வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

ஊட்டச்சத்து பானங்கள் கடைகளில் நிறையவே கிடைக்கின்றன. அதைபோல நாம் வீட்டிலும் ஊட்டச்சத்து பானத்தை தயார் செய்ய முடியும். அதுவும் சத்தான, சுவையான ராகியிலிருந்து நாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர் (Homemade Ragi Boost Powder) எப்படி செய்வது எனப் பார்க்கலாமா… இதை வீட்டில் செய்வது சுலபம். குழந்தைகளுக்கு இந்த சுவை பிடிக்கும். சத்துகளும் ஏராளம்.

ஹோம்மேட் ராகி பூஸ்ட் செய்ய…

தேவையானவை

  • ராகி – 1 கப்
  • ஜவ்வரசி – 1 டேபிள் ஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 10
  • ஏலக்காய் – 1
  • பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • கொகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • பிரவுன் சுகர் (பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை) – 4 டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவு
  • உப்பு – ஒரு சிட்டிகை

ragi

Image Source : chsi.bridgepointstudios

இதையும் படிக்க : ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி? 

செய்முறை

ராகியை முளைக்கட்டுவது எப்படி?

  • ராகியை நன்றாக களைந்து கல், மண், தூசி ஆகியவற்றை நீக்கி விடுங்கள்.
  • ராகியை 10 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
  • பிறகு கைகளால் அந்த தண்ணீரிலே ராகியை களஞ்சி களஞ்சி எடுக்க வேண்டும்.
  • நிறம் இல்லாத, வெள்ளைத் துணி பையை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • துணி பையில், ராகியை கொட்டி அதை வீட்டின் சமையல் அறையில் எதாவது ஒரு பக்கத்தில் கட்டி விடுங்கள்.
  • இரண்டு நாட்களுக்கு காலையும் மாலையும் லேசாக தண்ணீரைத் தெளித்து விடுங்கள்.
  • மூன்றாவது நாள், காலையில் தண்ணீர் தெளிக்க கூடாது.
  • மூன்றாவது நாள், முளைக்கட்டியிருக்கும் கேழ்வரகை பையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு வெள்ளைத் துணியில் பரவலாக ராகியை உதிர்த்துக் கொள்ளுங்கள். பரவலாக பரப்பி அதைக் காய வையுங்கள்.
  • ஈரமில்லாமல் நன்கு காய வேண்டும்.

sprouted ragi

Image Source : Indiamart

இதையும் படிக்க : ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

பூஸ்ட் செய்ய…

  • இப்போது முளைக்கட்டிய ராகியை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
  • அதை உலர்ந்த வாணலியில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
  • மிதமான தீயில் வைத்து வறுக்கவும். வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
  • ஒரு ஸ்டீல் தட்டு வேண்டும்.
  • அந்த தட்டில் உலர்ந்த வெள்ளைத் துணிப் போட்டு, அதில் வறுத்த ராகியை கொட்டி விடுங்கள்.
  • மேலும், வாணலியில் 10 முந்திரியை வறுக்கவும். லேசான பொன்னிறம் வந்தாலே போதும்.
  • அதுபோல, 10 பாதாம் பருப்புகளைப் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அதேபோல, 10 பிஸ்தாவையும் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு, அதை எடுத்துவிட்டு, ஒரு ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஜவ்வரசியை வறுக்கவும். அதாவது ஜவ்வரிசி பொரிய ஆரம்பிக்கும் போது, கைகளால் தொட்டு பாருங்கள்.
  • பொடியாகிறதா இல்லை ஈரப்பதத்துடன் இருக்கிறதா என செக் செய்யுங்கள்.
  • ஜவ்வரசி பொடியாகின்ற பக்குவத்தில் இருந்தாலே, அதை நீங்கள் எடுத்து விடலாம். வறுத்த ஐவ்வரிசியின் அளவு பெரியதாக இருக்கும்.
  • ஒரு டீஸ்பூன் கசகசாவை போட்டு லேசாக வறுக்கவும். கசகசா உடனே வறுப்படும் என்பதால் அருகிலே இருந்து எடுத்து விடுங்கள்.
  • மிக்ஸி ஜாரில் தேவையான அளவு பிரவுன் சுகர் (பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை) போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதிலே, வறுத்து வைத்துள்ள அனைத்தையும் போடுங்கள்.
  • இதெல்லாம் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். பாதி அரைந்ததும் 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர், 2 டேபிள் ஸ்பூன் கொகோ பவுடர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் ஹோம்மேட் ராகி பூஸ்ட் ரெடி.

homemade ragi boost

குறிப்பு…

  • சர்க்கரை சேர்ப்பது உங்களது விருப்பம்.
  • சர்க்கரை சேர்க்காமல் அரைக்கலாம். பூஸ்ட் தயாரிக்கும் போது நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் என சேர்ப்பது உங்களது விருப்பம்.
  • ராகி பூஸ்டை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
  • குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒரு கிளாஸ் பாலில் இந்த ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடரை சேர்க்கவும்.
  • காற்று புகாத டப்பாவில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அரைக்கும் போதே அதிகமாக செய்யாமல், 20 நாட்களுக்கு எனத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பாதாம், முந்திரி ஆகியவை சேர்ப்பதால் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் கெட்டு விடலாம்.
  • எப்போது பயன்படுத்தினாலும் உலர்ந்த ஸ்பூன் போட்டு பயன்படுத்தவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

எப்படித் தயாரிப்பது?

  • ஹோம்மேட் ராகி பூஸ்ட் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதில் சுடு தண்ணீர் கலந்து குடிக்கலாம்.
  • விருப்பப்படுபவர்கள் பாலில் கலந்தும் குடிக்கலாம்.
  • டிராவல் சமயங்களில் கூட எடுத்து செல்லலாம். சுடுநீர் இருந்தாலே போதும், சுவையான, ஆரோக்கியமான ராகி பூஸ்ட் உடனடியாக தயாரிக்க முடியும்.
  • குழந்தைகள் பயணம் செல்லும்போது இதை எடுத்து செல்வது உதவியாக இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null