ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி?

ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகள் தர வேண்டும் என நினைத்தால் அதற்கான முதல் சாய்ஸ். ஹெல்த் மிக்ஸ்தான். இதைப் பாலில் கலந்து ஹெல்த் டிரிங்காகவும் குடிக்கலாம். அல்லது இதன் மூலம் பல்வேறு ரெசிபிகள் செய்தும் குழந்தைக்கு கொடுக்கலாம். ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர்

தேவையானவை

தினை - 100 கிராம் ராகி - 100 கிராம் வெள்ளை சோளம் - 100 கிராம் பச்சைப்பயறு - 100 கிராம் கம்பு - 100 கிராம் கொண்டைக்கடலை - 100 கிராம் பார்லி அரிசி - 100 கிராம் கருப்பு உளுந்து - 100 கிராம் பொட்டு கடலை - 100 கிராம் ஏலக்காய் - 15 கிராம் பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 15

செய்முறை

இதையெல்லாம் வறுத்த பின் ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி வைத்து ஆற விட்டுங்கள். சூடு ஆறிய பின் மெஷினில் கொடுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். health mix powder Image Source : Padhuskitchen இதையும் படிக்க : குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

யார் சாப்பிடலாம்?

7 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. 7 மாதம் - ஒரு வயது குழந்தைக்கு உப்பு, சர்க்கரை தேவையில்லை. டேட்ஸ் சிரப் வேண்டுமானால் கலந்து கொடுக்கலாம்.

ஹெல்த் மிக்ஸ் பவுடரை எதற்கு பயன்படுத்தலாம்?

இந்தப் பொடியை சத்து மாவு கஞ்சியாக காலை, மாலையில் குடிக்கலாம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலை, மாலை ஆரோக்கிய பானமாக கலந்து கொடுக்கலாம். இதை காபி, டீக்கு பதிலாக பயன்படுத்துங்கள். ஹெல்த் மிக்ஸ் பவுடர் வைத்து லட்டு செய்யலாம். தோசை போல, அடை போலவும் செய்து கொடுக்கலாம்.

பலன்கள்

உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். புத்துணர்வு மிக்க உணவாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் புத்துணர்வாகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உடல் பலவீனம் ஆகாது. உடல் எடையை சீராக பராமரிக்க முடியும். பசி தாங்கும். நல்ல கொழுப்பு உடலில் சேரும். எலும்புகளுக்கு நல்லது. செரிமான தொந்தரவுகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. இதையும் படிக்க : 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி...

ஹெல்த் மிக்ஸ் ரெசிபி

ஹெல்த் மிக்ஸ் பவுடர் மில்க்

health mix powder Image Source : OycFresh

தேவையானவை

ஹெல்த் மிக்ஸ் பவுடர் - 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை - தேவையான அளவு பால் அல்லது தேங்காய் பால் - 1 டம்ளர்

செய்முறை

ஹெல்த் மிக்ஸ் பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். சூடான பாலில் இந்த பவுடரை போட்டு காய்ச்சுங்கள். தேங்காய் பால் எனில், சூடான தண்ணீரில் இந்தப் பவுடரை சேர்த்து, இனிப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்த பின் இறுதியில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.

ஹெல்த் மிக்ஸ் தோசை

தேவையானவை

ஹெல்த் மிக்ஸ் பவுடர் - தேவையான அளவு தோசை மாவு - 1 கரண்டி

செய்முறை

இரண்டையும் கலந்து தேவையானத் தண்ணீர் ஊற்றி மாவாக கரைக்கவும். தோசை போல ஊற்றி எடுக்கலாம். நெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். இதையும் படிக்க : வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

ஹெல்த் மிக்ஸ் லட்டு

health mix laddu Image Source : health mix ladoo

தேவையானவை

ஹெல்த் மிக்ஸ் - 1 கப் சர்க்கரை (பாலிஷ் செய்யாதது) - தேவையான அளவு நெய் - 2 டேபிள் ஸ்பூன் பாதாம் - 5 ஏலப்பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் இந்த பவுடரை போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். சிறிது நெய் விட்டு, கிளறவும். லட்டு பிடிக்கும் அளவு பதத்துக்கு சூடாக்கவும். பின் அடுப்பை விட்டு இறக்கி, லட்டு பிடிக்கவும். அதன் மேல் பாதாமை ஒட்டுங்கள். இதையும் படிக்க : ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null