3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்...

3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்...

புதிய புதிய ஃபேஸ்வாஷ் மார்கெட்டில் கிடைக்கிறது. எதை வாங்குவது, எதை விடுவது எனத் தெரியாத நிலை. வீட்டிலே ஆர்கானிக் முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் செய்து பாருங்கள். பயன்படுத்தி பலன் கிடைத்த பிறகு நீங்கள் கடைக்கு சென்று எந்த ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ்வாஷ் பவுடரையும் வாங்க மாட்டீர்கள். அந்தளவுக்கு தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும். செய்முறை விளக்கங்கள் எப்படி எனப் பார்க்கலாம்.

#1..இன்ஸ்டன்ட் வொயிட் ஃபேஸ்வாஷ் பவுடர்

இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும்.

முகம் பிரகாசமாக மாறும். முகம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும்.

சருமம் பொலிவு பெறும்.

முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் நீங்கும்.

காம்ப்ளக்‌ஷன் இயற்கையாகவே அதிகரிக்கும்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

ஆண் குழந்தைகளுக்கு பயன்படுத்தினால், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாம்.

தேவையானவை

பால் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கிரீன் டீ ஃபைன் பவுடர் – 3 டீஸ்பூன்

செய்முறை

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும்.

நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.

இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

rose petals facewash powder

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

#2. ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்

வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும்.

இயற்கையாகவே சருமம் பளிச்சிடும்.

சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

இயற்கையான க்ளோ கிடைக்கும்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

தேவையானவை

ஓட்ஸ் – ¾ கப்

உலர்ந்த ரோஜா இதழ்கள் – ¾ கப்

பாதாம் – 8

செய்முறை

இதையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தேவையான அளவு எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி, நன்கு தேய்த்துக் குளிக்கலாம்.

இதையே ஃபேஸ் பேக்காக போட்டு கொண்டு 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

#3. ஹெர்பல் கிராம் ஃபேஸ் வாஷ் பவுடர்

கருத்திட்டுக்கள் நீங்கும்.

பருக்களின் வடு நீங்கும்.

முகத்தைப் பளிச்சிட வைக்கும்.

சருமம் முழுவதும் ஒரே பளிச் நிறத்தைக் கொடுக்கும்.

சீரான ஸ்கின் டோன் கிடைக்கும்.

சருமம் மிருதுவாகும்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம்.

தேவையானவை

அரிசி மாவு – அரை கப்

பச்சை பயறு மாவு – அரை கப்

கடலைமாவு – அரை கப்

ஓட்ஸ் பவுடர் – அரை கப்

herbal facewash powder

Image Source : DIY Natural

இதையும் படிக்க: நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

செய்முறை

இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம்.

#4. நோ மார்க்ஸ் ஃபேஸ் வாஷ் பவுடர்

பருக்கள் வராது.

ஏற்கெனவே வந்த பருக்கள் நீங்கிவிடும்.

கிளியர் ஸ்கின் கிடைக்கும்.

சீரான, அழகான சருமமாக மாறும்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

தேவையானவை

முல்தானி மெட்டி – 3 டேபிள் ஸ்பூன்

ரோஸ் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

வேப்பிலை பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

துளசி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – ¾ கப்

செய்முறை

இவற்றை எல்லாம் ஒரு பெரிய பவுலில் கலந்து, கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம்.

இதையே ஃபேஸ் பேக்காக போட்டு கொண்டு 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

homemade facewash powder

Image Source : Humble bee and me

இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

#5. ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்

சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

வாய் ஓரங்களில் கருப்பாக இருப்பது நீங்கி விடும்.

பரு, மரு எதுவும் வராது.

கிளியர் ஸ்கின் கிடைக்கும்.

தாய்மார்கள், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

தேவையானவை

முல்தானி மெட்டி – 4 டேபிள் ஸ்பூன்

கடலமாவு – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கண்ணாடி பாத்திரத்தில் இவற்றை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

நன்றாக ஸ்பூனால் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இதைக் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி முகம், கழுத்து, காது, காது ஓரம் ஆகிய இடங்களில் தேய்த்து 2 நிமிடம் அப்படியே சர்குலர் மோஷனாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள்.

குறிப்பு

இந்த ஃபேஸ்வாஷ் பவுடரை நீங்கள் ஃபேஸ் மாஸ்காகவும் பயன்படுத்தலாம்.

உலர்ந்த சருமம் (Dry skin) இருப்பவர்கள், ஃபேஸ்வாஷ் பவுடருன் பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

எண்ணெய் சருமம் (Oily Skin) உள்ளவர்கள், ஃபேஸ்வாஷ் பவுடருன் தயிர் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null