தலைவலிக்கு காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலை வலி. ஆம், தலைவலி வர நிறையக் காரணங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். வந்தாலும் தலைவலியை எளிதில் போக்கி விடலாம்.
தலைவலியைப் போக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்...
பட்டைத் தூள் வைத்தியம்
பட்டையைப் பொடியாக்கி கொள்ளவும். சிறிது தண்ணீர் கலந்து திக் பேஸ்டாக மாற்றவும். இதை நெற்றியில் தடவலாம். அரை மணி நேரம் கழித்து, இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
கிராம்பு எண்ணெய்
ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2 துளி கிராம்பு எண்ணெய் விட்டு, நன்கு கலக்கவும். இதை நெற்றி, நெற்றி ஓரங்கள் தடவி மசாஜ் செய்யவும். தலைவலி குறையும். கிராம்பு எண்ணெயை முகர்ந்தாலும் தலைவலி குறையும்.
துளசி இலைகள்
ஒரு கப் தண்ணீரில் 5-6 துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். அடுப்பை நிறுத்தி விட்டு, இதை ஆறவிடவும். பின்னர் வடிகட்டி இளஞ்சூடாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கத் தலைவலி சரியாகும்.
அஷ்வகந்தா பால்
அஷ்வகந்தா பொடியை வைத்துக் கொள்ளவும். பாலில் அஷ்வகந்தா பொடியை ஒரு டீஸ்பூன் அளவு கலந்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் அந்தப் பாலை குடிக்கவும். தலைவலி நீங்கும்.
தண்ணீர்
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், டென்ஷன், தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகியவை வரும்.
போதுமான அளவு தண்ணீர் குடித்தால், 30 நிமிடங்கள் - 3 மணி நேரத்துக்குள் தலைவலி சரியாகிவிடும்.
ஒரு நாளைக்கு போதுமான தண்ணீர், நீர்ச்சத்து உள்ள உணவுகள் சாப்பிடுவது நல்லது.
இதையும் படிக்க: பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்...
மெக்னிசியம் சத்து குறைபாடு
மெக்னிசியம் சத்து குறைவாகக் காணப்பட்டால் தலைவலி வரும். அடிக்கடி தலைவலி பிரச்னை வரலாம்.
பச்சை நிற காய்கறிகள், கீரைகள்
வாழைப்பழம்
அவகேடோ
அத்தி
நட்ஸ், விதைகள்
டார்க் சாக்லேட்
தூக்கம்
போதுமான தூக்கம் இல்லையென்றாலும் தலைவலி வரும். எனவே, 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
தலைவலி தரும் உணவுகள்
சீஸ், புளித்த உணவு, பீர், வைன், கிரில்டு அசைவ உணவுகள் ஆகியவற்றில் உள்ள ஹிஸ்டமைன் எனும் கெமிக்கல் தலைவலியை உண்டாக்கும்.
எசன்ஷியல் எண்ணெய்
தலைவலி வந்தால் அந்த இடத்தில் 3 துளி லாவண்டர் எண்ணெயோ 3 துளி பெப்பர் மின்ட் எண்ணெயோ தெளிப்பது நல்லது. இதனால் டென்ஷன், தலைவலி குறையும்.
வெற்றிலை
4-5 வெற்றிலையை சிறிது நீர் விட்டு அரைக்கவும். அதனுடன் கேம்ஃபர் எசன்ஷியல் எண்ணெய் 2 சொட்டு கலந்து தலையில் பத்து போடவும். அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகும்.
இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்...
நிலக்கடலை
நிலக்கடலையை வெந்நீர் விட்டு அரைத்து நெற்றிப் பொட்டுகளில் தடவ, தலைவலி உடனே நீங்கும்.
ஆவி பிடித்தல்
வெந்நீரில் சிறிது மஞ்சள் தூள், யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் 2 சொட்டு விட்டு ஆவி பிடிக்கவும்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
விட்டமின் பி குறைபாடு
உடலில் விட்டமின் பி சத்து குறைந்து இருந்தாலும் தலைவலி வரும்.
முழு தானியங்கள்
முட்டை
பால்
பீன்ஸ், பருப்பு, பயறுகள்
விதைகள், நட்ஸ்
அடர் பச்சை நிற காய்கறிகள்
பழங்கள், சிட்ரஸ் பழங்கள்
இவற்றிலிருந்து விட்டமின் பி வகை சத்துகளைப் பெறலாம்.
இதையும் படிக்க: குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்
யோகா தெரபி
ஸ்ட்ரெஸ், வளைவுத்தன்மை, வலி குறைப்பதில் யோகா உதவும்.
சீரான ரத்தம் ஓட்டம் பெற யோகா தெரபி உதவும். இதனால் தலைவலி வருவதும் நீங்கும்.
இஞ்சி டீ
பால் சேர்க்காத இஞ்சி டீ குடித்தால் தலைவலி நீங்கும். இனிப்புக்கு, சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி, வெல்லம் சேர்க்கலாம்.
மூச்சு டெக்னிக்
சுத்தமான ஃப்ரெஷ் காற்றில், மெதுவாக மூச்சை இழுத்து மூச்சை விடுவதால் தலைவலி குறையும். ஆழ்ந்த மூச்சு, மெதுவாக விட வேண்டும்.
இந்துப்பு வைத்தியம்
எலுமிச்சை ஜூஸ் ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்க தலைவலி நீங்கும்.
மலச்சிக்கல் வைத்தியம்
மலச்சிக்கல் இருந்தாலும் தலைவலி வலிக்கும். மலச்சிக்கலுக்கு வைத்தியம் பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null