வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

வெள்ளைப்படுதலை குணமாக்கும் வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அவர்கள் தங்கள் உடலை கவனித்துக் கொள்ள வேண்டும். வைத்தியம் பார்க்காமல் விட்டுவிட கூடாது. வெள்ளைப்படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். மஞ்சள் நிறம், பச்சை நிறம், அரிப்பு எடுத்து வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால், தங்களைப் பராமரிக்க அதிக கவனம் செலுத்துவது நல்லது. மகப்பேறு மருத்துவரை ஒருமுறை சந்திந்துவிட்டு வரலாம்.

பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்னை... வீட்டி வைத்திய முறைகள்...

சிட்ரஸ் - விட்டமின் சி கூட்டணி

எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக குடித்து வரலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு பழத்தை பழமாகவும் சாப்பிட்டு வரலாம். விட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்டும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அழித்துவிடும். அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தை இந்தப் பழங்கள் போக்கும்.

மஞ்சள் பால் - கோல்டன் மில்க்

turmeric milk Image Source : madeleineshaw ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் எல்லாக் கிருமிகளும் நீங்கிவிடும். வெள்ளைப்படுதல் பிரச்னையே இருக்காது. இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி? 

உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல்

சில பேருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். டென்ஷன், ஒற்றைத் தலைவலி, பதற்றம், அதிக கோபம் இப்படியான அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை அடிக்கடி வரும். ஒரே நாளில் 2-3 இளநீர் குடிக்கலாம். அதிகமான காய்கறி, பழங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் வெள்ளைப்படுதல் நிற்கும். வாரம் 3-4 முறையாவது, ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிக்கலாம். இதைப் பழக்கமாக்குங்கள்.

தண்ணீர் பெஸ்ட் வைத்தியம்

ஒரு பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் அவசியம். வெப்ப மண்டலமாக இருந்தால், தமிழ்நாடு போல… 2 லிட்டர் மேலேகூட குடிக்க வேண்டும். நம் உடலில் நீர்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலே எல்லாக் கிருமியும் ஃப்ளஷ் அவுட்டாகி வெளியே வந்துவிடும். அந்த அளவுக்கு தண்ணீருக்கு கிருமிகளை நீக்கும் சக்தி உண்டு.

முன்னே இருந்து பின்

மலம் கழித்து முடித்த பின், கழுவும்போது முன்னே இருந்து பின் எனக் கழுவ வேண்டும். பின்னிருந்து முன்னாக கழுவினால் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். துர்நாற்றம், அரிப்பு, வெள்ளைப்படுதல் பிரச்னை அதிகமாக இருக்கும். திரும்பத் திரும்ப வரும். இந்த முன்னிருந்து பின் கழுவும் பழக்கம் மிக மிக முக்கியம். இல்லையெனில் திரும்ப திரும்ப வெள்ளைப்படுதல், சிறுநீர் தொற்று போன்றவை ஏற்படும். எந்த மருத்துவம் எடுத்தாலும் சரியாகாது.

ஆலிவ்

olive oil Image Source : Medical News Today ஆலிவ் எண்ணெய் கலந்த பழ சாலட்டை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 2-3 ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் எண்ணெயை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள். ஆலிவ்வில் ஆன்டி-லுக்கோரியா தன்மை உள்ளதால் வெள்ளைப்படுதல் பிரச்னையை தீர்க்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் 48 நாட்களிலே முழுமையான குணம் கிடைக்கும். ஆன்டி-இன்ஃப்ளேமட்டரி, ஆன்டி-ஆக்சிடேட்டிவ் தன்மை இருப்பதால் நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணப்படுத்தும். இதையும் படிக்க: நகங்கள் காட்டும் நோய் அறிகுறி... நகங்களைப் பராமரிப்பது எப்படி? 

கற்றாழை ஜூஸ்

கர்ப்பப்பையை வலுவாக்குவதில் முதல் மருந்து, கற்றாழைதான். வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு, பிசிஓடி, சிஸ்ட், கர்ப்பப்பை புற்றுநோய் என எந்த கர்ப்பப்பை தொடர்பான மருந்துக்கும் கற்றாழை ஜூஸ்தான் பெஸ்ட். 48 நாளைக்கு வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் எடுத்து, அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், உங்களது ஸ்கேன் ரிப்போர்ட்டில் பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள். அந்த அளவுக்கு சிறந்த மருந்து கற்றாழை.

அன்னாசிப்பூ

herbal for white discharge Image Source : DailyShop வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இதுவும் ஒரு மருந்தாக செயல்படும். தொற்றால், கிருமிகளால் வந்த வெள்ளைப்படுதலை முழுமையாக நீக்கும். இந்த அன்னாசி பூ ஒன்றை எடுத்து, இடித்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு பின்னர் வடிகட்டி அருந்துங்கள். இதையும் படிக்க: நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட நீங்கும்... இயற்கை வழி வைத்தியம் 

யோகர்ட், தயிர், மோர்

இந்த மூன்றையும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெள்ளைப்படுதலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். இந்த மூன்றிலும் ப்ரோபயோட்டிக் உள்ளதால் வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாகும்.

மாதவிடாய் காலம்

மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு 4-5 சானிடரி நாப்கின்களை மாற்றுவது மிக மிக நல்லது. மாதவிடாய் காலத்துக்கு எனத் தனி உள்ளாடையை வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் உள்ளாடையை காய வைக்க வேண்டும். உள்ளாடையை எப்போதுமே அயன் செய்த பிறகு அணியுங்கள். இதனால் கிருமிகள் அழியும்.

5 ஹோம்மேட் வெஜினல் வாஷ் செய்வது எப்படி?

  1. யோகர்ட் அல்லது தயிரை பிறப்புறுப்பில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சிறப்பு.
  2. திரிபலா - நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய். இவை கலந்ததுதான் திரிபலா. இதை 1 லிட்டர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இளஞ்சூடாக்கி அந்த இடங்களில் ஊற்றி கழுவலாம். உடனடியாக ரிசல்ட் கிடைக்கும். tripala remedyImage Source : JustDoc
  3. 8 டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு இளஞ்சூடாக்கி, அந்த இடங்களில் கழுவலாம். கிருமிகளை நீக்கிவிடும்.
  4. 8 கப் தண்ணீரில் டீ ட்ரி எண்ணெயின் (6-8) துளிகளை விட்டு, பிறப்புறுப்பில் ஊற்றி கழுவ வேண்டும். குளித்து முடித்த பிறகு இப்படி கழுவி விட்டு வர 2 வாரத்திலே பிரச்னை சரியாகிவிடும். துர்நாற்றமும் நீங்கும்.
  5. ஒரு கப் தண்ணீரில் ஃப்ரெஷ் கற்றாழை ஜெல்லை போட்டு கலக்கி, அதை வெஜினல் வாஷ்ஷாக பயன்படுத்துங்கள். 2 வாரத்திலே குணமாகிவிடும்.
இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… ரத்தசோகையை 100% விரட்டும் உணவுகள்... 

வெள்ளைப்படுதலை தடுக்கவும் அந்தரங்க உறுப்புகளில் உள்ள துர்நாற்றத்தை போக்கவும் என்ன செய்யலாம்?

மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதைக் கட்டாயமாக நிறுத்தி கொள்ளுங்கள். லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸ், டைட்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம். சிந்தட்டிக் உள்ளாடையை அவசியம் தவிருங்கள். தளர்வான, காற்றோட்டமான பருத்தி உள்ளாடையை அணியுங்கள். முடிந்தவரை இண்டியன் டாய்லெட் பயன்படுத்துங்கள். வெஸ்டர்ன் கழிப்பறையை தவிருங்கள். வெந்நீரில் குளிக்க கூடாது. வெந்நீரை அந்தரங்க உறுப்புகளில் ஊற்றி கழுவ கூடாது. இதனால் நல்ல பாக்டீரியாகூட நீங்கிவிடும். இளஞ்சூடாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் உண்ண கூடாது. வாசம் மிகுந்த சோப், சானிடரி நாப்கின், பவுடர் போட கூடாது. 3 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்றுங்கள். ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null