ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டுமா என்ன? அளவுடன் சாப்பிட்டால் நிறைய பலன்கள் கிடைக்கும். வீட்டிலே 10 நிமிடத்துக்குள் செய்து விடலாம். அவ்வளவு ஈஸி. ஹோட்டலில் தருவது போலவே, நுரை பொங்க ஹாட் சாக்லேட் மில்கை வீட்டிலே செய்வது எப்படி எனப் பார்க்கலாமா…
ஹாட் சாக்லேட் மில்க் ரெசிபி
தேவையானவை
- கொகோ பவுடர் – 1 ½ டேபிள் ஸ்பூன்
- பால் – 2 டம்ளர்
- சர்க்கரை (பிரவுன் சுகர்) – தேவையான அளவு
- பொடித்த நட்ஸ் – மேலே தூவ
Image Source : Mother nature network
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி
செய்முறை
- தண்ணீர் சேர்க்காத பாலைக் காய்ச்சி கொள்ளவும்
- காய்ச்சிய பாலை ஆற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கப் அளவுக்கு ஆற வைத்த பாலை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 20 மில்லி அளவு, காய்ச்சிய ஆற வைத்த பாலை ஊற்றவும்.
- இதில் 1 ½ டேபிள் ஸ்பூன் அளவுக்கு கொகோ பவுடரை சேர்க்கவும்.
- தேவையான சர்க்கரையை (வெள்ளையாக்கபடாத பிரவுன் சுகர்) இதில் சேர்த்துக் கலக்கவும்.
Image Source : Wikihow
இதையும் படிக்க: பஞ்சமூட்டக்கஞ்சி… குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் வீட்டு மருத்துவம்…
- விஸ்க் எனும் கரண்டி மூலம் இந்த கலவையை நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
- கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். ஸ்மூத் பேஸ்டாக இருக்க வேண்டும்.
- ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ஆற வைத்த பாலை சூடு செய்யவும்.
- இன்னொரு ஸ்டவ்வில், மிதமான தீயில் வைத்து, கொகோ பவுடர் கலந்த கலவையை சூடு செய்யவும். கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
- அடி பிடித்து விடாமல் இருக்க கலக்கி கொண்டே இருக்கவும்.
- 2 நிமிடங்கள் சூடானதும் சூடாக்கப்பட்ட பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கி கொண்டே வர வேண்டும்.
- இப்போது அடுப்பை நிறுத்தி விட வேண்டும்.
- மீண்டும் கொஞ்சம் பால் சேர்த்துக் கலக்க வேண்டும்.
- ஒரே அடியாக பாலை ஊற்றி கலக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து கலக்க வேண்டும்.
- ஒரு பெரிய கிளாஸில் ஊற்றி, மேலே பொடித்த நட்ஸ் தூவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…
குறிப்பு
- 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- மாதத்தில் 2-3 முறை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
Image Source : Happy Foods Tube
இதையும் படிக்க: வெயிலுக்கு இதமான 5 ஹெல்தி, டேஸ்டி சாலட்…
பலன்கள்
- ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
- ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.
- இதயத்துக்கு நல்லது.
- மூளைக்கு ஆக்சிஜன் செல்ல உதவும்.
- ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
- மூளைக்கான சூப்பர் உணவு, கொகோ.
- பற்களுக்கு உறுதியை அளிக்கும்.
- சருமத்துக்கு நல்லது.
- விட்டமின்கள், மினரல்ஸ் உள்ளன.
- அனிமியாவை விரட்டி அடிக்கும்.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null