அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்... மாற்றுத்திறனாளி குழந்தைகளை அறிவது எப்படி?

அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்... மாற்றுத்திறனாளி குழந்தைகளை அறிவது எப்படி?

மாற்றுத்திறனாளி என்றதுமே மனம் ஒருவித கவலை உணர்வில் ஆழ்ந்து விடுகிறது. உடல் மற்றும் மனதளவில் பாதிப்பு உள்ள குழந்தைகளை மாற்றுத்திறனாளி குழந்தைகள் எனச் சொல்கின்றனர். இவர்களை சரியாக கவனித்து வளர்ப்பது எப்படி? உடல் ரீதியாக இருக்கும் குறைபாடுகளை தற்போது நவீன மருத்துவ முறைகளால் பெரும்பாலும் சரி செய்து விடலாம். தவிர்க்க முடியாத சில பிரச்னைகள் இருந்தால் மட்டுமே நவீன மருத்துவ முறைகளாலும் குழந்தை இயல்பாக மாறுவதில்லை. இத்தகைய குழந்தைகளை எப்படி பராமரிப்பது? எந்த குழந்தைகளாக இருந்தாலும் மன ரீதியாக அவர்களை வலுவூட்டுவது மிக முக்கியம். மனதைத் திடப்படுத்திவிட்டால் பின் பிரச்னையே இருக்காது.

எந்த வளர்ச்சியில் அதிக கவனம் தேவை?

தவழ்தல், உட்காருதல், எழுந்திருத்தல், நடத்தல் ஆகியன அதிக தாமதமாக கூடாது. பேச்சு திணறுதல். பால் குடிப்பது, உணவு உண்ணுவது, உடையணிவது ஆகியவற்றை மிக மெதுவாக செய்ய கூடாது. சம்பவங்கள், விளையாட்டு பொருட்களை ஆகியவற்றை மறந்து விடுதல். பேச்சும் செயலும் முரண்பாடுடன் இருப்பது. திடீரென தாக்குதல், பிறதையோ தன்னையோ காயப்படுத்துதல். எண்ணுதல், கணக்கு போடுதல், எழுத்துகளைப் புரிந்துகொள்ள சிரமப்படுதல். இதெல்லாம் பெற்றோர் கவனித்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டுயது நல்லது. disabled childrens Image Source : The stream இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

மாற்று திறனாளி குழந்தைகள் யார்?

போலியோ விபத்து மூளைக்காய்ச்சல் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களால் ஏற்பட்ட உடல் பாதிப்பை கொண்ட குழந்தைகள். மன வளர்ச்சி குறைபாடு வளர்ச்சியின்மை பேசுவதில், கேட்பதில் குறைபாடு இவர்களும் மாற்றுத்திறனாளி குழந்தைகளாக இருப்பர். இதையும் படிக்க: அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?

முதல் 5 வயதுக்குள்…

பிறந்தது முதல் 5 வயதுக்குள் குழந்தையின் வளர்ச்சி, மன வளர்ச்சி ஆகியவை சீராக உள்ளதா எனப் பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தையின் மனநலத்தை நன்கு கவனிக்க வேண்டும். குழந்தை இயல்பாக உள்ளதா, ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை மிக கவனமாக பார்க்க வேண்டும். சில பெற்றோர் குழந்தையிடம் வித்தியாசம் தெரிந்தாலும் தன் குழந்தை நன்றாகதான் இருக்கிறது என்று நம்பி மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் மருத்துவரிடம் காண்பிக்க தவறுகின்றனர். இது தவறு. ஆரம்பத்திலே ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டியது அவசியம். குழந்தையின் பிரச்னையை தொடக்கத்தில் கண்டுபிடித்துவிட்டால் பெரும்பாலும் பிரச்னையை சரிப்படுத்தி விடலாம். குழந்தைக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் இருக்காது. தாமதப்படுத்தினால் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.

5 வயதுக்கான காலகட்டம் எவ்வளவு முக்கியம்?

5 வயதுக்குள் ஏதேனும் பிரச்னை இருப்பின் அதை உடனடியாக சரிசெய்து கொள்ளும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. காய்ச்சல், காயம், பார்வை குறைபாடு, குழந்தை சிரிப்பதில்லை என்று தோன்றினால் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். சில பெற்றோர் இதை அலட்சியப்படுத்துவதால் தற்போது பல மாற்றுத் திறனாளி குழந்தைகள் அதிகமாக உள்ளனர். இதையும் படிக்க: குழந்தைகள், பெரியவர்களுக்கு வலிப்பு வராமல் இருக்க எந்த உணவுகளை சாப்பிட கூடாது?

மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டுபிடிப்பது எப்படி?

குழந்தை தன்னுடன் பேசுபவரை கவனிக்காமல் வேறு எங்காவது பார்த்தபடி இருக்கும். தலை, கை, கால் ஆகிய ஏதேனும் ஒரு உறுப்பை ஆட்டிக்கொண்டே இருக்கலாம். வளர்ச்சிக்கு ஏற்றதுபோல மாறாமல் ஒரே பொம்மையுடன் திரும்பத் திரும்ப விளையாடுகிறதா எனக் கவனியுங்கள். ஒரே மாதிரியான விளையாட்டிலே இருப்பது. தன் வயதுடைய குழந்தைகளுடன் விளையாடாமல் சிறு குழந்தைகளுடன் விளையாடுவது. அதிக கோபம், அதிக ஆவேசம், பொருளைத் தூக்கி எறிவது. இயல்பாக பேசாமல் குறைந்த வார்த்தைகள் அல்லது பேசாமலே இருப்பது. தனித்திருப்பது போன்ற அறிகுறிகள். விளையாடாமல் ஏதோ வித்தியாசமான உலகில் இருப்பது போல குழந்தையின் நடவடிக்கை இருப்பது. அதீத அடம், அதீதமாக சத்தம் போடுதல், கத்துதல். ஒரே மாதிரியான வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லுதல். மலம், சிறுநீர் கழிக்கும் முறைகளை சொல்லவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியாமல் இருப்பது. கவனம், ஆர்வம் இல்லாமல் இருப்பது. சீரான வளர்ச்சி இல்லாமல் இருப்பது. கீழ்படிதல், புரிதல், பேசுதல் ஆகியவற்றில் பின் தங்கி இருப்பது. how to handle disabled kid Image Source : Love that Max இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சரிசெய்வது எப்படி?

மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் முறையான பயிற்சியும் முக்கியம். தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தக்க பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தையை இயல்பான நிலைக்கு மாற்ற பெற்றோர், வீட்டில் இருப்பவர் போன்ற அனைவருமே முயற்சி செய்ய வேண்டும்.

காரணங்கள் என்னென்ன?

குழந்தை மன வளர்ச்சி இல்லாமல் பிறந்திருந்தால் அது அவர்கள் காரணமல்ல. தைராய்டு, டவுன் சிண்ட்ரோம், எக்ஸ் சிண்ட்ரோம், மரபணு கோளாறு, கர்ப்பக்காலத்தில் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருத்தல், வலிப்பு, கிருமித் தொற்று, குறை பிரசவம், பிறந்த குழந்தை அழாமல் இருப்பது, பிறந்த குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் வருவது, கக்குவான், மணல்வாரி அம்மை, தலையில் அடிபடுதல், குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு, காரியம், பாதரசம் போன்ற உலோகங்களின் நச்சு ஆகியவற்றால் மன வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.

பெற்றோர் செய்ய வேண்டியவை

கவலைப்பட்டுகொண்டே இருக்காமல் குழந்தைக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்கலாம். பொருளாதாரத்தின் அளவை உயர்த்திக்கொண்டு குழந்தையை நன்கு கவனிக்க வேண்டும். பாதுகாப்பு திட்டங்கள், சிறப்பு பள்ளிகள் எனக் குழந்தைகளுக்கான சரியான முயற்சிகளை செய்ய வேண்டும். மருந்து, உணவு, கல்வி, பயிற்சி என அனைத்தும் குழந்தைக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும். இதையும் படிக்க: எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன? Source : ஆயுஷ் குழந்தைகள் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null