குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுக்க கூடாது. கெடுதி என்கிறோம். ஏனெனில் அதில் மைதா கலக்கப்படுகிறது. வீட்டிலே ஆரோக்கியமான முறையில் மைதா சேர்க்காமல் பிஸ்கெட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு அவென் தேவையில்லை. குக்கரிலே பிஸ்கெட் செய்ய முடியும்.
சர்க்கரை சேர்க்காமல் 9 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பிஸ்கெட்களை செய்து கொடுக்கலாம்.
சர்க்கரை சேர்த்து 1 வயது + குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
நோ அவென்…. குக்கரில் செய்யலாம் பிஸ்கெட்...
கோதுமை பிஸ்கெட்
தேவையானவை
கோதுமை மாவு - ½ கப்
பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை பொடித்தது - ½ கப்
உப்பு - ½ டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ½ டீஸ்பூன்
பால் - ½ டம்ளர்
நெய் - 50 கிராம்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பவுலில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, பாலிஷ் செய்யாத சர்க்கரை, நெய், வெண்ணெய் ஆகியவற்றை போட்டு கைகளால் நன்கு கலக்கவும்.
கைகளால் நன்கு கலந்த மாவில், பால் சேர்க்கவும்.
பால் சேர்த்த பின் நக்கு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி மாவு பதத்தில் மாவு கிடைக்கும்.
அதை கோதுமை மாவில் போட்டு பிரட்டி கொள்ளவும்.
சப்பாத்தி உருட்டுகின்ற கட்டையிலே இந்த மாவை வைத்து, திரட்டிக்கொள்ளவும்.
கெட்டியாகத் திரட்டவும். அதில் சின்ன வளையல் அளவு டிபன் பாக்ஸ் மூடி அல்லது வேறு ஏதெனும் மூடியை வைத்து வட்டமாக மாவை கட் செய்து கொள்ளவும்.
கனமான பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். அதில் நெய்யை நன்கு தடவி கொள்ளவும். நீங்கள் எடுக்கும் இந்த பாத்திரம் குக்கருக்குள் வைக்கும்படியான அளவில் இருக்க வேண்டும்.
குக்கரில் டேபிள் சால்டை போட்டு பரப்பி கொள்ளவும். ஒரு லேயர் போல பரப்பி கொள்ளவும். அதன் (உப்பின்) மேல் குக்கரின் அடிபாகம் மூடும் அளவான தட்டை திருப்பி போட்டு மூடவும்.
அதாவது, தட்டை தலைகீழாக மூடவும்.
கனமான பாத்திரத்தில் நெய் தடவி வைத்தீர்களே, அதில் நீங்கள் கட் செய்த பிஸ்கெட் மாவைப் பரவலாக வைக்கவும்.
இந்தப் பாத்திரத்தை அப்படியே குக்கரில் வைத்துவிடவும்.
குக்கர் மூடியில் கேஸ் கட் வைத்து, மூடி 15 நிமிடங்கள் சிம்மிலே வைக்கவும். விசில் போட கூடாது.
15 நிமிடத்தில் கோதுமை பிஸ்கெட் வெந்துவிடும்.
ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு தரக்கூடிய கோதுமை பிஸ்கெட் தயார்.
இதையும் படிக்க: 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி...
பட்டர் (வெண்ணெய்) மற்றும் சாக்கெட் பிஸ்கெட்
தேவையானவை
வெண்ணெய் - 150 கி
உப்பு - ஒரு சிட்டிகை
பொடித்த பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை - ½ கப்
கோதுமை மாவு - 250 கிராம்
கொகோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வெண்ணெய் மிகவும் சாஃப்டாக இருப்பது நல்லது. 2 மணி நேரத்துக்கு முன்பே வெண்ணெயை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வையுங்கள்.
ஒரு பெரிய பவுலில் வெண்ணெயை போட்டு, அதற்கேற்ற கரண்டியில் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
நன்றாக பீட் செய்ய வேண்டும். பீட் கரண்டியால்தான் இதை சிறப்பாக செய்ய முடியும். சாதாரண கரண்டியால் அவ்வளவாக முடியாது.
எலக்டிரிக் பீட் இருந்தால் உங்களது வேலை இன்னும் சுலபம்.
பீட் செய்த வெண்ணெயில், ஒரு சிட்டிகை உப்பு, பொடித்து வைத்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இதையெல்லாம் சேர்த்து மீண்டும் பீட்டரால் நன்கு கலக்கவும்.
இதில் 250 கிராம் கோதுமை மாவு சேர்க்கலாம்.
மீண்டும் நன்கு பீட்டரால் முடிந்தவரைக் கலக்கவும்.
பின்னர் கைகளால் நன்கு பிசையவும்.
கெட்டியான மாவு போல கிடைக்கும்.
இந்த கெட்டியான மாவை இரண்டாகப் பிரித்து உருண்டை செய்யுங்கள்.
ஒரு உருண்டை சாதாரண வெண்ணெய் பிஸ்கெட் செய்ய பயன்படுத்தலாம்.
இன்னொரு உருண்டையில் சாக்லேட் பிஸ்கெட் செய்ய பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
கோகோ பிஸ்கெட் செய்முறை
ஒரு பாதி உருண்டையில் ஒரு டேபிள் ஸ்பூன் கொகோ பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். கைகளால் பிசையவும்.
சாக்லேட் பிஸ்கெட் மாவு தயார்.
பிஸ்கெட் பேக் செய்வது எப்படி?
இரண்டுவித பிஸ்கெட் மாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
வெண்ணெய் பிஸ்கெட் மாவை பிளாஸ்டிக் கவரில் நீட்டாக உருட்டி வைக்கவும்..
பிளாஸ்டிக் கவரால் அப்படியே இந்த மாவை சுற்றிக் கொள்ளவும்.
இதேபோல சாக்லேட் மாவையும் நீட்டாக, உருட்டி பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொள்ளவும். கட் செய்ய ஏற்றதுபோல வைக்கவும்.
உருட்டி வைத்தால் வட்ட ஷேப்பில் கட் செய்யலாம்.
4 பக்கமும் சமமாக தட்டி (முழு பாக்கெட் பிரெட் போல), நீட்டாக வைத்தால் சதுர வடிவில் கட் செய்யலாம்.
நீங்கள் கட் செய்ய ஏற்றதாக வைக்கவும். இது உங்கள் விருப்பம்.
இந்த இரண்டு மாவையும் ஃப்ரீசரில் 20 நிமிடங்கள் வைக்கவும். கட் செய்ய எளிமையாக இருக்கும் என்பதால் ஃபிரிட்ஜில் வைக்கிறோம்.
குக்கரில் ஒரு லேயர் தூள் உப்பை சேர்க்கவும். குக்கர் அடிபிடிக்காமல் இருக்க அதன் அடிப்பகுதி முழுவதும் உப்பு சேர்க்கவும்.
அதற்கு மேல் ஒரு தட்டை கவிழ்த்து மூடலாம்.
குக்கரை மூடி கொள்ளவும். கேஸ் கட் வைக்கலாம். ஆனால், குக்கர் வெயிட் போட வேண்டாம்.
குக்கரை மூடி சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் சூடேற்றிக்கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து, அந்த இரண்டு மாவுகளையும் ஸ்லைஸ் போட்டுக் கொள்ளுங்கள். பிடித்த வடிவத்தில்.
இட்லி தட்டில் ஒரு பட்டர் பேப்பர் வைத்து, அதில் பிஸ்கெட்களை பரப்பி வைத்து 20 நிமிடங்கள் அப்படியே மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
சாக்லேட் மற்றும் வெண்ணெய் பிஸ்கெட் தயார்.
இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null