ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

கடையில் விற்கும் ஜாம் பல கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். பதப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும். இதைக் குழந்தைகளுக்கு பயன்படுத்துவது கெடுதி. வீட்டிலே நாம் ஆரோக்கியமான முறையில் ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம் செய்யலாம். உலர் பழங்கள், பைன் ஆப்பிள், ஸ்டாபெர்ரி, ஆப்பிள் ஆகிய பழங்களால் தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஜாம் செய்முறையைப் பற்றிப் பார்க்கலாம்.

4 வகையான ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

#1. ட்ரை ஃப்ரூட் ஜாம்

dry fruits jam

தேவையானவை

  • ப்ரூன்ஸ் - 5
  • விதை நீக்கிய பேரீச்சை - 4
  • கருப்பு உலர்திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
  • அப்ரிகாட் - 5

செய்முறை

  • ஒரு கப் தண்ணீரில் இவற்றை எல்லாவற்றையும் போடவும்.
  • 10-15 நிமிடங்கள் வரை மூடிபோட்டு வேகவிடவும்.
  • பின்னர் ஆறவிடவும்.
  • மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தவற்றைக் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு சேமிக்கவும்.
  • ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம் தயார்.

குறிப்பு

  • 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • பிரெட்டில் தடவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • சப்பாத்தியின் மேல் தடவி தரலாம்.
  • தோசையில் ஜாமை பரப்பி நட்ஸ் பவுடர் தூவி தரலாம்.
  • ஸ்மூத்தியில் கலந்து கொடுக்கலாம்.
  • 6 வாரம் வரை பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துங்கள்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

பலன்கள்

  • ஊட்டச்சத்துகள் நிரம்பியது.
  • ரத்தம் உற்பத்தியாக உதவும்.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • உடலுக்கு சக்தி அளிக்க கூடியது.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

#2.ஆப்பிள் ஸ்வீட் ஜாம்

apple jam

தேவையானவை

  • ஆப்பிள் - 2
  • அறிந்த அப்ரிகாட் - ½ கப்
  • விதை நீக்கிய பேரீச்சை - 5

செய்முறை

  • ஆப்பிளை 3 மணி நேரம் ஊறவைத்து, நன்றாக கழுவி கொள்ளுங்கள்.
  • விருப்பம் உள்ளவர்கள், தோல் நீக்கி கொள்ளலாம்.
  • ஆப்பிளை துண்டுகளாக அறிந்து கொள்ளுங்கள்.
  • மிக்ஸி ஜாரில் ஆப்பிள் துண்டுகள், ஆப்ரிகாட், பேரீச்சை ஆகியவற்றை போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைக்கவும்.
  • அடுப்பில் கனமானப் பாத்திரத்தை வைத்து, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அருகில் இருந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழித்துக் கெட்டியான பதத்துக்கு வந்ததும் இறக்கி விடலாம்.
  • சூடு ஆறிய பின் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு சேமிக்கவும்.

குறிப்பு

  • 6-8 வாரம் வரை சேமித்துப் பயன்படுத்தலாம்.

பலன்கள்

  • குழந்தைகளின் வயிற்றுக்கு நல்லது.
  • உடலுக்கு போஷாக்கைத் தரக்கூடியது.
  • மலச்சிக்கல் நீங்கும்.
  • மிகவும் ஹெல்தியான உணவு.
இதையும் படிக்க: 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

#3. ஸ்டாபெர்ரி ஜாம்

strawberry jam

தேவையானவை

  • ஸ்டாபெர்ரி - 15
  • பிரவுன் சர்க்கரை (பாலிஷ் செய்யப்படாத) - தேவையான அளவு

செய்முறை

  • பச்சை காம்பை நீக்கி சிறிய துண்டுகளாக ஸ்டாபெர்ரியை அறிந்து கொள்ளவும்.
  • அடிபிடிக்காத பாத்திரத்தில் அறிந்த ஸ்டாபெர்ரி பழங்களைப் போட்டு அதில் தேவையான சர்க்கரையை போட்டு கிளறவும்.
  • கொஞ்ச கொஞ்சமாக நீர்த்த தன்மையில் மாறும்.
  • இன்னும் சில நிமிடங்களில் ஓரங்களில் நுரை வர ஆரம்பிக்கும்.
  • அந்த நுரையை கரண்டியால் நீக்கிவிடுங்கள்.
  • இன்னும் சிறிது நேரம் அப்படியே விட ஜாம் பதத்தில் வரும்.
  • சிறிது ஜாமை எடுத்து தட்டில் போட்டால் அந்த தட்டை ஆட்டினாலும் அங்கும் இங்கும் ஓடாமல் ஜாம் அப்படியே இருந்தால், அந்த பதம்தான் சரி.
  • இந்தப் பதத்தில் ஜாமை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம்.
  • சூடு ஆறிய பின் கண்ணாடி பாத்திரத்தில் சேமிக்கவும்.

குறிப்பு

  • ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
  • 2 மாதம் வரை பயன்படுத்தலாம்.
  • பிரெட், சப்பாத்தி ரோல், தோசை ரோல், ஸ்மூத்தி, சாலட், கேக் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

பலன்கள்

  • விட்டமின் சி நிறைந்துள்ளது.
  • சருமத்துக்கு நல்லது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

#4. பைன் ஆப்பிள் ஜாம்

pineapple jam Image Source : Youtube

தேவையானவை

  • பைன் ஆப்பிள் - 1
  • பிரவுன் சுகர் (பாலிஷ் செய்யபடாத) - தேவையான அளவு
  • கிராம்பு - 3 (பொடியாக்கவும்)
  • எலுமிச்சை பழம் - ½

செய்முறை

  • தோல் நீக்கி பைன் ஆப்பிளை துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.
  • மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி கூழாக அரைத்துக் கொள்ளவும்.
  • கனமானப் பாத்திரத்தில் பைன் ஆப்பிள் கூழைப் போட்டு வேகவிடவும்.
  • இதனுடன் தேவையான சர்க்கரையை போட்டு கிளறவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து நன்கு வெந்தவுடன் கிராம்பு பவுடரை போட்டு கிளறவும்.
  • இன்னும் 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். பின்னர் அடுப்பை நிறுத்தி விடுங்கள்.
  • அடுப்பிலிருந்து இறக்கிய பின் அரை எலுமிச்சை பழச்சாறை ஜாமில் பிழிந்து கொள்ளுங்கள்.
  • நன்கு கிளறி ஆறவிடவும்.
  • பைன் ஆப்பிள் ஜாம் தயார்.

குறிப்பு

  • 1 வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • 6 - 8 வாரம் வரை பயன்படுத்தலாம்.

பலன்கள்

  • நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
  • எனர்ஜி பூஸ்டராக செயல்படும்.
  • விட்டமின் சி, ஏ நிறைந்தது.
  • வயிற்றுக்கு நல்லது.
இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்… ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null