குழந்தையை குளிக்க வைக்கும் முறை சரியா என எப்படி தெரிந்துகொள்வது?

குழந்தையை குளிக்க வைக்கும் முறை சரியா என எப்படி தெரிந்துகொள்வது?

குழந்தைகளைக் குளிப்பாட்ட  பெரியவர்களைத் தேடுவது, வயதான பாட்டிகளைத் தேடுவது எனப் பெரிய சவாலே நடக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. எப்படி எனத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலை சுலபமாகி விடும்.

குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா?

  • குழந்தையைத் தினமும் குளிப்பாட்டுவது நல்லது.
  • வயிற்றில் இருக்கும்போது நீரில் இருந்த குழந்தை கொஞ்சம் பூசினாற் போலத் தெரியும். ஆனால், பிரசவத்துக்கு பின் உடல் வற்றும்.
  • எடை குறைவதுடன் சருமத்தில் உள்ள தோல் உரிந்து வறண்டு போகும்.
  • சருமம் அழகாக மாற, குழந்தையை ஆரோக்கியமாக இருக்க தினமும் குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டும்.
  • எண்ணெயும் தண்ணீரும் குழந்தைக்கு மிகவும் தேவை. ஆதலால் குளியலும் எண்ணெய் குளியலும் குழந்தைக்கு மிக அவசியம்.
  • மிகவும் குளிர்ந்த இடத்தில், குளிர் பிரதேசங்களில் இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தையைக் குளிக்க வைக்கலாம்.

குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி? (How to bath newborn baby?) newborn baby bath tips

இதையும் படிக்க: குழந்தையின் சருமத்தை மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றும் குளியல் பொடி

  •  எண்ணெயை இளஞ்சூடாக சூடுப்படுத்திக் கொள்ளவும்.
  • முதலில் குழந்தைக்கு தேவையானவற்றை எண்ணெய், சோப், பேபி ஷாம்பு, துண்டு, நீங்கள் உட்கார மனை போன்ற நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்களோ அதையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பக்கெட்டில் வெந்நீர், இன்னொரு பக்கெட்டில் இளஞ்சூடான தண்ணீர்; உங்களின் கை சூடு பொறுக்கும் அளவு.
  • எல்லாப் பொருட்களும் கை எட்டும் தூரத்தில் சீராக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது கால்களை நீட்டிக் கொள்ள வேண்டும். குழந்தையை நிமிர்த்தி கால்களில் விட்டுக் கொள்ள வேண்டும். குழந்தையின் தலையை கிளிப் மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
    குழந்தையின் முகம், மார்பு பகுதி, வயிறு, கால்கள் ஆகிய இடங்களில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
  • மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி கழுத்தில் எண்ணெயைத் தடவ வேண்டும்.
  • குழந்தையின் உடலிலும் எண்ணெய், உங்கள் கைகளிலும் எண்ணெய் என்பதால் குழந்தையை மிக கவனமாக எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து படுக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  • முன்பு போலவே, கால்களால் குழந்தையின் தலையை கிளிப் போல பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தையின் தலை, பின் கழுத்து, முதுகு, பின்னங்கால்கள் ஆகியவற்றில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
  • எண்ணெய் தடவும்போதே மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.
  • குழந்தை கவிழ்ந்து படுத்தபடி இருக்கும்போதே, குழந்தையின் தலையில் இளஞ்சூடான நீரை ஊற்ற வேண்டும்.
  • குழந்தை கவிழ்ந்து இருப்பதால் முகத்தில் நீர் விழாது. எனினும் கவனமாக நீர் ஊற்ற வேண்டும்.
  • இப்போது பேபி ஷாம்பு போட்டு முடியை அலசலாம். உடம்புக்கு பேபி சோப் போடலாம். தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள்.
  • குழந்தையை திருப்பி, முகம், கை, கால்கள், உடம்புக்கு சோப் போட்டு அலசி விடுங்கள்.
  • கண்களில் சோப், ஷாம்பு, தண்ணீர் போகாமல் கவனமாக குழந்தையை கையாள வேண்டும்.
  • தொடை இடுக்கு, கை இடுக்கு, அக்குள் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்துவது நல்லது.
  • குளிக்க வைத்தப் பின் குழந்தையை துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள்.
  • கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் நன்றாகத் துடைக்க வேண்டும்.

குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கான சரியான நேரம் எது? baby bath time

இதையும் படிக்க: 3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

  • வெப்பமான பகுதிகளில் 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம்.
  • பெங்களூர் போன்ற குளிர் இடங்களில் வெயில் வந்த பிறகு குளிப்பாட்டலாம்.
  • குளித்த பிறகு தாய்ப்பால் ஊட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்கலாம்.
  • உதாரணத்துக்கு 9 மணிக்கு தாய்ப்பால் கொடுத்தீர்கள் என்றால் அடுத்த பசி வருவதற்குள் குளிப்பாட்டிவிட ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

சுடுநீர் குளியல் குழந்தைக்கு சரியா?

  • சூடாக தண்ணீரைக் குழந்தைக்கு ஊற்றக் கூடாது.
  • இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • அதுபோல சில்லென்ற தண்ணீரைக் குழந்தைக்கு ஊற்றக் கூடாது.
  • சிலர் அந்தரங்க உறுப்புகளில் மட்டும் சுடுநீர், பின் சில்லென்ற நீர் எல்லாம் ஊற்றுவார்கள். அப்படியெல்லாம் செய்ய கூடாது.

இதையும் படிக்க: குழந்தைகளின் முடியைப் பராமரிக்க 13 வழிகள்…

குழந்தைக்கு எந்த எண்ணெய் சிறந்தது?   newborn baby bath tips

Image Source : Credit bundoo.com

  • உடல் முழுவதும் தேய்க்க செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சிறந்தது.
  • எண்ணெய் குளியலுக்கு சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.
  • அவ்வப்போது பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயும் பயன்படுத்தலாம்.
  • எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் லேசாக சூடு செய்து இளஞ்சூடாக்கி பயன்படுத்தினால் சளி பிடிக்காது.

இதையும் படிக்க: கிருமிகள் தாக்காமல் குழந்தைகளின் துணியை எப்படி பராமரிப்பது?

குழந்தைக்கு பவுடர் போடலாமா?

  • குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடர் போட வேண்டாம். கழுத்து, கை, அக்குள், கால், தொடை இடுக்குகளில் தரமான பவுடரைப் போடலாம்.
  • தரமான பவுடரைப் பார்த்து வாங்குங்கள். மருத்துவர் ஏதேனும் பவுடரைப் பரிந்துதைத்தால் அதையே குழந்தைக்கு போடலாம்.
  • குழந்தையை குளிக்க வைக்க யார் யாரோ நிறைய முறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்போது சொன்ன முறை குழந்தைக்கு பாதுகாப்பைத் தரும். பலரும் குழந்தைகளை குளிக்க வைப்பதில் தங்களின் திறமையை காட்ட குழந்தையை அழ வைத்து விடுகிறார்கள்.
  • குழந்தைகள் குளிப்பாட்டும் போது அழாமல் குளித்தாலே, நீங்கள் குளிப்பாட்டும் முறை குழந்தைக்கு பொருந்துகிறது எனப் புரிந்து கொள்ளலாம். எந்தக் குழந்தையாவது குளிக்க எடுத்து சென்றாலே, கத்தி அழுதால், நீங்கள் அந்தக் குழந்தையை தவறான முறையில் குளிக்க வைக்கிறீர்களா என ஒருமுறை சிந்தித்து பாருங்கள்.

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?

Source: குழந்தை வளர்ப்பு ரகசியங்கள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null