டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்துகிறோம். அது நம்மை பொறுத்தவரையில் நமக்கு ஈஸியான ஒன்று. ஆனால், குழந்தைகளுக்கு டயாப்பர் எரிச்சலாக இருக்கும். அசௌகரியமாக இருக்கும். அவர்களுக்கு காயங்கள், அரிப்புகள், தொற்றுகளும் வரும். இதிலிருந்து குழந்தையை எப்படி காப்பது? டயாப்பர் ராஷஸ் போக்க வீட்டு வைத்தியம் என்ன? டயாப்பர் காயங்கள் வராமல் தடுக்க முடியுமா...

டயாப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் சரும பிரச்னைகளை போக்கும் வீட்டு வைத்தியம்

#1. தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெய் சிறந்தது. ஆன்டிஃபங்கலாக செயல்பட்டு பூஞ்சைகள் உருவாகாமல் தடுக்கும். பூஞ்சைகள் இருந்தால் அவை அழியும். பாதித்த இடங்களில் சுத்தமான தேங்காய் எண்ணெயை பூசிய பிறகு டயாப்பர் மாட்டி விடுவது நல்லது. ஒவ்வொரு முறை டயாப்பர் மாட்டும் முன்னர் தேங்காய் எண்ணெயைத் தடவுங்கள். ஈஸ்ட் தொற்று ஏற்படாமல் தடுக்கும் இந்த தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவி விட்டு 3 நிமிடங்கள் வரை மிதமாக மசாஜ் செய்யுங்கள்.

#2. குழந்தைகள் குளிக்கும் நீர்

குழந்தைகள் குளிக்கும் நீரில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். இந்த தண்ணீரால் குழந்தையை குளிப்பாட்டுவது நல்லது. கொழுந்து வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு, கொதிக்க வைத்துவிட்டு அந்த நீரை குழந்தைகள் குளிக்கும் நீரில் சேர்த்து விடலாம். வெதுவெதுப்பான சூட்டில் குழந்தையை குளிப்பாட்டலாம். கிருமிகள் அழியும். எரிச்சல் அடங்கும். oats

# 3. ஓட்மீல்

குழந்தை குளிக்கும் நீரில் 2 ஸ்பூன் உலர்ந்த ஓட்மீலை போட்டு விடுங்கள். 20 நிமிடங்கள் ஊறிய பின்னர், குழந்தைக்கு இந்த நீரை எடுத்துக் குளிப்பாட்டுங்கள். குழந்தையின் சரும காயங்களை விரைவில் சரிசெய்யும். ஒரு நாளைக்கு இருமுறை செய்யலாம். இதையும் படிக்க: பஞ்சமூட்டக்கஞ்சி... குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் வீட்டு மருத்துவம்...(Home Remedies To Increase Appetite in babies)

# 4. பெட்ரோலியம் ஜெல்லி

ஒவ்வொரு முறை டயாப்பர் மாற்றும் போதும், குழந்தையை நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள். பிறகு உலர் துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். 5 நிமிடம் கழித்து அடுத்த டயாப்பரை மாற்றலாம்.

# 5. டீ ட்ரீ எண்ணெய்

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், அதில் 3 துளிகள் டீ ட்ரீ எண்ணெயை விட்டு இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை குழந்தையின் பாதித்த இடங்களில் பூசி மெதுவாக 2 நிமிடம் வரை மசாஜ் செய்துவிடலாம். தினமும் ஒரு முறை இப்படி செய்யலாம். ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் தன்மை கொண்ட டீ ட்ரீ எண்ணெய் குழந்தையின் பாதிப்புகளை விரைவில் சரி செய்யும். epsom salt Image Source : Salts of the Earth

# 6. எப்சம் உப்பு (Epsom Salt)

வெதுவெதுப்பான பக்கெட் தண்ணீரில் ½ கப் எப்சம் உப்பை போடுங்கள். உங்கள் குழந்தையை இந்த தண்ணீரில் 10 - 15 நிமிடங்கள் வரை இடுப்பு பகுதி வரை நனையும்படி வைக்கலாம். வாரம் இதுபோல 3 முறை செய்யுங்கள். ஆன்டி-இன்ஃப்ளேமடரி தன்மை கொண்டதால் விரைவில் டயாப்பர் புண்கள் சரியாகும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம் (Home remedies for constipation in babies)

#7. பிளெயின் யோகர்ட்

எந்த சுவையும் நிறமும் சேர்க்கப்படாத யோகர்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பாதித்த இடங்களில் திக்காக தடவலாம். குழந்தை தூங்கும்போது இப்படி செய்யலாம். விரைவில் சருமம் ஆரோக்கியமாகிவிடும். சரும பிரச்னைகள் முழுமையாக நீங்கிவிடும். தினமும் இந்த வைத்தியத்தை செய்யலாம். விரைவில் குணம் கிடைக்கும்.

#8. ஆலுவேரா ஜெல்

2 டீஸ்பூன் ஆலுவேரா ஜெல்லை பாதித்த இடங்களில் பூசவும். ஒரு நாளைக்கு 3 முறை இப்படி செய்யலாம். மிக விரைவில் சருமம் சரியாகிவிடும். ஒவ்வொரு முறை பூசும் முன்னர், அந்த இடங்களை சுத்தம் செய்து கழுவி, உலர்ந்த துணியால் துடைத்துவிட்டு மீண்டும் பூசுங்கள். அரிப்பு, எரிச்சலை முழுமையாக நீக்கிவிடும். பாக்டீரியாக்களை அழிக்கும்.

#9. தாய்ப்பால்

பாதித்த இடங்களில் தாய்ப்பாலை தடவுங்கள். பெஸ்ட் மருத்துவம் இது. ஒவ்வொரு முறை தடவும்போதும், காயமான அந்த இடங்களை சுத்தம் செய்த பின்னர் தடவலாம். babies diaper Image Source : WebMD

எத்தனை மணி நேரத்துக்குள் டயாப்பரை மாற்ற வேண்டும்?

குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, ஒரு நாளைக்கு 17-20 முறை சிறுநீர் கழிக்கும். 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை டயாப்பர் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை டயாப்பர் மாற்றும்போதும், குழந்தையை எழுப்ப வேண்டாம். குழந்தை தூங்கி கொண்டிருக்கும்போதே மெதுவாக மாற்றி, சுத்தப்படுத்துங்கள். மலத்தில் உள்ள அமிலத்தன்மை குழந்தையின் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தி, சரும பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மறக்காமல், தவறாமல் டயாப்பரை மாற்றி விடுவது நல்லது. இதையும் படிக்க: 0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...

டயாப்பர் ராஷஸ் வராமல் தடுக்க…

  • வாசனை மிகுந்த டயாப்பரை தவிர்க்கலாம்.
  • பிளாஸ்டிக் அதிகம் போல டயாப்பரை பயன்படுத்த வேண்டாம்.
  • சில நேரங்களில் துணியை நாப்கின் போல கட்டிவிடுங்கள். பருத்தி துணி நல்லது.
  • சில நேரங்களில் காற்றோட்டமாக இருக்கும் துணியை லேசாக கட்டலாம்.
  • ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது எதையும் கட்டாமல் குழந்தையை ஃப்ரீயாக விடுங்கள்.
  • குழந்தையின் டயாப்பர் துணியை அதிக கெமிக்கல்கள் கொண்ட டிடர்ஜென்ட், ஃபாபிரிக் கண்டிஷனர் கொண்டு துவைக்க வேண்டாம்.
  • ஒரே நாப்கின்னை ரொம்ப நேரம் போட்டு இருக்காமல், குழந்தைக்கு அடிக்கடி டயாப்பரை மாற்றுங்கள்.
  • டயாப்பர் மிகவும் இறுக்கமாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  • குழந்தையின் சருமத்தை போட்டு தேய்க்க வேண்டாம்.
  • முடிந்த அளவு குழந்தையின் சருமம் உலர்ந்ததாக இருக்கும்படி பராமரித்து வருவது நல்லது.
ஒவ்வொரு முறை குழந்தைக்கு டயாப்பர் ராஷஸ் நீங்க மருந்து அல்லது வீட்டு வைத்திய முறைகளை தடவிய பிறகு கைகளை நன்றாக கழுவுங்கள். பின்னர் குழந்தையை தூக்கலாம். இல்லையெனில் அந்தத் தொற்று மற்ற இடங்களில் பரவும். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null