குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்...

குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்...

குழந்தை வயிறு வலிக்காக அழுவது இயல்பான விஷயம் என்றாலும் அதைப் பார்க்கவே நம்மால் முடியாது. வயிறு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை அறிந்து கொண்டால் தவறுகளை திருத்திக் கொள்ளலாம். வயிறு வலி வந்தாலும் சில கைவைத்தியங்கள் மூலமாகவே குழந்தைகளுக்கு உண்டாகும் வயிறு வலியை சரி செய்துகொள்ள முடியும். அவற்றை இங்கு காணலாம்.

வயிறு வலி வர காரணங்கள்

  • வாயுத் தொல்லை
  • தாய்ப்பால் தருவதில் ஏதேனும் பிரச்னை
  • உணவு தருவதில் ஏதேனும் பிரச்னை
  • அதிகமாக உணவை ஊட்டிவிடுதல்
  • பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் அதிகமாகி விடுதல்
  • சீரற்ற செரிமான இயக்கம்
  • காலிஃப்ளவர், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்களை அதிகமாக உண்ணுதல்
  • மலச்சிக்கல்
  • மலம் கழிக்க சிரமப்படுதல்
  • போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது
  • ரிஃப்ளக்ஸ் பிரச்னை

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

  • இறால்
  • கருவாடு
  • காபி, டீ
  • சீஸ், வெண்ணெய்
  • சிட்ரஸ் பழங்கள்
  • அதிக மசாலா சேர்த்த உணவுகள்
  • அதிக மசாலா சேர்த்த இறைச்சி வகைகள்
  • தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், புரோக்கோலி அதிகமாக உண்ண கூடாது.
  • பீன்ஸ்
  • சிக்கன்
  • நட்ஸ்
  • அதிக அளவில் முட்டை சாப்பிடுவது
  • பருப்புகளை அதிகமாக உட்கொள்வது
  • சாக்லேட், கேக், பீசா சாப்பிடுவது.
இதையும் படிக்க: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி? cakes
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

குழந்தையின் வயிறு வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தாய்ப்பால் மூலமாக வயிறு வலி சரியாகும்

தாய்மார்கள் சில உணவுகளை உண்பதால் அச்சத்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று குழந்தை குணமாக உதவுகிறது.
  • பப்பாளி
  • இஞ்சி
  • பெருங்காயம்
  • பூண்டு
  • சீரக தண்ணீர்
  • ஓமம் தண்ணீர்
  • பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டும்.

தாய்மார்கள் பூண்டு சாப்பிடுதல்

அன்றாடம் தங்களது உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க, தாய்ப்பால் வழியாக பூண்டின் சத்து சேர்ந்து குழந்தையின் வயிற்று வலியை சரியாக்கும்.

ஏப்பம் வர செய்தல்

குழந்தைக்கு உணவு ஊட்டிய பின்னும் தாய்ப்பால் கொடுத்த பின்னும் குழந்தையை உடனே படுக்க வைக்க கூடாது. முதுகில் தட்டி ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும். இதையும் படிக்க: 0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...

சைக்கில் ஓட்டுதல்

சிறு குழந்தைகள் படுத்துக்கொண்டே இருப்பதால் தினமும் சில நிமிடங்கள் குழந்தையின் கை கால்களை சைக்கிள் ஓட்டுவது போல லேசாக, மிதமாக கை கால்களை அசைத்து விடுங்கள். இதனாலும் வயிற்றில் சேர்ந்துள்ள வாயு வெளியேறும்.

இளஞ்சூடான ஒத்தடம்

குழந்தையின் வயிற்றில் இளஞ்சூடான ஒத்தடத்தை 3-5 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். இதனால் வயிற்றில் ரத்த ஓட்டம் நன்கு பாயும். வயிறு வலி நீங்கும்.

மசாஜ் செய்யுங்கள்

சமமான தளத்தில் குழந்தையை படுக்க வைத்து, தேங்காய் எண்ணெயை வயிற்றில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். தொப்புள் சுற்றி எண்ணெயைத் தடவுங்கள். இதனால் செரிமானம் சீராகும். வாயு நீங்கும்.

யோகர்ட்

கால் கப் யோகர்ட்டை குழந்தைகளுக்கு ஊட்டிவிடுங்கள். இதனால் நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றில் உருவாகும். வயிற்றுப்போக்கு இருக்கும் சமயத்தில் யோகர்ட் தருவது நல்லது.

பெருங்காயம்

இளஞ்சூடான தண்ணீரில் சிறிதளவு பெருங்காய தூளை குழைத்து, அந்த பேஸ்டை குழந்தையின் தொப்புள் பகுதியில் தடவிட வாயு நீங்கும். இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

பாத அழுத்த சிகிச்சை

foot reflexology for babies Image Source : Parenting Circle குழந்தையின் பாதத்தின் நடுப்பகுதியின் உள்ள புள்ளிகள் வயிறு தொடர்பானவை. அங்கு சில நொடிகள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க கொடுக்க வயிறு வலி பிரச்னை சரியாகும்.

இஞ்சி

சிறிதளவு இஞ்சியை துருவி, ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் 5 நிமிடங்கள் போடவும். அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். 2 வயது முடிந்த குழந்தைகளுக்கான வைத்தியம் இது.

வயிறு வலி வராமல் தடுப்பது எப்படி?

சரியான நிலையில் குழந்தையை வைத்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தேவையான போதெல்லாம் தாய்ப்பாலும் உணவும் வழங்க வேண்டும். பசிக்காக குழந்தையை ரொம்ப நேரம் அழ விடகூடாது. குழந்தையின் கை, கால்கள் மற்றும் உடல் முழுவதும் சுத்தமாகப் பராமரிக்கவும். குழந்தையை தூக்குபவர்கள் சுத்தமாக இருப்பதும் முக்கியம். இதையும் படிக்க: இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null