை புரியும்.இந்த இலைகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சிக்கல்களை வராமல் தடுக்கின்றன.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒரே அளவில் வைக்க உதவுகிறது. ஆக உணவில் அடிக்கடி மஞ்சள் சேர்ப்பதன் மூலம் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) வராமல் தடுத்துக் கொள்ள முடியும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டியன:

இதைத் தவிர சர்க்கரை நோயாளிகள் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) வேறு எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

உடற்பயிற்சி

தினமும் போதுமான அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கிரகித்து தேவையான சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும். படிக்க: யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவு வேண்டாம்

அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்சுலின் செயல்பாடு மிக மோசமாகிவிடும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் அதிக அளவு அதிகரித்துவிடும். அதனால் இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இனிப்பு வகைகள் சாப்பிட ஏற்றது இல்லை.

உடல் எடை

உடல் எடையை எப்பொழுதும் சீரான அளவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம். உடல் எடை குறைக்க.

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

தண்ணீர்

தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.. மேலும் அதிக அளவு சர்க்கரை சிறுநீர் வழியே வெளியேறி விடும்.

மன அழுத்தம் கூடாது

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்பொழுது கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும்.இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் அதிகப்படுத்தி விடும்.அதனால் எப்பொழுதும் நிலையான மனதோடு மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.

பரிசோதனை

ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

தூக்கம்

தேவையான அளவு தூக்கம் மிகவும் முக்கியம். சரியான தூக்கம் உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஹார்மோன்கள் சீரற்ற அளவு சுரக்கத் தொடங்கும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியாது.அதனால்
தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்.

இந்த பதிவின் மூலம் சர்க்கரை நோயைச் சரி செய்வதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளை அறிந்திருப்பீர்கள். மேலும் இந்நோயினால் தாக்கப்பட்டவர்கள் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null