அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?

அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?

குழந்தைகளின் அழுகைக்குப் பல காரணங்கள் இருக்கும். சிறுநீர், மலம் கழிக்க வேண்டும். அருகிலே யாராவது இருக்க வேண்டும். வயிறு வலியா காது வலியா அல்லது எதாவது பொம்மை வேண்டுமா எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொரு அழுகைக்கு பின் என்ன தேவைகள் இருக்கின்றன என்றும் குழந்தைகளின் அழுகையின் வித்தியாசங்களை அறிந்து அதற்கேற்ப குழந்தைகளை கையாள்வது நல்லது.

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்…

 • பசிக்கு அழுவது
 • ஈரத்துணி, ஈரநாப்கினால் அழுவது
 • குழந்தையை அடிக்கடி தூக்குவதால் ஏற்படும் உடல் வலி
 • அருகேயே மனிதர்கள் இருக்க வேண்டும் என அழுவது
 • வயிறு வலி
 • சிறுநீர், மலம், அபான வாயு பிரிய சிரமப்படுதல்
 • அஜீரண கோளாறு
இதெல்லாம் இயல்பாக நடப்பவை. இந்த அழுகைக்கான காரணம் புரிந்து பெற்றோர் செயல்படுதல் நல்லது.

அடத்தால் வரும் அழுகை...

adamant kids மேற்சொன்ன இயல்பான காரணங்கள் இல்லாமல் ஏதாவது பொருள் வேண்டியோ மற்ற காரணங்களுக்காகவோ குழந்தைகள் அழுகின்றதா எனக் கவனியுங்கள். சில குழந்தைகள் தொடக்கத்திலே அழுதால் தனக்கு தேவையானது கிடைத்துவிடும் என நம்புகின்றனர். வீட்டில் செல்லமாக வளரும் குழந்தைகளுடன் சின்னதாக அழுது குரலை உயர்த்தினாலே பெற்றோர் குழந்தை கேட்கும் மொத்தமும் செய்து விடுகின்றனர். இது தவறு. இப்படி அழுதவுடனே அனைத்தும் கிடைக்கும் எனப் புரிந்த குழந்தைகள், தன் அழுகையாலே அனைத்தையும் சாதிக்கின்றனர். அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க முடியாமலும் தெரியாமலும் பெற்றோர் தவிக்கின்றனர். குழந்தைகளைப் பொதுவாக 6 மாத குழந்தையாக உள்ளபோதே மிக கவனமுடன் வளர்க்க வேண்டும். இதையும் படிக்க: எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன?

அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்?

 • அம்மா, அப்பா, வீட்டு பெரியவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தையை கண்டிக்க கூடாது.
 • குழந்தை சாப்பிடவில்லை என அம்மா திட்டினால், அப்பா குழந்தைக்கு பக்குவமாக எடுத்து சொல்லி சாப்பிட வைக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் கோபப்பட கூடாது.
 • குழந்தை படிக்க மாட்டேன் என அடம் பிடித்தால் தந்தை கண்டிக்கும்போது தாய் அனுசரித்து குழந்தைக்கு எடுத்து சொல்லலாம். இதனால் அடம் பிடிப்பது குறையும்.
 • குழந்தை அடம் பிடிக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஒருவர் கண்டிக்க, இன்னொருவர் துணை நிற்க வேண்டும்.
 • தாய் மட்டுமே அல்லது தந்தை மட்டுமே என சப்போர்ட் செய்வதோ கண்டிப்பதோ கூடாது. மாறி மாறி இருக்க வேண்டும்.
 • அடம் பிடிக்கும் குழந்தையை அடித்தால் அவர்கள் இன்னும் சண்டியாக மாறிப் போவார்கள்.
 • தாய், தந்தை இருவரும் ஒரே நேரத்தில் கண்டித்தால், குழந்தை அதிகமாக அழுது மயக்கம் வந்து நடிக்கவும் செய்யலாம். அல்லது நிஜமாகவே நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
 • குழந்தைகள் அடம் பிடிக்கிறது எனத் தெரிந்தாலே அவர்களுக்கு கதைகள் மூலம் பல நீதி கதைகளை சொல்ல வேண்டும்.
 • விலங்குகள், பிடித்த கதாப்பாத்திரங்களை வைத்து அடம் பிடிக்க கூடாது. இப்படி அடம் பிடித்தால் கெட்ட பெயர் கிடைக்கும். நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள் கதைகள் மூலம் சொல்லி பழக்கலாம்.
 • இதை அழும்போதில்லை எப்போதுமே குழந்தைக்கு சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடம் பிடிக்கும் பிரச்னையே வராது.
 • குழந்தைகளை நல்வழிப்படுத்த குழந்தைக்குத் தேவையான நல்ல குணங்களை வரவைக்கும் சரித்திர கதைகளைச் சொல்லலாம்.
 • அடம் பிடிக்காமல் இருந்தால் நிறைய மக்கள் உன் பக்கம் நிற்பார்கள். அடம் பிடித்தால் யாருமே துணை நிற்க மாட்டார்கள் எனச் சொல்லி புரிய வைக்கலாம்.
 • பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை யாரும் ரசிக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, சரித்திர, புராண, நீதி போதனை கதைகளை சொல்லுங்கள்.
 • குழந்தைக்கு புரியும் படி ஒரு நல்ல கேரக்டர் தீய கேரக்டர் உருவாக்கி அதை வைத்து கதைகளை சொல்லி புரிய வைக்கலாம்.
 • நன்னெறி கதைகள், நன்னெறி வகுப்புகள் ஆகியவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.
 • நகைச்சுவை கலந்த தெனாலி ராமன் கதைகளைகூட சொல்லலாம்.
 • தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் எனப் புரிய வைத்து விடுங்கள்.
 • தப்பு எது என்றும் சொல்லுங்கள். அதில் பிடிவாதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • குற்றங்களையும் குற்றம் செய்பவர்களையும் யாரும் விரும்ப மாட்டார்கள் எனச் சொல்லுங்கள்.
 • ஆரோக்கியமான பரிசுகளை வாங்கி கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை புரிய வைத்து பின்னர் குழந்தையை நல்வழிப்படுத்தலாம்.
இதையும் படிக்க: நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
adamant behavioural kids
 • வெளி இடங்களுக்கு கூட்டி சென்றும் அங்கும் குழந்தைகளை சமாதனப்படுத்தி நல்வழிப்படுத்தலாம்.
 • அதிகமான கேம், டிவி, மொபைல் தர வேண்டாம். இதன் வேக இயக்கம் குழந்தைகளையும் அதே வேகத்துடன் மாற்றும்.
 • அதிகமாக அடம் பிடிக்கும் குழந்தைகளை ‘அடிக்க போகிறேன்’ எனச் சொல்லி மிரட்டுங்கள். ஆனால் அடிக்க வேண்டாம்.
 • தாயோ தந்தையோ சில மணி நேரம் குழந்தையிடம் பேசாமல் இருந்தாலே குழந்தையை சுலபமாக சரிப்படுத்தி விடலாம்.
 • அடம் பிடித்த உடனே தூக்கி கொஞ்ச கூடாது.
 • நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் புகழ், அவர்களின் முக்கிய கொள்கைகளை சொல்லி வளர்க்கலாம். இதனால் நல்வழிப்படுத்த முடியும்.
 • அதிக கொஞ்சலும் இருக்க கூடாது. அதிக கண்டிப்பும் இருக்க கூடாது. இரண்டும் சம அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
 • மிகையாக குழந்தைகளை பாதுகாக்க கூடாது. அளவுடன் தேவையுடன் செய்யுங்கள். அடம் பிடிப்பது மாறிவிடும்.
 • அதிகமாக குழந்தைகளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு சில சமயம் ஆசிரியராகவும் மாறிவிடுங்கள். குழந்தைகளை சரிசெய்துவிடலாம்.

இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null