மூல நோய்… இந்த நோய் வந்தாலோ அல்லது இந்த நோய் அறிகுறிகள் இருந்தாலோ பெரும்பாலும் இதை வெளியில் யாரும் சொல்வது இல்லை. சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை மூல நோய் வருவதாக சொல்லப்படுகிறது. மூல நோய் பிரச்னையை சரி செய்யும் வழிகளைப் பார்க்கலாம்.
சரியாக மலக் கழிக்காத குழந்தைகள், இளம் பருவத்தினர், 40 வயதைக் கடந்த ஆண், பெண் இருப்பாலினருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் வருகின்றன.
1. மூலம் (Piles)
2.ஆசனவாய் வெடிப்பு(Fissure)
3. மூன்றாவது, பௌத்திரம் (Fistula)
உடலில் அசுத்த ரத்தம் செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் சரியான இடைவெளிகளில் வால்வுகள் இருக்கும். இவை தேவையில்லாமல் ரத்தம் தேங்கி நிற்பதைத் தடுக்கும். ஆனால், நம் உடலில் ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல ரத்தக் குழாய் வீங்குவதே ‘மூலநோய்’ என்கிறோம்.
ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்து இருப்பது ‘உள் மூலம்’. தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியாது. மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இதைத் தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கலாம்.
அறிகுறிகள்…
மலம் கழிக்கையில் ரத்தம் சொட்டுவது
மலத்துடன் ரத்தமும் வெளி வருதல்
மலம் கழித்த பின் லேசாக ஆசன வாயில் வீக்கம்
மலம் இறுகி எளிதில் வெளியேறாது
அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
மூல சதை வெளித்தள்ளுதல்
செரிமான பிரச்னை
புளித்த ஏப்பம்
Image Source : youtube
யாருக்கெல்லாம் மூல நோய் வரலாம்?
நீண்ட தூரம் பைக் ஓட்டுபவர்கள்
காரமான உணவுகளை உண்பவர்கள்
அதிகமாக நின்று கொண்டே இருப்பவர்கள்
வெரிகோஸ் வெயின் பிரச்னை உள்ளவர்கள்
உடல்பருமன்
அதிக எடை தூக்குபவர்கள்
மலம், சிறுநீர் அடக்குபவர்கள்
உட்கார்ந்தே வேலை செய்யும் பணியாளர்கள்
இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
மூல நோய் வர என்ன காரணம்?
இந்த வீக்கம் ஏற்பட பலக் காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல்தான் மிக முக்கியமான காரணம்.
மலச்சிக்கல் இருக்கும்போது, முக்க வேண்டியுள்ளதால் ஆசன வாயுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மூல நோய் வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு மூல நோய்…
கர்ப்பிணிகளின் வயிற்றில் கரு வளர வளர அடிவயிற்று உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படும். ஆசனவாய் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதால் வீக்கம் உண்டாகும். இதனால் சில கர்ப்பணிகளுக்கு அக்காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் மரபியல் மூலமாகவும் மூலநோய் வரலாம்.
வீட்டு வைத்திய முறைகள்…
ஆமணக்கு இலையை நெய் விட்டு இளஞ்சூடாக வதக்கவும். இரவு தூங்கும் முன்பு, மூலம் உள்ள இடத்தில் வைத்து உறங்கலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய் தூளை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து இரவில் குடிக்க வேண்டும்.
துத்திக் கீரையை நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைய வேண்டும். வாரம் இரண்டு முறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வரலாம்.
நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
காலையும் மாலையும் துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு விழுங்கியவுடன் மோர் குடிக்கலாம்.
மதிய உணவில், 5 சின்ன வெங்காயத்தை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு பைல்ஸ் வராது.
அத்திப்பழத்தை இரவில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை அதை நன்கு மென்று சாப்பிடவும். அந்த நீரையும் குடித்து விடுங்கள்.
மாதுளை தோலை சுத்தம் செய்து விட்ட பின் நீரில் போட்டு கொதிக்கவிட்ட பின்னர் அதை வடிகட்டி அந்த நீரை குடித்து வரலாம்.
இதையும் படிக்க: பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?
மூலம் வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?
Image Source : store first
தினமும், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள்.
பச்சை நிற காய்கறிகள்
அனைத்துக் கீரைகள்
பீன்ஸ், அவரை
புடலங்காய்
வெண்டைக்காய்
தினம் ஒரு கீரை
சிவப்பரிசி சாதம், கைக்குத்தல் சாதம்
2-3 வகை பழங்கள்
வாழைப்பழம் அவசியம்
பப்பாளி
சாத்துகுடி, கமலா பழம்
2- 3 லிட்டர் தண்ணீர்
தவிர்க்க வேண்டியவை
சப்பாத்தி, பரோட்டா
இரும்பு சத்து மாத்திரைகள்
காரம், புளிப்பு உணவுகள்
அதிகமான அசைவ உணவுகள்
பீட்சா, பர்கர்
சீஸ் உள்ள பேஸ்டி உணவுகள்
பசை போல இழுக்கின்ற உணவுகள்
மைதா உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்க: உடல் சூட்டை குறைக்கும் வழிகள்… அனைவருக்குமான தீர்வு...
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null