ரத்த அழுத்தம் பிரச்னைகள் பலருக்கு வருகிறது. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிலருக்கு குறை ரத்த அழுத்தம். இவை ஏன் வருகிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன ? உணவு முறைகள் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் பதிவு இது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ முடியும். அதைப் பற்றி இங்கு முழுமையாகப் பார்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் என்றால் Hypertension. இது, அமைதியாக இருந்து ஆட்களைக் கொல்லும் என்பார்கள்.
குறைந்த ரத்த அழுத்தம் என்றால் Hypotension. இது எப்போது வருகிறது என்றே தெரியாது. திடீரென்று வந்து தொல்லையை தந்துவிட்டு செல்லும்.
ரத்த அழுத்தம் என்றால்?
தண்ணீர் ஆறுகளில் ஓடுவது போல ரத்தக்குழாய்களில் ரத்தம் ஓடுகிறது.
இதயத்தில் இருந்து வரும்போது (Systolic pressure) குறிப்பிட்ட (120) வேகத்திலும், இதயத்தில் இருந்து வெளியேறுகையில் (Diastolic pressure) வேறு வேகத்திலும் (80) செல்வதை ரத்த அழுத்தம் என்கிறார்கள்.
நார்மல் அளவு - 120/80 மி.மீ
உயர் ரத்த அழுத்தம் - 140/90 மி.மீ.க்கு மேல்
குறைந்த ரத்த அழுத்தம் - 90/60 மி.மீ. கீழ்
குறைந்த ரத்த அழுத்தம்...
ஒருவருக்கு Systolic அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது Diastolic அழுத்தம் 60க்குக் குறைவாகவோ இருந்தால், அது Arterial Hypotension.
Systolic அழுத்தம் 115க்கு மேல் இருந்து Diastolic அழுத்தம் 50க்குக் குறைவாக இருந்தால், அதுவும் குறைந்த ரத்த அழுத்தம்தான்.
சிலருக்கு, திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு Systolic அழுத்தம் குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் வரும். மருத்துவரின் ஆலோசனை அவசியம். இல்லையென்றால், ஆபத்து நேரலாம்.
அறிகுறிகள்…
தலைச்சுற்றுதல்
மயக்கம், வாந்தி
நாக்கு வறட்சியாகுதல்
பார்வைக் குறைதல்
மனக்குழப்பம்
மூச்சு வாங்குதல்
உடல் சில்லென்று மாறுதல்
கவனம் செலுத்த முடியாமல் போகுதல்
யாருக்கு குறைந்த ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம்?
விளையாட்டு வீரர்கள்
கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள்
ஒல்லியானவர்கள்
கர்ப்பிணிகள்
தைராய்டு பிரச்னை இருப்பது
முதியவர்கள்
படுக்கையிலே இருப்பவர்கள்
இதையும் படிக்க: தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
ரத்த அழுத்தம் குறைய என்ன காரணம்?
இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் எனப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது.
இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறையும்.
இதனால், ரத்த அழுத்தம் குறைந்துவிடும்; மயக்கம் ஏற்படுகிறது.
காரணங்கள்...
விட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்கள்
சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து Septicaemia உருவாக்கும். ரத்த அழுத்தம் குறையும்.
ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற ரத்தம் இழக்கப்படும்போது…
இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு
நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி , சிறுநீரகச் செயலிழப்பு, Varicose veins
காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள், விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள் இருந்தால்...
வெயில்
உடலில் நீரிழப்பு ஏற்படுதல்
தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள்
பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள்
கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
Image Source : Healthy living from nature
தீர்வுகள்…
நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியம்.
சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும்.
உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம். இந்துப்பு நல்லது.
கால்களுக்கு Stockings அணிந்து கொள்ளலாம்.
சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.
நீண்ட நேரம் கால்களை மடக்கி உட்கார கூடாது. நிற்பதும் கூடாது. வெயிலில் அதிகமாக அலையக்கூடாது.
ஓய்வும் உறக்கமும் அவசியம்.
தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்க முடியாத நிலைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
படுக்கையை விட்டு எழும்போது, சிறிது நேரம் மூச்சை நன்றாக உள்இழுத்துவிட்டு, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.
எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். அதாவது இடது பக்கம் திரும்பி எழ வேண்டும். அதேபோல் இட பக்கம் சாய்ந்து படுக்க வேண்டும்.
படுக்கையில் இருந்து எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு எழுந்து நடந்தால் தலைச்சுற்றல் வருவதைத் தடுக்கலாம்.
படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுக்க கீழ்நோக்கிக் குனிவது, சட்டென்று திரும்புவது போன்றவை செய்ய கூடாது.
தலைக்குத் தலையணை பயன்படுத்த கூடாது.
ரத்தசோகையை சரி செய்து கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்வது நல்லது. ரத்த ஓட்டம் உடலில் சீராக செல்ல வேண்டும். இது மிகவும் முக்கியம்.
இனி, உயர் ரத்த அழுத்த பிரச்னையைப் பற்றிப் பார்க்கலாம்.
இதையும் படிக்க: கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்...
உயர் ரத்த அழுத்தம் ஏன் வருகிறது?
மரபியலும் ஒரு காரணம்
மதுப்பழக்கம்
உப்பு அதிகமாகப் பயன்படுத்துவோருக்கும் வரலாம்
ஊறுகாய், கருவாடு அதிகம் சாப்பிடுபவர்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு
ஜாம், சிப்ஸ்
கேக், சாக்லேட், பிஸ்கெட், குக்கீஸ்
பீசா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்
நூடுல்ஸ், சூப், ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் மசாலா போன்ற துரித உணவுகள்
துரித உணவுகளில் சோடியம் அதிகம் - இதை சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும்.
அதிக உயர் ரத்தம் இருந்தால் என்ன நடக்கும்?
மாரடைப்பு
பக்கவாதம்
சிறுநீரக செயலிழப்பு
கண் பார்வை மங்குதல்
இதையும் படிக்க: சோர்ந்து போன தாய்மார்களுக்கு உற்சாகம் அளிக்கும் சிறப்பு உணவுகள்...
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள்…
சின்ன வெங்காயம்
பூண்டு, இஞ்சி
சீரகம், கருஞ்சீரகம்
வெந்தயம்
செம்பருத்திப்பூ
Image Source : Pure nature
தக்காளி
கேரட்
உலர் அத்தி
முருங்கை கீரை
வாழைப்பழம்
வெங்காய தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வெந்தயம் பொடி, கறிவேப்பிலை பொடியை சம அளவு எடுத்து, சூடு சாதத்தில் முதல் சாதத்தில் பிசைந்து 1-2 உருண்டை சாப்பிடலாம்.
கிரீன் டீ குடிக்கலாம்
உணவில் மஞ்சள் தூள், லவங்கம், பட்டை, வெள்ளை பூண்டு சேர்க்கவும்.
ரசம், மீன் குழம்பில் குடம் புளி சேர்க்கவும்.
உடற்பயிற்சிகள் பலன் தருமா?
நிச்சயம் பலன் தரும்.
40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்.
யோகா, பிராணாயாமம் நல்லது.
நீச்சல், சைக்கிள் ஓட்டுதலும் நல்லது.
மனதை ஆரோக்கியமாக்க என்ன செய்யலாம்?
தியானம் செய்யுங்கள். மிக மிக நல்லது.
நல்ல இசையைக் கேளுங்கள்.
அக்கு பிரஷர் செய்து கொள்ளுங்கள்.
மசாஜ் செய்து கொள்ளுங்கள்
இயற்கை சூழலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள்.
மணம் கமழும் எண்ணெய்களை முகரலாம். லாவண்டர், புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு, ரோஜா எண்ணெய்களை முகர்ந்து பார்க்கலாம்.
மருத்துவர் ஆலோசனையுடன் சரியான அளவில் மருந்தை சாப்பிடலாம்.
இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null