பொடுகை முற்றிலுமாகப் போக்கும் சிம்பிள் வீட்டு வைத்தியம்…

பொடுகை முற்றிலுமாகப் போக்கும் சிம்பிள் வீட்டு வைத்தியம்…

அழுக்கான, பிசுபிசுப்பான முடியில் பொடுகு நிச்சயம் இருக்கும். முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்னை வரலாம். அவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகள் உண்டு. உங்களது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பொடுகை விரட்ட முடியும்.

பொடுகு பிரச்னையை நீக்கும் வழிகள்...

டீ ட்ரீ எண்ணெய்

நீங்கள் தலைக்கு குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்புவில் 2 துளி டீ ட்ரீ எண்ணெய் விட்டு, உங்கள் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். 2 நிமிடம் கழித்து நன்கு அலசிவிடுங்கள். விரைவில் பொடுகு நீங்கும். baking soda Image Source : Dolambanh இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

பேக்கிங் சோடா

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 6 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்துக் கலக்கவும். இதைத் தலைமுடி மற்றும் மண்டையில் நன்கு தேய்க்கவும். 2 நிமிடம் அப்படியே ஊறவிட்டு, வெறும் நீரால் முடியை அலசவும். ஷாம்பு பயன்படுத்த கூடாது. பூஞ்சைகள் தலையில் இருந்தால், அவற்றை நீக்கும். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்யுங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகர்

¼ கப் ஆப்பிள் சிடர் வினிகர் ¼ கப் தண்ணீர் இரண்டையும் ஸ்ப்ரே பாட்டிலில் கலக்கவும். நன்றாக மிக்ஸ் செய்த பின், தலைமுடி மண்டையில் ஸ்ப்ரே செய்யவும். டவலால் முடியை சுற்றி கட்டி 15 நிமிடங்கள் ஊற விடவும். முடியை நன்கு அலசிவிடுங்கள். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெய்

மிகவும் ஈஸியான தீர்வு இது. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, மண்டை, முடியின் வேர்கால்களில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் ஷாம்பு போட்டு அலசுங்கள். இப்படி வாரம் 4 முறை செய்து வர பொடுகு நீங்கும்.

எலுமிச்சை சாறு

இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து மண்டையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். பிறகு அதை தண்ணீரால் நன்கு அலசிவிடுங்கள். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இவற்றால் அப்படியே முடி மற்றும் மண்டையில் படும் படி அலசவும். பின்னர் முடியை அப்படியே விட்டு விடலாம். எப்போதும் போல முடியை டவலால் உலர்த்திக் கொள்ளுங்கள். இப்படி பொடுகு நீங்கும் வரை அவ்வப்போது செய்து வந்தால், விரைவில் பொடுகு நீங்கும். rock salt Image Source : Sciencing
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

கல்லுப்பு - கடல் உப்பு

வீட்டில் உள்ள கல்லுப்பை பொடித்துக் கொள்ளவும். அவற்றை முடியின் வேர்க்கால்கள், மண்டையில் தேய்த்து மசாஜ் செய்யவும் 5 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் முடியை ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். இப்படி வாரம் 3 முறை செய்து வாருங்கள். இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்...

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். முட்களை நீக்கி, தோலை எடுக்கவும். நடுவில் உள்ள ஜெல்லை நன்கு அலசி கொள்ளவும். இதைக் கூழாக்கி, முடி மற்றும் மண்டையில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை முடியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். எப்போதும் பயன்படுத்தும் ஷாம்புவை எடுத்து, நன்கு தேய்த்து, மசாஜ் செய்து அலசிவிடுங்கள்.

மிக்ஸிங் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து, மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற விடவும். பொடுகு நீங்கும்.

methi seeds

Image Source : Glam n Gloss இதையும் படிக்க: 3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்...

வெந்தய பேஸ்ட்

இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர்விட்டு அரைத்து, தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.

வேப்பிலை பேஸ்ட்

கொழுந்து இலைகளாக வேப்பிலையைத் தேர்ந்தெடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தலையில் பேக்காக போடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள்.

ஆரஞ்சு தோல் பவுடர்

ஆரஞ்சு தோல் பவுடருடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் பேக்காக போடுங்கள். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். இதையும் படிக்க: வலி இல்லாமல் இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்கும் முறைகள்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.  

null

null