ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு காலையும் மாலையும் சத்தான ஹெல்த் டிரிங்கை நாம் கொடுக்க வேண்டியது இருக்கும். கடையில் விற்கும் சத்து தரும் பவுடர்களின் விலையோ ரொம்ப அதிகம். அதை அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியாது. மேலும், வீட்டிலே நாம் ஹெல்த் டிரிங்க் பவுடரை (Homemade Bournvita Powder) செய்து கொண்டால் செலவும் மிச்சம். ஆரோக்கியமாகவும் இருக்கும். வீட்டிலே நாம் ஹெல்த் டிரிங்க் பவுடர் (Homemade Health Drink Powder) செய்வது எப்படி எனப் பார்க்கலாமா…

ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் (Homemade Bournvita Powder)

தேவையானவை

 • கொகோ பவுடர் – 1 ½ டேபிள் ஸ்பூன்
 • பால் பவுடர் – 50 கிராம்
 • பிரவுன் சர்க்கரை – 50 கிராம்
 • முந்திரி – 10
 • பாதாம் – 10

cocoa powder

செய்முறை

 • நான் ஸ்டிக் பானில் பிரவுன் சர்க்கரையை கொட்டி வறுக்கவும்.
 • மிதமான தீயில் வையுங்கள்.
 • கேரமல் நிறத்தில் பாகு போல வரும். டார்க் பிரவுன் நிறத்தில் பாகு வர வேண்டும்.
 • 3 நிமிடங்கள் வரை கைவிடாமல் அருகிலிருந்தே கிளறி கொண்டே இருக்கவும்.
 • தீய்ந்து விடுவதற்கு முன்னரே, உடனே அடுப்பை நிறுத்தி விடவும்.
 • அதில், கொகோ பவுடரை கொட்டி, நன்கு கலக்கவும். நன்றாக கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்

milk powder for kids

 • பின்னர், பால் பவுடரை கொட்டி நன்கு கலந்து கொண்டே இருக்கவும்.
 • கட்டி கட்டியாக இருக்கும். கட்டி கட்டியாக வரும்.
 • இதை அப்படியே ஒரு தட்டில் போட்டு ஆறவிடுங்கள்.
 • இப்போது இன்னொரு பானில் முந்திரியை போட்டு பிரவனாக வரும் வரை வறுக்கவும். வறுத்தவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • அதுபோல, பாதாமை உடைத்து போட்டு வறுக்கவும்.
 • வறுத்த பாதாமையும் முந்திரியையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். நல்ல பவுடராக அரைக்கவும்.
 • இந்த நட்ஸை அரைக்கும்போது மிக்ஸியை சிறுக சிறுக திருப்பி அரைக்க வேண்டும். ஒரே அடியாக மிக்ஸியை ஓட விட்டால் பொடி ஈரமாகிவிடும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 உணவுகள்

badam for kids

 • இதை ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள்.
 • இப்போது நாம் ஆறவைத்த கொகோ – பால்பவுடர் கலவையை இன்னொரு புதிய, ஈரமில்லாத ஜாரில் போட்டு நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.
 • அரைத்து முடித்தவுடன் பவுலில் இருக்கும் நட்ஸ் பொடியுடன் இதை சேர்த்துக் கலக்குங்கள்.
 • காற்று புகாத டப்பாவில் இதைப் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
 • ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடர் ரெடி.
 • 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
 • ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். வெளியிலும் வைக்கலாம்.
 • 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிட ஏற்றது.

bournvita for kids

குறிப்பு

கெமிக்கல்ஸ், பதப்படுத்திகள் இல்லாததால் சீக்கிரமாக கட்டியாகிவிடும். எனவே உலர்ந்த, சுத்தமான டப்பாவில் போட்டு, உலர்ந்த ஸ்பூன் போட்டு பயன்படுத்துங்கள்.

20 நாட்கள் வரை மட்டும் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுத்த முறை தயாரியுங்கள். ஒரு மாதத்துக்கு தயாரித்து வைத்துக் கொண்டால் பவுடர் கட்டியாகும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், பவுடர் கெட்டு போகாது, அந்த பயம் வேண்டாம்.

கடையில் வாங்கினால் கிடைக்கும் நிறத்தைவிட குறைவாகவே நாம் தயார் செய்தால் கிடைக்கும். அவர்கள் நிறம் சேர்கிறார்கள். நமக்கு நிறம் முக்கியமில்லை. ஆரோக்கியமும் சுவையும் கெமிக்கல்கள் இல்லாதது என்பதே முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?

ஹெல்த் டிரிங்க் ரெசிபி

health powder milk

தேவையானவை

 • பால் – 1 டம்ளர்
 • ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடர் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
 • பிரவுன் சுகர் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

 • ஒரு டம்ளரில் பிரவுன் சுகர், ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடர் போட்டு வைத்துக்கொள்ளவும்.
 • இதில் சூடான, காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கவும்.
 • அவ்வளவுதான் வீட்டிலே சுவையான, ஆரோக்கியமான ஹெல்த் டிரிங்க் பவுடரில் தயாரித்த ஹெல்த் டிரிங்க் ரெடி.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

health powder for kids

பலன்கள்

 • உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கும்.
 • மூளை வளர்ச்சிக்கு உதவும்.
 • எலும்பு, பற்கள் உறுதியாகும்.
 • சருமம் பொலிவு பெறும்.
 • மாலை வேளை சத்து பானமாக அமையும்.
 • 2 மணி நேரம் வரை பசி தாங்கும்.
 • எனர்ஜியை கொடுக்கும்.

இதையும் படிக்க: வெயிலுக்கு இதமான 5 ஹெல்தி, டேஸ்டி சாலட்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null