குழந்தைகளுக்கு அடிக்கடி வரக்கூடிய பிரச்னைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல். இதற்குத் தீர்வு தேடியே தாய்மார்கள் சோர்ந்து போகின்றனர். நேச்சுரல் வேப்பர் ரப் உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் வீட்டிலே தயாரித்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். பாதுகாப்பைத் தரும்.
கடைகளில் விற்கும் வேப்பர் ரப்பில் பெட்ரோலியம் இருப்பதாக சொல்கின்றனர். இது குழந்தைக்கு ஏற்றதல்ல. எனவே, நேச்சுரல் வேப்பர் ரப்பை நீங்களே சுலபமாக தயாரித்துக் கொள்ள வழி சொல்லும் பதிவு இது.
நேச்சுரல் வேப்பர் ரப் ரெசிபி - முதல் வகை
பெட்ரோலியம் இல்லாத வேப்பர் ரப் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையானவை
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் - ½ கப்
பீஸ் வாக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் - 10 துளிகள்
பெப்பர்மின்ட் எண்ணெய் - 10 துளிகள்
சின்னமன் அல்லது க்ளோவ் எண்ணெய் - 5 துளிகள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சுடுநீரை வைத்துக் கொள்ளுங்கள். சுடுநீரீன் மேலே இன்னொரு பாத்திரத்தை வைக்கவும். கண்ணாடி பவுலாக இருப்பது நல்லது.
இதில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஊற்றவும். அதிலே பீஸ் வாக்ஸையும் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
அப்படியே உருகி எண்ணெயும் கலந்துவிடும். இதைத் தான் டபுள் பாயிலிங் முறை என்பார்கள்.
அடுப்பை நிறுத்திவிட்டு கீழே இறக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து,மேலும், மற்ற எண்ணெய் துளிகளையும் ஊற்றி நன்கு கலக்கவும்.
பின்னர் காற்று புகாத டப்பாவில் இதைக் கொட்டி சேமித்து வைக்கவும்.
முடிந்தவரை கண்ணாடி டப்பா பயன்படுத்துவது நல்லது.
சில மணி நேரத்திலே கட்டியாகிவிடும்.
தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
பெரியவர்களுக்குத் தயாரிப்பதாக இருந்தால் மேலே சொன்ன எசன்ஷியல் எண்ணெய்களின் அளவை ஒரு மடங்காக கூட்டி கொள்ளுங்கள். பெரியவர்களுக்கும் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?
Image Source : Going evergreen
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
நேச்சுரல் வேப்பர் ரப் ரெசிபி - இரண்டாம் வகை
தேவையானவை
ஷீ பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
டீ ட்ரி எண்ணெய் - 10 துளிகள்
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் - 10 துளிகள்
பெப்பர்மின்ட் எண்ணெய் - 10 துளிகள்
செய்முறை
மேற்சொன்ன முதல் வகைப்படி டபுள் பாயிலிங் முறையில் இவற்றைக் கலந்து சூடாக்கவும்.
பின்னர் கண்ணாடி டப்பாவில் சேமித்து வைக்கவும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க: 0 - 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்...
நேச்சுரல் தைலம்
Image Source : Doodlecraft
தேவையானவை
ஓம உப்பு - 20 கிராம்
பச்சை கற்பூரம் - 20 கிராம்
புதினா உப்பு - 20 கிராம்
கண்ணாடி பாட்டில் - 1
செய்முறை
கண்ணாடி பாட்டிலில் மேற்சொன்ன 3 பொருட்களையும் சம அளவில் போட்டு வைத்திருக்கவும்.
மேற்சொன்ன உப்புகளை உடைத்துப் போட்டு, கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கவும்.
மூடி போட்டு நன்றாகக் குலுக்கவும்.
4-5 மணி நேரத்தில் தைலம் தயாராகிவிடும்.
குறிப்பு
3 வயது + குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயன்படுத்தலாம்.
கை, கால் வலி, தலை வலி, மூட்டு வலிகூட சரியாகும்.
இதையும் படிக்க: குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null