குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

குழந்தைக்கு 6-வது மாதம் தொடங்கி விட்டதா… உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாராகிவிட்டது. வீட்டிலே உங்கள் கையால் தயாரித்த, சுத்தமான ஹோம் மேட் செர்லாக் பவுடரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்து கொடுக்கலாம்.

வீட்டிலே தயாரித்தால் சுகாதாரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரமான உணவைக் கொடுத்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க பெற்று ஆரோக்கியமாக வளருவர்.

ஹோம்மேட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 1

தேவையானவை:

  • அரிசி – 50 கிராம்
  • துவரம் பருப்பு – 10 கிராம்
  • பச்சைப் பயறு – 10 கிராம்
  • பாசி பருப்பு – 10 கிராம்
  • உலர்ந்த பட்டாணி – 10 கிராம்
  • கொண்டைக்கடலை – 10 கிராம்
  • சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

  • கொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும்.
  • நன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
  • சுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும்.
  • கழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும்.
  • நன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.
  • தீய விடாமல் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.
  • அரிசியை வறுக்கும்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
  • பருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
  • இப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள்.
  • இதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
  • வறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைக்கலாம். sathu maavu powder for babies

Image Source: Credit youtube.com

இதையும் படிக்க: கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

குறிப்பு:

  • வறுக்கும்போது தனி தனியாக வறுக்கவும்.
  • வெயிலில் காய வைத்த பிறகு, எதாவது கற்கள் இருக்கிறதா என ஒருமுறை பரிசோதித்துப் பார்க்கவும்.
  • மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தைக்கு தேவையான ஹோம்மேட் செர்லாக் பொடியை எடுத்துக்கொண்டு, தேவையான வெந்நீர் கலந்து இளஞ்சூடாக இருக்கும்போது குழந்தைக்கு ஊட்டலாம்.
  • பயணத்துக்கு செல்லும்போது பயன்படுத்தலாம்.

பலன்கள்:

  • மாவுச்சத்து, புரதம் ஆகியவை கிடைக்கும்.
  • குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் இதில் கிடைக்கும்.
  • சாப்பிட்ட உடன், எனர்ஜி கிடைக்கும்.
  • குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவும்.

ஹோம்மேட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 2

தேவையானவை

  • புழுங்கல் அரிசி – 100 கி
  • அல்லது
  • சிவப்பு அரிசி – 100 கி

செய்முறை

  • புழுங்கல் அரிசி அல்லது சிவப்பரிசியை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
  • முடிந்தவரை நன்றாகத் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
  • வெள்ளைத் துண்டில் அரிசியை பரப்பி ஃபேன் காற்றில் உலர விடுங்கள்.
  • பின்பு வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • வறுத்தவற்றை நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

sathu maavu for babies

Image Source : Credit atfagric.com

இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

குறிப்பு:

  • சிவப்பரிசியை கழுவிய பிறகு 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரை வடித்து வெள்ளைத் துண்டில் உலர்த்தவும்.
  • குழந்தைக்காக செய்யும்போது, தேவையான ஹோம்மேட் செர்லாக் பவுடரை எடுத்து கப்பில் போட்டு அதில் வெந்நீரை ஊற்றி 5 நிமிடங்கள் கழித்து கலக்கவும்.
  • இளஞ்சூடாக இதைக் குழந்தைக்கு ஊட்டலாம்.

பலன்கள்

  • சிவப்பரிசியில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
  • மாவுச்சத்து நிறைந்துள்ளது.
  • வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
  • உடனடி எனர்ஜி கிடைக்க வல்லது.

ஹோம்மேட் மில்லட் செர்லாக் பவுடர் – சத்து மாவு செய்முறை 3

தேவையானவை:

  • கேழ்வரகு – 1 கப் அல்லது முளைவிட்ட கேழ்வரகு – 1 கப் அல்லது தினை – 1 கப்
  • கம்பு – 1 கப்
  • சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
  • பாதாம் – ½ கப்
  • பிஸ்தா – ½ கப்
  • வறுத்த நிலக்கடலை – ½ கப்
  • முந்திரி – ½ கப்
  • பொட்டுக்கடலை – ½ கப்

செய்முறை

  • கேழ்வரகு அல்லது தினையை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதுபோல கம்பையும் வறுத்துக் கொள்ளுங்கள்.
  • பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த நிலக்கடலைத் தோலை நீக்கி கொள்ளுங்கள்.
  • பொட்டுக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  • அனைத்தும் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
  • பின் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் முன் சுக்கு பொடி சேர்க்கவும்.
  • உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம்.
  • ஒவ்வொரு முறை இந்த ஹோம்மேட் செர்லாக் பவுடர் எடுக்கும்போது உலர்ந்த ஸ்பூனையே பயன்படுத்துங்கள்.
  • ஹோம்மேட் செர்லாக் பொடி ரெடி.

homemade cerelac for babies

Image Source: Credit thepioneerwoman.com

குறிப்பு:

உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கேழ்வரகோ முளைகட்டியோ கேழ்வரகோ சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

ஹோம்மேட் மில்லட் செர்லாக் இனிப்பு கூழ் ரெசிபி

தேவையானவை:

  • மில்லட் ஹோம்மேட் செர்லாக் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  • கருப்பட்டி – தேவையான அளவு
  • தண்ணீர் – 1 கப்
  • நெய் – சிறிதளவு

செய்முறை

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கருப்பட்டி போடவும்.
  • கருப்பட்டி கரைந்ததும், கருப்பட்டி கலந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
  • மீண்டும் கருப்பட்டி தண்ணீரை அடுப்பில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் ஹோம்மேட் செர்லாக் பவுடரை சேர்க்கவும்.
  • கட்டிகளாக நிக்காமல் நன்கு கலக்கவும்.
  • 5 நிமிடங்கள் கழித்து, நெய் ஊற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.

ragi koozh for babies

Image Source : Credit youtube.com

இதையும் படிக்க: ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

பலன்கள்:

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • செரிமானம் எளிதாகும்.
  • ஊட்டச்சத்துகள் நிரம்பியது.
  • மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
  • தசைகள் வளர்ச்சிக்கு உதவும்.
  • எலும்புகள் உறுதியாகும்.
  • சருமம், முடி ஆகியவை ஆரோக்கியம் பெறும்.
  • வயிற்றுக்கு சிறந்த உணவாக அமையும்.

இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null