கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவே இந்தப் பதிவு.

எப்படி கரு உருவாகும்? அதன் பயணம்..!

பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

இந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.

இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.

இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

14-ம் நாளில் ஏற்பட்ட உடலுறவு அல்லது அதற்கு முந்தைய நாளில் ஏற்பட்ட உடலுறவில் உள்ளே வந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வருகின்றன. இந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வர அதன் வால் பகுதி உதவுகிறது. இது 10 மைக்ரான் அளவே இருக்கும்.

இந்த கருமுட்டை வெளிவரும்போது சிந்துகின்ற நீர், இந்த கெமிக்கலின் ஈர்ப்பால் ஆண் விந்துக்கள் ஈர்க்கப்படும். இந்த ஈர்ப்பால் விந்துக்கள் அதைத் தேடி போய் பெண்ணின் கருமுட்டையை பிடித்துக் கொள்ளும்.

மில்லியன் கணக்கில் பெண்ணின் யோனி குழாயில் (பிறப்புறுப்பு வழியாக) விழுகின்ற விந்துகளில், வெறும் 1000 கணக்கான விந்துகள் மட்டுமே ஒவ்வொரு தடைகளையும் தாண்டி பெண்ணின் கருமுட்டை இருக்கும் இடத்தில் சேர்கின்றன.

இந்த நேரத்தில் விரல் அளவே உள்ள கரு இணைப்பு குழாயானது, நகர்ந்து சென்று கெமிக்கலின் ஈர்ப்பால், அதில் உள்ள துளைகள் வழியாக விந்துவை ஈர்த்துக்கொள்ளும். இந்த இடத்தில்தான் விந்தணுவும் கருமுட்டையும் இணை சேரும். பின்னர் இது கருவாக உருவாகும்.

கருவாக உருவான நாளிலிருந்து, 3 நாட்களுக்குள்ளே அப்படியே கரு குழாய் வழியாக நகர்த்திக்கொண்டு கர்ப்பப்பைக்குள் கருவை உட்கார வைப்பது, கர்ப்பப்பை குழாய்தான். இந்த செயல்பாடு நடக்க மயிர்கால்கள் போன்ற அமைப்பில் உள்ள ‘சிலியா’ எனப்படும் ஒன்று, மெல்ல நகர்ந்து நகர்ந்து கருமுட்டையை கர்ப்பப்பையில் சேர்க்கிறது.

கர்ப்பப்பையின் உள்ளே வந்த விந்தணுவின் அளவு வெறும் 10 மைக்ரான் அளவுதான். ஆனால், ஈர்த்தது 100 மைக்ரான் அளவுள்ள கருமுட்டை. இது இரண்டும் சேர்ந்து கருவாகி, கரு வளர்ந்து கொண்டே இருக்கையில் 130-140 மைக்ரான் அளவில் கர்ப்பப்பையில் இறங்கும். கர்ப்பப்பையில் இறங்கும்போது, கருவை ‘ஐந்தாவது நாள் கரு’ என்பார்கள்.

கர்ப்பப்பையின் உள் சவ்வோடு கரு ஒட்டிக்கொள்ளும். இந்தக் கரு வேராக இறங்கி, தாயோடு ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். இதற்கு 6-7 நாட்கள் வரை ஆகும்.

இந்த 6-7 நாட்களில் குழந்தையின் ஹார்மோன் தாயின் ரத்தத்தில் கலக்கும். இந்த சமயத்தில் தாயின் ரத்தத்தைப் பரிசோதித்தால், கரு உருவாகியிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். ‘பாசிடிவ்’ என்ற ரிசல்ட் ரத்தப் பரிசோதனையில் தெரியும்.

இதையும் படிக்க: யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்…

ovolution calculator

Image Source : pinterest

ஒவல்யூஷன் பீரியடை எப்படி கணக்கிடுவது?

உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.

பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுப்படும்.

உதாரணமாக,
உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.

கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.

உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.

28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 14-ம் நாள் கருமுட்டை வரும்

30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 16-ம் நாள் கருமுட்டை வரும்

34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் – 20-ம் நாள் கருமுட்டை வரும்

இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.

இதையும் படிக்க: நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யும் அறிகுறிகள்…

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

சீரற்ற மாதவிடாய் வருபவர்கள்… எப்படி கருமுட்டை வெளிவரும் நாளைக் கணக்கிடுவது?

ovulation cycle

Image Source : Today parenting team

சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.

உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.

அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

எந்தக் குழப்பமும் இல்லாமல் சுலபமாக, கருமுட்டை வெளிவரும் நாளை நீங்கள் இந்த ஆப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துகள்…

இதையும் படிக்க: 2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null