ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு புதுமையான விஷயங்களில், அழகான வடிவங்களில், சுவையான முறையில் உணவுகளைக் கொடுத்தால்தான் அவர்களை சாப்பிட வைக்க முடியும். பொதுவாக வெள்ளை சர்க்கரையை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட பயன்படுத்த கூடாது. சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக நாம் டேட்ஸ் சிரப்பை  பயன்படுத்தலாம். அதை எப்படி செய்வது, எதற்கெல்லாம் டேட்ஸ் சிரப்பை பயன்படுத்தலாம் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஹோம்மேட் டேட்ஸ் சிரப் செய்வது எப்படி?

தேவையானவை

  • பேரீச்சம் பழம் – 25
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

  • விதைகளை நீக்கி பேரீச்சம் பழங்களைத் துண்டு துண்டாக அறிந்து கொள்ளவும்.
  • பாத்திரத்தில் தண்ணீரை தேவையான அளவு ஊற்றிக் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.
  • சுடுநீரில் பேரீச்சம் பழங்களை இரவில் போட்டு விட்டு ஊற விடவும்.

dates syrup for toddlers

Image Source: thegreencreator.nl

  • மறுநாள் காலை அதை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் பருத்தி துணியை விரித்து அதில் அரைத்து வைத்த பேரீச்சம் பழக்கூழை கொட்டி வடிகட்டவும்.
  • வடிகட்டிய பின் துணியில் இருக்கும் விழுதை மீண்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து மீண்டும் அதேபோல பருத்தி துணியில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
  • இப்போது பாத்திரத்தில் பேரீச்சப்பழ சிரப் தண்ணீர் ரெடியாகிவிட்டது.
  • இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • தொடர்ந்து கலந்து கொண்டே இருந்தால் 10 நிமிடங்களில் கெட்டியான பதத்திற்கு வரும்.
  • மிகவும் கெட்டியான பதத்துக்கு போக வேண்டாம். 10-12 நிமிடங்களில் தேன் பதத்திற்கு வந்தாலே போதுமானது. அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • ஆறியதும் சுத்தமான, உலர்ந்த கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம்.
  • ஹெல்தியான டேட்ஸியான டேட்ஸ் சிரப் இது.

dates syrup for babies

Image Source : myeatingspace.com

இதையும் படிக்க: 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்

எதற்கெல்லாம் டேட்ஸ் சிரப்பை பயன்படுத்தலாம்?

குழந்தைகளுக்கு பொதுவாக சர்க்கரை தர கூடாது. அதற்கு பதிலாக டேட்ஸ் சிரப் சேர்த்துக் கொள்ளலாம். சுவையும் சத்தும் கொடுக்கும்.

  • ஃப்ரூட் சாலட்டில் பயன்படுத்தலாம்.
  • ஜூஸ், ஸ்மூத்தி, கேக் வகைகள், இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.
  • பிரெட் சாண்ட்விச்சில் சேர்க்கலாம்.
  • சப்பாத்தி, இட்லி, தோசைக்கு டேட்ஸ் சிரப் மேலே ஊற்றிக் கொடுக்கலாம்.
  • பான் கேக், வீட்டிலே செய்ய கூடிய ஐஸ்கிரீம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
  • சத்துமாவு கஞ்சி, இனிப்பு கூழ் கஞ்சி வகைகளில் சேர்க்கலாம்.
  • குழந்தைகளுக்கு செய்ய கூடிய ப்யூரி வகைகளில் சேர்க்கலாம்.
  • பாலில் கலந்து கொடுக்கலாம்.
  • யோகர்டில் டாப்பிங்காக சேர்த்துக் கொடுக்கலாம்.
  • மில்க் ஷேக்கில் கலந்து கொடுக்கலாம்.

இன்னும் எத்தனையோ உணவு முறைகளில் இந்த டேட்ஸ் சிரப்பை நீங்கள் உணவில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

தேவையானவை

  • பேரீச்சம் பழங்கள் – 8
  • தண்ணீர் – 100 மில்லி

dates puree for toddlers

Image Source : stirringstew.com

செய்முறை

  • விதையை நீக்கிவிட்டு பேரீச்சம் பழங்களை அறிந்து 100 மில்லி தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். 5-7 நிமிடங்களுக்குள் வெந்ததும், அவற்றை எடுத்து அதே தண்ணீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • யோகர்ட்டுடன் சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் டேட்ஸ் ப்யூரி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

டேட்ஸ் சிரப் மற்றும் ப்யூரியின் பலன்கள்

  • எனர்ஜி பூஸ்டர் என இந்த டேட்ஸ் சிரப்பை சொல்லலாம்.
  • விட்டமின்கள், தாதுக்கள் என அனைத்துவித ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.
  • குழந்தைகளுக்கு உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடை போக்கும்.
  • இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை நீங்கும்.
  • குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
  • இதில் உள்ள ஃப்ரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  • அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், டேட்ஸ் எனும் பேரீச்சப்பழங்களை ‘இதயத்தின் நண்பன்’ என்று சொல்கிறது. இதயத்துக்கான சிறந்த உணவு என்கிறது.
  • வயிற்றில் உள்ள கெட்ட நுண்ணுயிரிகளை அழிக்கிறது.

இதையும் படிக்க: குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி? 

dates puree for babies

Image Source : jaysbakingmecrazy.com

  • இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கல்லீரலுக்கான பாதுகாப்பைத் தரும். கல்லீரல் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
  • வயிற்றுப் புண்கள், நெஞ்செரிச்சல் ஆகியவை வராது.
  • நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.
  • மூளைக்கு சிறந்த உணவு. வளர்ச்சிக்கு உதவும்.
  • குழந்தைகளின் பற்கள் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
  • ஈறுகள், பற்கள் உறுதியாகும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கும்.
  • விட்டமின் ஏ சத்து இருப்பதால் பார்வைத் திறன் மேம்படும்.
  • ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீ ராடிகல்ஸ் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…

டேட்ஸ் ப்யூரி, டேட்ஸ் சிரப் போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null