வலிப்பு வரும் குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வலிப்பு வருவதைத் தடுப்பதற்கும் வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் அல்லது 100 டிகிரி மேல் இருந்தால் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
காய்ச்சல் அதிகமானால் சன்னி வந்து விடலாம்.
வலிப்பு வந்தால் எப்படி கை, கால்கள் அசைகிறது?
மூளையிலிருந்து வெளிப்படும் மின் சக்தி மூலமாகத்தான் நம் கைகள் மற்றும் கால்களை அசைக்க செய்கிறோம்.
இந்த மின் சக்தி திடீரென அதிகமாக வந்தால், உடல் உறுப்புகள் இயல்பான நிலையில் இல்லாமல் மாறான வகையில் தன்னிச்சையாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவதைத்தான் வலிப்பு எனச் சொல்கிறோம்.
வலிப்பின் அடையாளம்...
உடல் வெட்டி வெட்டி இழுப்பது.
வாயில் நுரை தள்ளுவது போன்றவை வலிப்பு எனச் சொல்லப்படுகிறது.
மூளை, நரம்பு மண்டல நோய்களில் பெருமளவு தாக்குவது வலிப்பு நோய்தான்.
இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
என்னென்ன வலிப்பு உள்ளன?
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் வலிப்பு வரும். அதை ஐஸ்கிரீம் எபிலெப்ஸி என்பார்கள்.
வெந்நீர் குளிக்கும்போது வரும் வலிப்பை, பாத்திங் எபிலெப்ஸி என்பார்கள்.
எதையாவது பிடித்தால் வரும் வலிப்பை, ரீடிங் எபிலெப்ஸி என்பார்கள்.
டிவி பார்க்கையில் வரும் வலிப்பை, டெலிவிஷன் எபிலெப்ஸி என்பார்கள்.
உடலுறவு கொள்ளும்போது உண்டாகும் வலிப்பை, காய்டஸ் எபிலெப்ஸி என்பார்கள்.
காரணமே இல்லாமல் அதிகமான, பயங்கரமான சிரிப்பை ஏற்படுத்தும் வலிப்பை ‘ஜெலாஸ்டிக் எபிலெப்ஸி’ என்பார்கள்.
இதெல்லாமே ‘ரிபளக்ஸ் எபிலெப்ஸி’ என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிக்க: எந்த குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்படுகிறார்கள்? அறிகுறிகள் என்ன?
இன்னும் சில வலிப்பு நோய் வகைகள்...
சில குறிப்பிட்ட வலிப்புகளில், ஒரு விரல் மட்டும் வெட்டி, வெட்டி இழுக்கும். பின் அப்படியே விரல்கள், உள்ளங்கை, முழங்கை எனப் பரவும். இது ‘எபிலெப்சி மார்ச்’ என்பார்கள்.
கை, கால் இழுப்பதோடு சுயநினைவு இல்லாமல் இருப்பதை ‘காம்ப்ளக்ஸ் சீஷர்’.
வலிப்புடன் சுயநினைவு இருப்பது ‘சிம்பள் சீஷர்’.
கை, கால் எதுவும் வெட்டி இழுக்காமல் சுயநினைவு இல்லாமல் இருக்கும். அது ‘ஆப்சன்ஸ் சீஷர்’.
‘பார்ஷியல் சீஷர்’ என்னும் வலிப்பில் உடலின் ஒரு பகுதி மட்டும் கட்டுப்பாட்டை மீறி அதிகமாக அசையும்.
முழு உடலும் துடித்து, உடல் பகுதிகள் அனைத்துமே சிறிது நேரம் விறைத்து, வில்லாக வளைந்து வெட்டி இழுப்பது, ‘ஜெனரலைஸ்டு சீஷர்’.
வலிப்பில் கோபம், கடும் சோகம் போன்ற உணர்ச்சிகள் அதிகரித்து சில நொடிகள் வரை இருக்கும் வலிப்பு, ‘சைக்கோ மோட்டார் சீஷர்’.
திருமணமான தம்பதியருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயம் விரைவாகத் துடித்து, அதிக வியர்வை கொட்டினால் இது உடலுறவின்போது ஏற்படும் வலிப்பு.
பிறப்புறுப்புகளில் அதிகமான இன்பத்தையும் தாங்க முடியாத வேதனையையும் தருவது இனவிருத்தி கட்டுப்பாடு வலிப்பு.
வலிப்பு வராமல் தடுப்பது எப்படி?
வலிப்பு எதனால் வருகிறது என ஒப்பிட்டு பாருங்கள். காரணத்தை அறிந்து கொண்டு அதனைத் தவிர்த்தாலே வலிப்பு நோய் வராமல் தடுக்கலாம்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வலிப்பு வந்தால், அதை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
அதிக காய்ச்சலின்போது வந்தால் குறைந்த காய்ச்சல் இருக்கும்போதே மருத்துவரிடம் செல்லும்.
மேலும் காய்ச்சலின்போது நெற்றியில் ஈரத்துணி வைக்க வலிப்பு பிரச்னை வராது.
இதையும் படிக்க: நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
வலிப்பு வராமல் இருக்க எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
- சாக்லேட்
- டீ, காபி
- பாதுகாப்பற்ற வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள்
- கோலா பானங்கள், குளிர் பானங்கள்
- ஐஸ்கிரீம்
வலிப்பு வராமல் தடுக்கும் முறைகள்…
நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதைத் தடுத்தல்.
மங்கலான வெளிச்சத்தில் படிப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது.
வெல்டிங், லேசர் லைட், ஃபோகஸ் லைட் வெளிச்சத்தை அடிக்கடி பார்க்க கூடாது.
மொபைல் போனை அதிகமாகவும் கண்களுக்கு நெருக்கமாகவும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மின்னலைகளை ஒலி அலைகளாக மாற்றும் கருவிகளை காது, தலையில் அணிவதால் வலிப்பு வரலாம்.
குறைந்தது குழந்தைகள் 10 மணி நேரமும் பெரியவர்கள் 7-8 மணி நேரமும் தூங்க வேண்டியது அவசியம்.
இதையும் படிக்க: அடம் பிடிக்கும் குழந்தையை சமாளித்து சரிசெய்வது எப்படி?
Source: ஆயுஷ் குழந்தைகள்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null