3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்

பெண்களுக்கு பிசிஓடி இருக்கிறது என்று சொல்வது சகஜமாகிவிட்டது. உணவு மாற்றம், வாழ்வியல் மாற்றம் இதற்கு முக்கிய காரணங்கள். எளிமையான முறையில் பிசிஓடியை சரிசெய்ய வைத்திய முறைகள் உள்ளன. இதை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம். 3 மாதத்தில் பிரச்னையை விரட்டி உங்களை ஆரோக்கியமாக மாற்றும். முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.

பிசிஓடி சரியாக 12 வீட்டு வைத்திய முறைகள்

#1.கற்றாழை ஜூஸ்

 • ஃப்ரெஷ்ஷான கற்றாழை இலைகளை தோல் நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை எடுத்து 11 முறை நன்றாக கழுவுங்கள்.
 • கழுவிய கற்றாழையை மிக்ஸியில் கொஞ்சம் பனங்கற்கண்டு போட்டு அரைத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 • 48 நாட்கள் இதைக் குடித்து வந்தால், அடுத்த முறை ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் போது பிரச்னையே இல்லாமல் மறைந்திருக்கும்.

#2.விட்டமின் டி

 • இனப்பெருக்க செயல்பாடுக்கு விட்டமின் டி சத்து முக்கியம்.
 • அதை உணவுகளிலிருந்து பெறுவது கடினம். ஏனெனில் உணவுகளில் சிறிதளவுதான் கிடைக்கும்.
 • சூரிய வெளிச்சத்தில் விட்டமின் டி கிடைக்கும். அது உடலுக்கு முக்கியம். பெண்களுக்கு மிக அவசியம்.

#3.தேங்காய் எண்ணெய்

 • சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு ஸ்பூன் அளவு பருகலாம்.
 • ஸ்மூத்தி, ஜூஸ் போன்ற எதிலாவது கலந்து குடிப்பது நல்லது.
 • தேங்காய்ப் பாலுடன் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்துகூட பருகலாம்.

இதையும் படிக்க:சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ் (C-Section Recovery Tips)

#4.சீரக தண்ணீர்

jeera water for pcod

Image Source : youtube

 • உங்கள் குடிநீரை 3 மாதத்துக்காவது மாற்றி பாருங்கள்.
 • அதாவது சீரக குடிநீரையே குடிநீராக 3 மாதத்துக்கு குடித்து வந்தாலே கர்ப்பப்பை, சினைப்பை மட்டுமல்ல மற்ற பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.
 • சீரகம் என்பதே உடலை சீர் படுத்தும் மூலிகை. அகத்தை சீர் படுத்துவதால்தான் சீரகம் என்று அதற்கு பெயர்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

#5.விளக்கெண்ணெய் மசாஜ்

 • தரமான விளக்கெண்ணெயை எடுத்து தொப்புள், அடிவயிறு சுற்றி தடவி கொள்ளுங்கள்.
 • மெல்லிய துணியைப் போட்டு அதன் மேல் ஹாட் பேக் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
 • இவ்வாறு வாரம் 4 முறை செய்வது நல்லது.
 • தொப்புளில் தினமும் விளக்கெண்ணெய் கொஞ்சம் விடுவது நல்லது.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

#6.ஊறவைத்த வெந்தயம்

 • தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் சிறிதளவு நீரில் ஊற வைத்து விடுங்கள்.
 • மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதை அப்படியே விழுங்கி விடலாம்.
 • இதைப் பழக்கமாக 3 மாதங்களுக்கு செய்தாலே, எந்த மருத்துவரும் வேண்டாம். கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகள் முற்றிலுமாக சரியாகிவிடும்.

#7.கருப்பு எள் உருண்டை

 • தினமும் ஒரே ஒரு கருப்பு எள் உருண்டையை சாப்பிட்டு வருவது நல்லது.
 • மாலை நேர நொறுக்கு தீனியாக ஒன்றே ஒன்று சாப்பிடுங்கள் போதும்.
 • மாத்திரை, மருந்து எதுவும் வேண்டாம். பிசிஓடி போன்ற பெண்கள் பிரச்னை பறந்து போகும்.

இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது?

#8.பூசணி விதைகள்

 • இதை வறுத்தோ பொடித்தோ ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து குடிக்கலாம்.
 • தினமும் ஒரு ஸ்பூன் அளவு இந்த விதையை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

#9.நெல்லி ஜூஸ்

amla juice for pcod

Image Source : organic facts

 • 2 நெல்லிக்காய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, கருப்பட்டி கலந்து ஜூஸாக்கி வாரம் 3-4 முறை குடித்து வருவது நல்லது.
 • கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகள் காணாமல் போய்விடும்.

#10.பனக்கருப்பட்டி

 • இதை தினமும் ஒரு பீஸ் சாப்பிட்டு வர வேண்டும்.
 • ஜூஸ், ஸ்மூத்தி, தேங்காய்ப் பால் என எதிலும் கலந்து சாப்பிடலாம்.
 • கர்ப்பப்பை, சினைப்பை பிரச்னைகளை நீக்க உதவும்.

#11.யோகா பயிற்சி

 • பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு மிக மிக எளிமையான யோக ஆசனங்கள் உள்ளன.
 • வஜ்ராசனம், மகராசனம், மூச்சு பயிற்சி, பத்மாசனம், மகா முத்ரா இன்னும் சில… இவற்றை முறையான யோக பயிற்சியாளரிடம் கற்ற பின் செய்து வருவது நல்லது.

#12. மேஜிக்கல் ஜூஸ்

 • அரை வெள்ளரிக்காய், அரை டம்ளர் எலுமிச்சம் பழம் ஜூஸ் அல்லது சாத்துகுடி ஜூஸ், 1 கற்றாழை இதையெல்லாம் கலந்து மிக்ஸியில் அடித்து பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து குடிக்க பிசிஓடி இருக்காது.

இதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது… 

பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

 • கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான புற்றுநோய்கள் வர டால்கம் பவுடர் பயன்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
 • இஞ்சியை உணவில் சேர்த்து, தொடர்ந்து உட்கொண்டால் சினைப்பை கட்டிகளோ புற்றுநோயோ வருவதில்லை.
 • துரித உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பிரச்னைகளான பிசிஓடி, சிஸ்ட், ஃபைப்ராய்ட் போன்ற அனைத்தும் வரும். சினைப்பைத் தொடர்பான பிரச்னைகள் வரும்.
 • 20-30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. வாரம் 5 முறையாவது நடந்து பாருங்கள். மாற்றம் தெரியும்.
 • கல்லீரலையும் நன்றாக பார்த்துக் கொண்டால் விரைவில் பெண்கள் பிரச்னைகள் தீரும். கீரைகள், பூண்டு, உருக்கிய நெய், சிட்ரஸ் பழங்கள், நீர் மோர், ஆப்பிள், சின்ன வெங்காயம், மாதுளை, செம்பருத்திப்பூ ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null