பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னையில் இதுவும் ஒன்று, சிறுநீர் தொற்று. திரும்பத் திரும்ப வந்து தொல்லைக் கொடுக்கும். வெளியிலும் சொல்ல முடியாமல் தவிக்க நேரிடும். சிலருக்கு பயணம் மேற்கொண்டாலே வந்து விடுகிறது. சிறுநீர் தொற்று பெண்களுக்கு வராமல் தடுப்பது எப்படி? வந்தால் என்ன செய்யலாம்? சிம்பிளான வீட்டு வைத்திய முறையிலே நிரந்தர தீர்வும் காணலாம்.
சிறுநீர் தொற்று என்றால் என்ன?
சிறுநீரகங்கள், யுரேட்டர், சிறுநீர் பை அல்லது யுரேத்திரா ஆகிய இடங்களில் ஏற்படும் தொற்றே சிறுநீர் தொற்று என்பார்கள்.
எப்படி சிறுநீர் தொற்று வருகிறது?
மலத்தில் உள்ள கிருமிகள் வழியாகவோ, பூஞ்சை, வைரஸ்கள் வழியாகவோ சிறுநீர் தொற்று வருகிறது.
Escherichia coli and Staphylococcus saprophyticus எனும் இரண்டு கிருமிகளால் பெரும்பாலும் 80% சிறுநீர் தொற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க: மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?
என்னென்ன அறிகுறிகள்?
சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல்
அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது
அடர்நிறத்தில் சிறுநீர் கழிப்பது
துர்நாற்றமுடன் சிறுநீர் கழிப்பது
சிறுநீர் கழித்தாலும், கழிக்காமல் இருப்பது போலவே ஓர் உணர்வு
பெண்ணுறுப்பு அதை சுற்றி உள்ள இடத்தில் வலி, எரிச்சல்
ஆணைவிட பெண்களே இந்த சிறுநீர் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில், யூரெத்ரா எனும் டியூப் சிறுநீரை சிறுநீர் பைக்கு எடுத்து செல்லும். இது இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களைவிட சிறியதாக இருக்கும். இதனால் கிருமி எளிதில் பரவ வாய்ப்பாகிறது.
இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை... தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?
வீட்டு வைத்திய முறைகள்
சிறுநீர் தொற்று வராமல் தடுப்பது எப்படி?
நீர்ச்சத்து உடலில் அதிகமாக இருந்தால் சிறுநீர் தொற்றை வராமலே தடுக்க முடியும். நிறையத் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போதெல்லாம் சிறுநீர் கழித்துவிட்டால் கிருமிகள் உடலில் தங்காது. சிறுநீர் வழியாக வெளியே சென்றுவிடும்.
சிறுநீர் அடக்கினாலோ, உணர்வு வந்த பின்னும் சிறுநீர் போகாமல் இருந்தாலோ நிச்சயம் சிறுநீர் தொற்று வரும்.
பகல் முதல் மாலை வரை நிறையத் தண்ணீர் குடிப்பது நல்லது.
விட்டமின் சி சத்து உடலில் அதிகமாக சேர்ந்தால், நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். கிருமிகளை எதிர்த்து போரிட உடலால் முடியும். சிறுநீர் தொற்று கிருமிகளை அழிக்கும்.
பழங்கள், காய்கறிகளில் விட்டமின் சி சத்து கிடைக்கும்.
சிட்ரஸ் பழங்கள், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறி பழங்களில் அதிக அளவு விட்டமின் சி சத்து கிடைக்கும்.
தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளில் உள்ள ப்ரோபயாட்டிக் சத்துகள் வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை மேற்சொன்ன உணவுகளில் உள்ள நல்ல கிருமிகள் அழிக்கும்.
சிறுநீர் கழித்துவிட்டு சரியாக சுத்தம் செய்யாமல் உடலுறவு கொண்டாலும் சிறுநீர் தொற்று வரும்.
எப்போதுமே மலம் கழித்துவிட்ட பிறகு சுத்தம் செய்யும் போது, முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னிருந்து முன் சுத்தம் செய்தால் கிருமிகள் பரவி சிறுநீர் தொற்று ஏற்படும்.
இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது?
மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் சிறுநீர் தொற்று ஏற்படலாம்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
சிறுநீர் தொற்றுக்கான நிரந்தர தீர்வுகள்…
40 நாட்களுக்கு கீழ் கண்ட மருத்துவத்தைப் பின்பற்றுங்கள்… இவையெல்லாம் நிரந்தர தீர்வாகும்.
கிராம்பு எண்ணெயை இளஞ்சூடான நீரில் கலந்து அடிவயிற்று உறுப்புகளைக் கழுவுங்கள்.
கல்லுப்பை இளஞ்சூடான நீரில் கலந்து கழுவி வர சிறுநீர் தொற்று சரியாகும்.
தயிரால் கழுவுவது நல்லது.
வெந்தயத்தை இளநீர் அல்லது மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.
எலுமிச்சை சாறை இளஞ்சூடான நீரில் கலந்து தினமும் குடிக்க வேண்டும்.
சின்ன வெங்காயத்தைக் கழுவி, கடித்து மென்று சாப்பிடுங்கள்.
சின்ன வெங்காயத்தை இடித்து அதில் அரை டம்ளர் இளஞ்சூடான நீரைக் கலந்து குடிக்கலாம்.
சாதம் வடித்த நீரில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குடித்து வரலாம்.
இதையும் படிக்க: 3 மாதத்தில் பிசிஓடியை விரட்டும் சிம்பிள் வீட்டு வைத்தியம்
2 சின்ன வெங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு சூடேற்றி, 2 நிமிடம் கொதிவிட்டு இறக்கிவிடுங்கள். இதை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கலாம். 40 நாட்களுக்கு குடித்து வரலாம்.
மிகவும் மோசமான சிறுநீர் தொற்றாக இருந்தால் ஒரு நாளைக்கு 4-5 இளநீர் குடிப்பது நல்லது.
4 டீஸ்பூன் உளுந்தை நன்றாகக் கழுவி, ஒரு சொம்பு நீரில் போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கலாம். பிறகு இந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வருவது நல்லது.
இளநீரில் சீரகம் கலந்து குடிக்க வேண்டும். வாரம் 4 முறை இப்படி குடிப்பது நல்லது.
டீ, காபி தவிர்த்துவிட்டு நீர்மோரை குடிக்க வேண்டும்.
இஞ்சி பால், இஞ்சி காபி குடிக்கலாம்.
பன்னீர் ரோஜா பூ கிடைத்தால் அவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
இளஞ்சூடான பாலில் பனங்கற்கண்டு சேர்த்து இரவில் குடிக்க வேண்டும்.
இதையும் படிக்க: வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…
சிறுநீர் தொற்றுக்கு ஒரே நாளில் நிரந்தர தீர்வு...
ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். ஒரே நாளில் சரியாகும்.
தர்பூசணி பழம் அல்லது தர்பூசணி ஜூஸை 8- 10 டம்ளர் ஜூஸ் குடிக்க ஒரே நாளில் சிறுநீர் தொற்று சரியாகும்.
10-12 வெள்ளரிக்காயை ஒரே நாளில் சாப்பிட சிறுநீர் தொற்று சரியாகும்.
நீர்மோரை 3 லிட்டர் அளவு குடிக்கலாம். ஒரே நாளில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதில் சிறிதளவு கொத்தமல்லி ஜூஸ் கலந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 6 டம்ளர் கரும்பு ஜூஸை குடித்து வந்தாலும் உடனடி தீர்வு கிடைக்கும்.
இதையும் படிக்க: தாயுக்கு தேவையான 5 ஊட்டச்சத்துகள்… இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null