வயிற்றுப்போக்கு… இதைச் சொல்லாத தாய்மார்கள் இல்லை எனலாம். ஆனால், பிறந்த குழந்தைகளின் மலம் வெளியேற்றத்தைக்கூட சில தாய்மார்கள் வயிற்றுப்போக்கு என நினைத்துக் கொள்கிறார்கள். வயிற்றுப்போக்கு ஏன் வருகிறது? குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பு முறைகள் பற்றிப் பார்க்கலாம்.
குழந்தைகள் பச்சை, கருப்பு, மஞ்சள், பழுப்பு, சிவப்பு நிறங்களில் கூட மலம் கழிப்பார்கள்.
இதைக் கடந்து வராத குழந்தைகள் கிடையாது.
ஏன் இந்த நிறத்தில் மலம் வருகிறது. காரணங்கள் என்னென்ன? பிரச்னைகள் என்னவாக இருக்கும்? இந்த லின்கை பார்க்க…
இதையும் படிக்க: பச்சை, கருப்பு, வெள்ளை, பழுப்பு… குழந்தையின் மலம் எந்த நிறத்தில் இருக்க கூடாது?
சாதாரண மலக்கழிவுக்கும் வயிற்றுப்போக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நீர் போன்ற திரவமாக மலம் கழித்தல்.
ஒரு வேளையிலே அதிகபடியாக 2-3 முறைக்கு மேல் மலம் கழித்தல்.
வழக்கத்துக்கு மாறாக மலம் கழித்துக்கொண்டே இருத்தல்.
வயிற்றுப்போக்குடன் வாந்தியும் சேர்ந்து வருதல்.
வயிற்றுப்போக்கு ஏன்?
சில உணவுகளின் ஒவ்வாமை.
பாக்டீரியா கிருமிகள் தொற்று.
சுகாதாரமற்ற உணவு
சுகாதாரமற்ற குழந்தை பராமரிப்பு
தாய் தனக்கு ஒத்துகொள்ளாத உணவை சாப்பிட்டு, தாய்ப்பால் ஊட்டுவது.
பெரியவர்கள் கைகளை சுத்தமில்லாமல் இருந்து, குழந்தையிடம் நெருங்குவது.
உணவு, தண்ணீர், காற்று மூலமாகத் தொற்று பரவி இருக்கலாம்.
பக்கவிளைவுகள் தருகின்ற மருந்துகள்.
அதிகபடியான உடல்சூடு
வயிற்றுப்போக்கும் வாந்தியும் இருந்தால் அது தொற்றுக்கான அறிகுறி.
அவசியம் மருத்துவரை அணுகும் நிலைக்கான அறிகுறிகள்…
குழந்தையின் வாய், உதடு மோசமாக உலர்ந்து காணப்படுதல். சாதாரண வறட்சி அல்ல.
ஒரு நாளைக்கு 6-8 க்கு மேல் மலம் கழித்தல்.
குழி விழுந்த கண்கள்
மிகவும் மோசமாகத் தோல் உலர்ந்து காணப்படுதல்
Image Source: milliyet.com.tr
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
வயிற்றுப்போக்குக்கு வீட்டு வைத்திய முறைகள்...
0-6 மாத குழந்தைகள்…
இந்த மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு, தாய்ப்பால்தான் மருந்து.
வயிற்றுப்போக்கின் போது தாய்ப்பாலை அதிக அளவில், நீண்ட நேரம், அதிக முறை கொடுக்கலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே கொடுக்கலாம்.
குழந்தைக்கு புட்டிப்பால் தருபவர்கள் தண்ணீர், ஸ்பூன், பாத்திரம், பாட்டில், நிப்பிள் போன்றவற்றை சுத்தமாகப் பராமரியுங்கள்.
குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம்.
வயிற்றுப்போக்கு தொடர்ந்தால் உடனடியாக, அருகில் உள்ள குழந்தை நல மருத்துவரை அணுகுங்கள்.
6 - 8 மாத குழந்தைகள்
தாய்ப்பால்
தாய்ப்பால் அதிக அளவில் கொடுக்கலாம். அதிக முறை கொடுக்கலாம்.
ORS - மருத்துவரின் அறிவுரை இருந்தால் மட்டும்
மருத்துவர் பரிந்துரைத்தால் இந்த ஓ.ஆர்.எஸ் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இளநீர்
ஒரு நாளைக்கு 2-3 முறை, அரை டம்ளர் - முக்கால் டம்ளர் வரை ஒவ்வொரு வேளையிலும் கொடுக்கலாம். இழந்த நீர்ச்சத்துகளைத் திரும்பப் பெற உதவும்.
கேரட் ஜூஸ்
சுத்தமான இளஞ்சூடான நீர் சேர்த்து கேரட் ஜூஸ் தயாரிக்கவும். எந்த இனிப்பும் தேவையில்லை. ஒரு நாளைக்கு இரண்டு வேளை, அரை - முக்கால் டம்ளர் அளவு கேரட் ஜூஸ் கொடுக்கலாம்.
வாழைப்பழ கூழ்
வாழைப்பழ கூழை குழந்தைக்கு கொடுக்க, எனர்ஜியும் ஸ்டாமினாவும் கிடைக்கும்.
ஆப்பிள் கூழ்
ஆப்பிளை வேக வைத்து, தோலை நீக்கி விட்டு, சதைப் பகுதியை கூழாக்கி கொடுக்கலாம்.
மாதுளை ஜூஸ்
சுத்தமான இளஞ்சூடான நீர் சேர்த்து மாதுளை ஜூஸ் தயாரிக்கவும். இரண்டு வேளை குழந்தைகளுக்கு அரை - ஒரு டம்ளர் அளவு கொடுக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்...
8 - 12 மாத குழந்தைகள்
அரிசி கஞ்சி
பொடித்து வைத்த அரிசியை வெந்நீரில் போட்டு கஞ்சி காய்ச்சி கொடுப்பது நல்லது.
பருப்பு தண்ணீர்
வேகவைத்த துவரப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு தண்ணீருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சீரகத் தூள் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
எலுமிச்சை ஜூஸ்
இளஞ்சூடான தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து, அதில் புதினா ஜூஸ் கொஞ்சம் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
இஞ்சி சாறு
ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள், இவற்றை அரை டம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்கலாம்.
இளநீர்
3 வேளையும் ஒரு டம்ளர் இளநீர் கொடுக்கலாம். இளநீரில் சிறிதளவு சீரகத்தூள் கலந்து கொடுக்கலாம்.
ரசம்
மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்த ரசம் சாதத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. துளசி சேர்த்து ரசம் வைத்தாலும் நல்லது.
துளசி தண்ணீர்
துளசி தண்ணீரை எப்படி தயாரிப்பது என இந்த லின்கை பார்க்க.
இதையும் படிக்க: சளி, காய்ச்சலை விரட்டும் துளசி தண்ணீர் செய்வது எப்படி?
11 மாதம் முதல் பெரியவர்கள் வரை...
வயிற்றுப்போக்கை நிறுத்தும் பொடி
தேவையானவை
பொட்டுக்கடலை - 1 கப்
உலர்ந்த கறிவேப்பிலை - அரை கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை
உப்பைத் தவிர அனைத்தையும் ஒன்றாக அரைத்துப் பொடி தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
சாதத்தில் இந்தப் பொடி போட்டு, சிறிது உப்பு, உருக்கிய நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கொய்யா இலை கஷாயம்
கொதிக்கின்ற 2 டம்ளர் நீரில், நன்கு கழுவிய கொய்யா இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம்.
வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு கொய்யா இலை கஷாயம் மிகவும் நல்லது.
துளசி கஷாயம்
2 டம்ளர் கொதிக்கும் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி துளசி இலைகளைக் கிள்ளி போடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
இளஞ்சூடாக ஆறிய பிறகு, வடிகட்டி குடிக்கலாம். இனிப்புக்கு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null