பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

பிரசவத்தை மறுபிறப்பு என்பார்கள். பிரசவ வலியை அனுபவித்தால் மட்டுமே அதன் ஆழம் புரியும். வெறும் வார்த்தைகளால் அதை சொல்லிவிட முடியாது. பிரசவ வலி எவ்வளவு நேரம் நீடிக்கும். அதை எப்படி சமாளிப்பது? விளக்கமாகப் பார்க்கலாம். மூன்று மும்மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தை நோக்கிப் பயணிக்கிறாள். உயிர் போகும் வலி அது… ஏன் நாம் பெண்ணாக பிறந்தோம் என சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால், குழந்தை பிறந்த அடுத்த கணம் வரமாய் மாறிவிடும். இது பெண்ணின் பெருமையும் சிறப்பும் என்றே சொல்லலாம்.

ஏன் பிரசவ வலி சிரமத்தை ஏற்படுத்துகிறது?

குழந்தை பிறப்பதற்காக தாய் தனது வலியுடன் கூடிய முயற்சியைப் பிரசவத்துக்காக செய்கிறாள். தசை தளர்வுகளை உண்டாக்கி அதை இறுக்கி, சுருக்கி, முக்கி தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து குழந்தையை உந்தி வெளியே தள்ள முயற்சி செய்கிறாள். சிறிய பெண்ணுறுப்பின் வாய் வழியாகக் குழந்தை வெளியேறுவதால் ஏற்படக்கூடிய வலி. கடுமையான முயற்சி. பலரும் இதற்கு பயந்துகொண்டு சிசேரியன் செய்து கொள்கின்றனர். சில தாய்மார்கள் எவ்வளவு வலி இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு, சமாளித்துக்கொண்டு சுகபிரசவத்துக்கே முயற்சி செய்கின்றனர். இந்த பிரசவ வலி பெரும் வேதனையும் வலியைத் தந்தாலும் அதைத் தெரிந்தே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தாய்க்கு மட்டுமே உண்டு. labor pain Image Source : Daily mail

என்னென்ன அறிகுறிகள் தாய்க்கு தெரியும்?

பிரசவ வலியும் வேதனையும் வருவதற்கு முன்பே தாயுக்கு தன் குழந்தை முழுமையான வளர்ச்சியுடன் அடிவயிற்றில் இறங்குவதைத் தாயால் உணர முடியும். நடக்க சிரமமாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சிறுநீர் கழிக்கும் உணர்வும் தோன்றும். தூக்கம் வராமல் தவிப்பார்கள். கர்ப்பப்பை தசைகள் நன்கு இறுகமாகும். சிலருக்கு அவரவர் பெண் உறுப்பில் லேசான ரத்த கசிவோ திரவமோ வெளிப்படலாம். வயிற்றில் ஏற்படும் வித்தியாசமான உணர்வு, வலி, அசௌகரியம் ஆகியவை பிரசவ வலி வருவதற்கான அடையாளத்தை உணர்த்திக் காண்பிக்கும். இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த 8 பிரச்னைகளுக்கும் தீர்வு நீங்கள்தான்... இந்த 7 பழக்கங்களை உடனடியாக செய்யுங்க...

முதல் பிரசவத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இளக்க நிலை என்று சொல்வார்கள். பிரசவ உறுப்புகள் இந்த நிலையில் சுருங்கி, இளக்கம் அடைகின்றன. பின்னர் முதுகில் வலி வரும். அது அப்படியே தொடை வரை வலி வர ஆரம்பிக்கும். இப்படி கீழ்நோக்கி வலி வரத் தொடங்கும். தொடர்ந்து இந்த வலி மீண்டும் மீண்டும் விட்டு விட்டு தொடரும். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி உச்சத்தை அடைந்துவிட்டு செல்லும். பிறப்பு உறுப்பில் ரத்தம் கசியவும் செய்யும். வலியாலும் வேதனையாலும் தாய்மார்கள் தவிப்பர். இதனுடன் சளி போன்ற நிறத்தில் திரவமும் வெளியேறும். முதல் முதலாக பிரசவத்தை அனுபவிக்கும் தாயுக்கு 10 - 18 மணி நேரத்துக்கும் மேல் இவை தொடரும். தாய்மார்கள் இதைக் கண்டு பயப்பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து நாம் பிறந்து இருக்கிறோம். இந்த பிரச்னைகளை அனைத்துத் தாய்மார்களும் அனுபவிக்கின்றனர். இது நோயல்ல… குறைபாடும் அல்ல… இயற்கையான இயல்பான விஷயம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான 'மார்க்' தன் குழந்தைக்கு 'குவான்டம் ஃபிஸிக்ஸ்' வாசித்து காட்டுகிறார்... ஏன்? how to handle labor pain Image Source : Boldsky.com

எப்போது பிரசவம் நடக்கும்?

பெண் உறுப்பின் வாய் முழுமையாகத் திறக்கப்பட்டதும் கர்ப்பப்பையில் உள்ள திரவம் வெளியேறும். அதாவது பனிக்குடம் உடைந்து அதில் உள்ள திரவம் வெளியேறிவிடும். அந்த உடைந்த பனிக்குடத்தில், குழந்தையானது நீந்தி வெளியே வருகிறது. லேசான பழுப்பு நிறம் கொண்ட திரவம் நிறையவே வெளியேறும். தொடர்ந்து திரவம் வெளியேறிக் கொண்டிருக்கும். இதன் பின்னர் குழந்தையின் தலையானது, பெண்ணுறுப்பின் வாய்க்கு வந்து நிற்கும். இதுதான் முதல் நிலை என்பார்கள். இதையும் படிக்க: 0 - 2 வயது வரை... குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரியுமா?

எப்படி குழந்தை வெளியே வருகிறது?

பெண் உறுப்பின் வாய்க்கு அருகில் உள்ள குழந்தையின் தலையை வெளியேற, தாயானவளின் உறுப்பு சுருக்கி, விரிந்து குழந்தையை வெளியே தள்ளும் முயற்சியை செய்கிறாள். இந்த முயற்சி செய்வதற்கான தூண்டுதலையும் உணர்வையும் தீவிரத்தையும் உடலே ஏற்படுத்தும். தாயினுடைய பெண் உறுப்பின் வாய் அடைப்பட்டிருப்பதைத் தாய் உணர்ந்துகொள்ள முடியும். இதனால் வலியும் வேதனையும் தாயுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து ஏற்படும் வலியால் தாய் தன் சக்தியை திரட்டிக்கொண்டு சிரமப்பட்டு மூச்சை இழுத்துப் பிடித்து அடைப்பை நீக்கி குழந்தை வெளியேற வேண்டும் எனத் தன்னால் ஆன முயற்சியை செய்கிறாள்.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
தாயானவள் மூச்சை இறுக்கி, தளர்த்தி, முக்கி, கத்தி, அழுது குழந்தையை வெளியேற்ற முயற்சி செய்கிறாள். இப்படி தாய் முயற்சி செய்யும்போது பிறப்புறுப்பின் வாய்ப்பகுதி விரிந்து கொடுத்து, திறக்கவும் செய்கிறது. குழந்தையின் தலையும் இவ்வழியாக வெளியேறத் தொடங்குகிறது. தாய் மேலும் முக்கி முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் தலை, முகம் வழுக்கி வெளியே வருகிறது. குழந்தையின் தலை, தாயின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியே வந்தபின் அதிக சிரமத்தை செலுத்தி வெளியே தள்ள வேண்டாம் என்ற நிலை ஏற்படும். இயல்பாகவே குழந்தை வெளியேறும். இப்போது தாய் தன்னை நிதானப்படுத்தி, மூச்சு விட்டு சிரமம் இல்லாமல் தன்னை தளர்த்திக்கொள்ளலாம். சில நொடிகளிலே குழந்தையின் உடல், கைகள், கால்கள் ஆகியவை வெளியேறுகின்றன. how to handle delivery pain Image Source : Nari

இரண்டாவது பிரசவம் எப்படி இருக்கும்?

ஏற்கெனவே பெற்ற அனுபவத்தால் தாய் பிரசவத்துக்குத் தயாராகி இருப்பார். வலி இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு, மன தைரியம் இருக்கும். முதல் பிரசவத்தில் அனுபவித்த வலியும் வேதனையும் அதே நேரம் இரண்டாவது பிரசவத்துக்கு இருக்காது. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை சிரமம் இருக்கலாம். அதற்கு அடுத்த பிரசவங்களில் இவ்வளவு நேரமோ இடைவெளியோ தேவைப்படாது. இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null