குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

சிறிய குழந்தைகளுக்கு நட்ஸ் மிகவும் சிறந்த உணவு. ஆனால், அவர்களால் மெல்ல முடியாதே… என்ன செய்யலாம்? நட்ஸை பவுடராக்கி கொடுக்கலாம். ஆம்… சத்துகள் உடலில் சேர உதவும். 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நட்ஸ் பவுடர் கொடுக்கலாம். அதை எப்படி செய்வது? எதில் கலப்பது? எவ்வளவு தருவது? என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

தேவையானவை

 • பாதாம் – ¼ கப்
 • பிஸ்தா – ¼ கப்
 • முந்திரி – ¼ கப்
 • குங்குமப்பூ – 2 சிட்டிகை
 • சுக்கு – 1 இன்ச்
 • முழு பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன்

nuts powder for toddlers

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 உணவுகள்

செய்முறை

 • முதலில் பாதாமை நன்கு வறுத்துக் கொள்ளவும். 4-5 நிமிடங்கள் வரை வறுக்கலாம்.
 • மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
 • வறுத்ததைத் தட்டில் போட்டுக் கொள்ளுங்கள்
 • அடுத்ததாக முந்திரி, குங்கமப்பூவை அதேபோல வறுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளவும்.
 • அடுத்ததாக பிஸ்தாவையும் அதேபோல வறுத்துக் கொள்ளவும்.
 • சுக்குவையும் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
 • வறுத்த அனைத்தையும் தட்டில் போட்டு ஆற விடவும்.
 • இப்போது வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு, கனமான இடிக்கும் கருவியை வைத்து நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவை மிக்ஸியில் அரைப்பட நேரம் எடுக்கும். இதனால் சூடாகி எண்ணெய் பசை சேர்ந்து விடும்.
 • பிறகு மிக்ஸியில் இடித்த நட்ஸ், குங்குமப்பூ, பொட்டுக்கடலை ஆகிய அனைத்தையும் போட்டு சிறிது சிறிதாக மிக்ஸியை திருப்பி அரைக்க வேண்டும்.
 • ஒரே அடியாக மிக்ஸியை திருப்பி அரைத்தால் சூடாகி, எண்ணெய் பசையாக மாறலாம்.
 • எனவே, சிறிது நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி ஜாரை அப்படியே குலுக்கி, மீண்டும் சில நொடிகள் அரைக்க வேண்டும். இப்படியே பவுடராகும் வரை அரைத்துக் கொள்ளுங்கள்.
 • காற்று புகாத உலர்ந்த டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

how to make nuts powder

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…

குறிப்பு:

இதில் வால்நட்கூட சேர்க்கலாம். ஆனால், வால்நட்டை 10 நிமிடங்களாவது நன்றாக வறுத்துக் கொண்டு பின் இதனுடன் சேர்த்து அரைக்கலாம். வால்நட் சேர்த்தால், லேசாக எண்ணெய் பசை இருக்கத்தான் செய்யும். எனவே சீக்கிரம் பயன்படுத்தி விடுவது நல்லது. வால்நட் சேர்த்தால் 2-3 வாரங்களுக்குள்ளே பயன்படுத்தி விடவேண்டும்.

நட்ஸ் பவுடரைப் பயன்படுத்துவது எப்படி?

 • எதாவது இனிப்பு வகைகள் செய்தால் அதில் நட்ஸ் பவுடரை சேர்க்கலாம்.
 • ஸ்மூத்தி, ஜூஸ் போன்றவற்றில் சேர்க்கலாம்.
 • ப்யூரியுடன் சேர்க்கலாம்.
 • சாலட்களுடன் சேர்க்கலாம்.
 • கேக்குடன் சேர்க்கலாம்.
 • பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

homemade nuts powder

 • இனிப்பான நொறுக்குத் தீனிகளின் மேலே தூவிக் கொடுக்கலாம்.
 • சத்து மாவு கஞ்சியுடன் இதைச் சேர்க்கலாம்.
 • ராகி இனிப்பு கஞ்சியுடன் நட்ஸ் பவுடரை சேர்க்கலாம்.
 • இனிப்பு தோசையில் ஸ்டஃப்பிங்காக நட்ஸ் பவுடரை சேர்த்துக் கொடுக்கலாம்.
 • இனிப்பு பிரெட்களில் இந்த நட்ஸ் பவுடரைத் தூவிக் கொடுக்கலாம்.
 • வெறுமனே கட் ஃப்ரூட்ஸில் கூட இதை மேலே தூவி குழந்தைகளுக்கு தரலாம்.

nuts powder for kids

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

எவ்வளவு தரலாம்?

 • ஒரு நாளைக்கு 1 – 3 டீஸ்பூன் வரை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பலன்கள்

 • மூளை வளர்ச்சிக்கு நல்லது.
 • குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவும்.
 • மல்டிவிட்டமின்கள் உடலில் சேரும்.
 • தசை வளர்ச்சிக்கு உதவும்.
 • சுக்கு சேர்ப்பதால் செரிமான தொந்தரவுகளுக்கு இருக்காது.
 • உடலுக்கு எனர்ஜியைத் தரும்.
 • ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

homemade babies food

 • பார்வைத் திறனை மேம்படுத்தும்.
 • சருமத்தில் பொலிவைக் கூட்டும்.
 • குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 • குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதையும் படிக்க: குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி? 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null