ஆண், பெண் குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

ஆண், பெண் குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குழந்தைகளின் சோப், பாடி வாஷ்ஷில் கெமிக்கல்கள் கலந்து வருவதாக சொல்லப்படுகின்றன. எனவே இயற்கையான, ஆரோக்கியமான முறையில் நாமே நம் குழந்தைகளுக்கு குளியல் பொடி தயாரிப்பதே சிறந்த வழி.அதை இரண்டு முறைகளில் செய்ய முடியும். எப்படி எனப் பார்க்கலாமா …

குளியல் பொடி தயாரிக்கும் முறை 1 

தேவையானவை

  • பச்சைப்பயறு – ½ கிலோ
  • கடலப்பருப்பு – ½ கிலோ
  • கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம் (ஆண் குழந்தைக்கு – 10 கிராம்)
  • பூலாங்கிழங்கு – 10 கிராம்
  • ஆவாரம்பூ – 50 கிராம்
  • ரோஜா – 50 கிராம்
  • செம்பருத்தி பூ – 10
  • வேப்பிலை – 30 கிராம்
  • துளசி – 30 கிராம்
  • வெட்டிவேர் – 10 கிராம்

rose petals for babies bath powder

செய்முறை

  • மேற்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
  • இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும்.
  • நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.
  • இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  • இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

யார் பயன்படுத்தலாம்?

  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
  • ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்.

natural herbal babies bath powder

பலன்கள்

  • குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது.
  • குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
  • இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்.
  • துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும்.
  • உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது.
  • வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
  • சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும்.
  • பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும்.
  • வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
  • பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.

குளியல் பொடி தயாரிக்கும் முறை 2

தேவையானவை

  • ரோஜா இதழ் – 150 கிராம்
  • பச்சைப்பயறு – 200 கிராம்
  • கடலப்பருப்பு – 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்  (ஆண் குழந்தைக்கு – 10 கிராம்)
  • வேப்பிலை – 50 கிராம்
  • ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்
  • பாதாம் – 10
  • எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்
  • செம்பருத்தி பூ – 10

turmeric for babies bath powder

செய்முறை

  • இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.
  • கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி.

யார் பயன்படுத்தலாம்?

  • குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
  • ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.

bath powder tamil

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

பலன்கள்

  • தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.
  • இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும்.
  • மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்.
  • வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
  • சருமத்தில் இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும்.
  • சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null