உடல் சூட்டை குறைக்கும் வழிகள்… அனைவருக்குமான தீர்வு...

உடல் சூட்டை குறைக்கும் வழிகள்… அனைவருக்குமான தீர்வு...

உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடல் சூட்டை குறைக்க முடியுமா? என்னென்ன வழிகள் உள்ளன? இந்தப் பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.

உடல் சூட்டை குறைக்கும் வழிகள்...

தண்ணீர்

உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப ¾ அல்லது 1 அல்லது 1 ½ லிட்டர் அளவு தண்ணீர் கொடுக்கலாம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் கால், பாதம் நனையும்படி 15 நிமிடங்கள் வைத்திருந்தாலும் ஓரளவுக்கு வெப்பநிலை குறையும்.

இளநீர்

தாதுக்கள், விட்டமின் நிறைந்த இளநீரைக் குடித்து வந்தாலும் வெப்பநிலை குறையும். நல்ல பலன் கிடைக்கும். 6 மாத குழந்தைகள் முதலே இளநீர் கொடுக்கலாம். தாய்ப்பாலுக்கு நிகரான உணவு தேங்காய்ப் பாலும் இளநீரூம்தான்.

புதினா

புதினா டீ போட்டுக் குடிப்பது. புதினா, எலுமிச்சை சாறு கலந்து ஜூஸோ டீயோ போட்டுக் குடிப்பது நல்லது. 8+ மாத குழந்தைகள் முதல் சாப்பிடலாம்.

நீர்ச்சத்து பழங்கள்

வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும். 8+ மாத குழந்தைகள் முதல் சாப்பிடலாம்.

நீர்ச்சத்து காய்கறிகள்

புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌ சௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். கேரட் 6 + மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மற்றவை 1 வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து கொடுக்கலாம். தேங்காய்த் துருவல் சேர்க்கலாம். how to reduce body heat Image Source : Medical news today இதையும் படிக்க: ரத்தத்தைச் சுத்தம் செய்து எந்த நோயும் வராமல் தடுக்கும் உணவுகள்...

பால்

இளஞ்சூடான பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி. 1 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது.

சந்தனம்

சந்தன கட்டை சிறிதளவு கிடைத்தால், அதைத் தினமும் இழைத்து முகத்தில் உடலில் பூசி குளித்தால் உடல் சூட்டை நீக்கும். 8 + மாத குழந்தைகளுக்கு ஏற்றது. பனிக்காலங்களில் தவிர்க்கலாம்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சியாகும். 7+ மாத குழந்தைக்கு கொடுக்கலாம்.

விட்டமின் சி

உடலின் வெப்பம், வெளி காரணங்களால் ஏற்படும் சூடு ஆகியவற்றைப் போக்க விட்டமின் சி நிறைந்த உணவுகள் உதவும். அவை, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, கிவி. 7+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கற்றாழை

கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும். வெறும் வயிற்றில் குடிப்பது மிக்க நல்லது. 3 வயது + குழந்தைகளுக்கு தரலாம். இதையும் படிக்க: சோர்ந்து போன தாய்மார்களுக்கு உற்சாகம் அளிக்கும் சிறப்பு உணவுகள்...

நீர்மோர்

தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி அல்லது மாலை 4 மணி அளவில் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். பெரியவர்கள், 3 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது.

வெந்தயம்

2 ஸ்பூன் வெந்தயத்தை முன்னாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம் அந்தத் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது மோருடன் கலந்து குடிக்கலாம். பெரியவர்கள் சாப்பிடலாம்.

யோகர்ட்

தினமும் ஒரு யோகர்ட் வாங்கி சாப்பிடலாம். இதனாலும் உடல் குளிர்ச்சியாகும். அனைவருக்கும் ஏற்றது. 1 வயது + குழந்தைகள் சாப்பிடலாம்.

சப்ஜா விதைகள்

சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அதை இளநீரில் அல்லது பாலில் அல்லது பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். உடலின் வெப்பம் தணியும். அனைவருக்கும் ஏற்றது. 1 வயது + குழந்தைகள் சாப்பிடலாம்.

நீச்சல்

வாரத்தில் 4-5 நாட்கள் 40 நிமிடங்களுக்கு நீச்சல் பயிற்சி செய்யுங்கள். உடல் இயக்கத்துக்கும் நல்லது. உடலும் குளிர்ச்சியாகும். 5 வயது + குழந்தைகள், பெரியவர்கள் செய்யலாம்.

தேங்காய்ப் பால் கஞ்சி

புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம் கலந்து குழைய வேகவிடவும். அதில் கெட்டியான தேங்காய்ப் பால் ஊற்றி கலக்க வேண்டும். 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று காலை உணவாக சாப்பிடுவது மிக மிக நல்லது. உடல் சூடு காணாமல் போய்விடும். இதற்கு புதினா துவையல் தொட்டு சாப்பிடலாம். அனைவருக்கும் ஏற்றது. இதையும் படிக்க: தைராய்டு பிரச்னை… தாய்மார்களுக்கான நிரந்தர தீர்வுகள்...
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

உடல் சூட்டை குறைக்கும் வழிகள்...

பிராணாயாமம்

how to reduce body heat Image Source : Super health sitali pranayama, sitkari pranayama… இந்த இரண்டும் பிராணாயாமமும் உடல் சூட்டை வெகுவாக குறைக்கும். குளிர்ச்சியை நன்கு உணர முடியும். தகுந்த யோக நிபுணரிடம் இந்த பிராணயாமக்களை எப்படி செய்வது எனக் கற்றுக் கொண்ட பின் இதைச் செய்யுங்கள். பெரியவர்களுக்கு ஏற்றது. 8 வயது+ குழந்தைகள் செய்யலாம்.

எண்ணெய் குளியல்

பெண்கள் செவ்வாய், வெள்ளி… ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு வரவே வராது. பெரியவர்கள் அவசியம் செய்ய வேண்டும். 3 வயது + குழந்தைகள் முதல் பழக்கப்படுத்துங்கள்.

தூக்கம்

இரவு 10 மணிக்குள் தூங்க சென்றுவிட்டால் உடல் சூடு அதிகரிக்காது. அதுவும் எண்ணெய் குளியல் குளித்த அன்று, கட்டாயமாக இரவில் சீக்கிரம் தூங்க சென்று விடுங்கள்.

ஆயுர்வேதம் முறைப்படி சூட்டை குறைக்க

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாகத் தேன், கரும்பு சாறாள் எடுக்கப்பட்ட மொலாஸஸ் சாப்பிடலாம். 4-5 மணி அளவில் யோகர்ட் சாப்பிடுங்கள். நீச்சல் பயிற்சி செய்யலாம். பருத்தி, லினன் போன்ற ஆடைகள் அணிவது நல்லது. இரவில் இளஞ்சூடான பாலில், பாதாம் பவுடர் ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை கலந்து குடிக்கலாம். அதிக உப்பு, எண்ணெய், மசாலா தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தலைக்குத் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி வருவதாலும் உடலின் வெப்பம் குறையும். கொத்தமல்லி, தனியா, சீரகம், பனை வெல்லம் கலந்த மூலிகை டீ குடிக்கலாம். இதையும் படிக்க: இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null