குடல் புழு நீங்க, வயிறு சுத்தமாக என்னென்ன வைத்திய முறைகள்?

குடல் புழு நீங்க, வயிறு சுத்தமாக என்னென்ன வைத்திய முறைகள்?

குடல் புழு, வயிற்று பூச்சி, கிருமிகள் இதெல்லாம் பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்கும். சாக்லேட், பிஸ்கெட், ஒத்துகொள்ளாத உணவுகள், மண்ணில் விளையாடுவது, கையை சப்புவது போன்றவற்றால் பரவத்தான் செய்யும். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா எனறால் நிச்சயம் உண்டு. குடல் புழுவுக்கு மருந்து மற்றும் பேதிக்கு மருந்து சாப்பிடுவது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குடல் புழுக்கள் பற்றித் தெரியுமா?

உருண்டைப் புழு கொக்கிப் புழு நூல் புழு சாட்டைப் புழு நாடா புழு எனப் பல்வேறு வகைகளில் புழுக்கள் இருக்கின்றன. ஆண், பெண் என இரண்டு இனங்களில் புழுக்கள் இருக்கின்றன. பெண் இன புழு இடும் முட்டை மனித உடலில் மலம் மூலமாக வந்து நிலத்தில் கலந்து மண்ணில் கலக்கும். குழந்தைகள் மண்ணில் விளையாடுகையில் கை விரல்கள் மூலமாக உடலுக்குள் செல்லும். அதன் பிறகு உடலில் சென்று தொல்லை கொடுக்கும். செருப்பில்லாமல் இருந்தாலும் காலின் வழியாக செல்லும். கொக்கி புழு என்ற வகை, பாதத்தில் துளைத்து கொண்டு உடலுக்குள் செல்லும்.

குடல் புழுக்கள் ஒழிய என்ன செய்யலாம்?

குடல் புழுக்கள் ஒழிய மருத்துவரை சந்தித்து, மலப்பரிசோதனை செய்து எந்தப் புழு உடலில் உள்ளது எனத் தெரிந்துகொண்டு, அந்த புழுவை ஒழிக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு திரவ மருந்தாகவும் பெரியவர்களுக்கும் மாத்திரையாகவும் மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த மருந்துகளை எத்தனை முறை எத்தனை கால இடைவேளைக்கு சாப்பிட வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொண்டு சரியாக பின்பற்றவும். ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிட்டு விட்டால் சரியாகாது. மருத்துவர் சொல்படி கேட்டு மருந்து சாப்பிடுவது நல்லது. இதையும் படிக்க: மூக்கடைப்பை சரிசெய்ய கூடிய எளிமையான வீட்டு வைத்திய டிப்ஸ்…

குடும்பத்தில் உள்ள அனைவரும் குடல் புழு மருந்து சாப்பிடலாமா?

ஆம். சாப்பிடலாம்… இதனால், குடல் புழு தொற்று இருக்காது. அனைவரது வயிறு சுத்தமாகும். மீண்டும் மீண்டும் குடல்புழு தொந்தரவு இருக்காது. intestinal worms Image Source : organifishop
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

குடல் புழு இல்லாதவர்கள் மருந்து சாப்பிடலாமா?

குழந்தைகளுக்கோ உங்களுக்கோ குடல் புழு இல்லையென்றாலும் பேதிக்கு மருந்து சாப்பிடலாம். இதனால் வயிறு, குடல் சுத்தமாகும். உடலுக்கு ஆரோக்கியம், புத்துணர்ச்சி கிடைக்கும். தேவையற்ற கழிவுகள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். தோல் நோய்கள் வராது.

யாருக்கு கழிவு உடலில் அதிகம் சேரும்?

அனைவருக்கும் கழிவு உடலில் இருக்கும். குறிப்பாக சிலருக்கு அதிகமாக சேரலாம். தண்ணீர் அதிகம் குடிக்காதவர்கள் அதிகமாக இரும்பு மாத்திரை சாப்பிடுபவர்கள் வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுபவர்கள் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்கள் துரித உணவு சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் உணவை சூடு செய்து சாப்பிடுபவர்கள் நேற்றைய உணவை இன்றைக்கு சாப்பிடுபவர்கள் மலம் சரியாக கழிக்காதவர்கள்

எத்தனை காலத்துக்கு பேதி மருந்து சாப்பிடலாம்?

5-6 மாதத்துக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது நல்லது. குடல் புழு இருந்தால் அதற்கேற்ற தனி வகை மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். பேதிக்கு மருந்தும் குடல்புழு மருந்தும் ஒன்றல்ல… இரண்டும் வேறு. அவரவர்கள் பிரச்னைக்கு ஏற்ப மருந்து உண்ண வேண்டும். இதையும் படிக்க: 0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம் deworming kids Image Source : Business Recorder

வயிறு சுத்தமாக இருக்க என்ன செய்யலாம்?

இரவில் படுக்கும்போது இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அளவு குடிக்கலாம். காலை எழுந்ததும் பல் துலக்கி, பின்னர் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அல்லது சாதாரண நீர் அருந்துவது நல்லது. சிறு குழந்தைகளுக்கு, 5-10 ஆர்கானிக் கிஸ்மிஸ் திராட்சைகளை நீரில் 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதனை நன்கு நீருடன் பிசைந்து கொடுக்கலாம். கடுக்காய்ப் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுக்க வேண்டும். பொடித்த பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிது. கடுக்காய் பொடியாக வாங்கி இரவில் சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்தும் குடிக்கலாம். காலையில் மலம் கழிக்க சுலபமாக இருக்கும். திரிபலா எனச் சொல்லப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த (விதை நீக்கிய பின்) தூள், கடைகளில் விற்கும். அல்லது வீட்டில் நீங்களே தயாரிக்கலாம். மாலையில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வரை சாப்பிடுவது காலையில் மலத்தை எளிதாகக் கழியவைப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

வயிறு சுத்தமாக வீட்டு வைத்தியம்

பப்பாளி காய் சாறு 1 டேபிள் ஸ்பூன், அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் இளஞ்சூடான நீர், 1 டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குழந்தைக்கு கொடுக்கலாம். 5 வயது + குழந்தைக்கு தரலாம். ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து தரலாம். குழந்தைகள், பெரியவர்கள் இன்டியன் கழிப்பறை பயன்படுத்துவதே நல்லது. மலம் முழுமையாக வெளியேற இன்டியன் கழிப்பறையில் உட்காரும் முறைதான் சரி. வெஸ்டர்ன் கழிப்பறையில் உட்காரும் முறையால் முழுமையாக மலம் வெளியேறாது. அன்றாட உணவுகளின் பூண்டு சேர்த்துக்கொண்டால் வயிற்றில் புழுக்கள் சேராது. 10 வயது + உள்ளவர்கள், பாகற்காய் ஜூஸ், இளஞ்சூடான நீர், சிறிது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க புழுக்கள் வெளி வந்துவிடும். காலை, மாலை கொடுக்கலாம். 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஒரு வாரம் இடைவேளை விட்டு மீண்டு 3 நாட்கள்… மீண்டும் ஒரு வாரம் பின்னர் 3 நாள் கொடுக்கலாம். வீட்டை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கைகளை நன்கு சோப் போட்டு கழுவ வேண்டும். சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். சமைக்கும் முன் காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும். இதையும் படிக்க: குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null