உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

குழந்தைகளுக்கு பல விதமான முறையில் ரெசிபிகளை செய்து கொடுத்தால்தான் அவர்கள் ஒழுங்காக சாப்பிடுவார்கள். விளையாட்டு ஆர்வத்தில் சத்துகள் உள்ள உணவுகளை அவர்கள் தவறவிடலாம். காலை, மாலையில் ஊட்டச்சத்துகள் தரும் பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வீட்டிலே எளிமையான முறையில் விரைவில் செய்யக்கூடிய சத்துள்ள எனர்ஜி மால்ட் பானங்கள் தயாரிக்கும் முறைகளைப் பார்க்கலாம்.

3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி...

1.எனர்ஜி தரும் தானியங்கள் மால்ட்

தேவையானவை

பொட்டுக்கடலை - 100 கிராம் உளுந்து - 100 கிராம் முழு கோதுமை - 200 கிராம் பால் பவுடர் - 100 கிராம் கம்பு - 100 கிராம் கேப்பை - 200 கிராம் ஏலம் - 2 முந்திரி - 20

செய்முறை

உளுந்து, கோதுமை, கேப்பை, கம்பு ஆகிய தானியங்களை தனித்தனியாக வறுத்து கொள்ளவும். மிதமான தீயில் நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த தானியங்களுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பவுடராக அரைக்கவும். தானியங்கள் மால்ட் பவுடர் ரெடி. ரெசிபி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். கொதிக்கின்ற நீரில் இந்தப் பவுடர் 2 ஸ்பூன் மால்ட் பவுடர் போட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் காய்ச்சவும். தேங்காய்ப் பால் அல்லது பசும்பாலுடன் சேர்க்கலாம். வடிக்கட்டி குடிக்கலாம்.

பலன்கள்

மிகவும் ஊட்டச்சத்து மிக்க பானம். நோய் எதிர்ப்பு சக்தி தரும். உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் அளிக்கும். இதையும் படிக்க : 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி...

healthy malt

Image Source : Archanas Kitchen
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

2. நட்ஸ் ராகி மால்ட்

தேவையானவை

கேழ்வரகு மாவு - 4 ஸ்பூன் பால் - 1 கப் தண்ணீர் - அரை கப் ஏலத்தூள் - ஒரு சிட்டிகை நட்ஸ் பவுடர் - 1 ஸ்பூன் இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

செய்முறை

கேழ்வரகு மாவை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். அரை கப் பாலில் கேழ்வரகு மாவை கலந்து தனியாக வைக்கவும். மீதியுள்ள பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும். பால் கொதிக்கும்போது, கலந்து வைத்த கேழ்வரகு மாவை ஊற்றவும். நன்கு கலக்க வேண்டும். விடாமல் தொடர்ந்து கலக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றவும். இறுதியாக ஏலத்தூள், நட்ஸ் பவுடர் சேர்த்து கலக்கவும். சுவையான, சத்தான நட்ஸ் ராகி மால்ட் ரெடி

பலன்கள்

காலை வேளையில் குடிக்க ஏற்றது. மாலையிலும் குடிக்கலாம். எலும்புகள் வலுப் பெறும். இதையும் படிக்க : குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

ragi malt

Image Source : Hungry Forever

3. ராகி மால்ட் ரெசிபி

தேவையானவை

ராகி மால்ட் பவுடர் கேழ்வரகு மாவு ஏலம் - 2 முந்திரி - 2 ஸ்பூன் பாதாம் - 2 ஸ்பூன் குங்குமப்பூ - 1 சிட்டிகை ராகி மால்ட் ரெசிபி காய்ச்சிய பால் - 1 கப்

செய்முறை

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் அரைத்து வைத்துக்கொண்டால் ராகி மால்ட் பவுடர் ரெடி. அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் 2 கப் காய்ச்சிய பால் ஊற்றவும். அதில் 2 ஸ்பூன் ராகி மால்ட் பவுடர் சேர்க்கவும். நன்கு விடாமல் கலக்கவும். 4 நிமிடங்களிலே நன்கு கொதி வரும். மிதமான தீயில் இருப்பது நல்லது. தேவையான வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கவும். இனிப்பு கரைந்ததும் அடுப்பை அணைக்கலாம். வடிகட்டி குடிக்கலாம்.

பலன்கள்

தினமும் காலை, மாலை வேளையில் குடிக்க ஏற்றது. 2-3 வாரம் வரை ராகி மால்ட் பவுடரை பயன்படுத்தலாம். பின்னர் புதிதாகத் தயாரித்து கொள்ளலாம். ஊட்டச்சத்துகள் நிறைந்த பானம். உடனடி எனர்ஜி கிடைக்கும். சோர்வு நீங்கும். இதையும் படிக்க : ஹோம்மேட் ஹெல்த் மிக்ஸ் பவுடர் செய்வது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null