பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா?

பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா?

குழந்தைகள் பொதுவாகவே படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் இருப்பர். வளர வளர இந்தப் பிரச்னை சரியாகிவிடும். படுக்கையை நனைக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களா, இது அவர்களின் பழக்கமா, குறைபாடா, உடல் பிரச்னையா எனப் பல பெற்றோரும் பயப்படுகின்றனர். அதற்கான புரிதலை, தெளிவை (How to stop bedwetting) இந்தப் பதிவின் மூலம் பார்க்கலாம்.

படுக்கையை நனைத்தல் என்பது ‘பெட் வெட்டிங்’ எனச் சொல்கின்றனர்.

இதை ‘நேச்சுரல் யூரினேட்டிங் சில்ரன்’ என்று டெக்னிக்கலாக சொல்கின்றனர்.
இதன் அர்த்தம் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் என்று சொல்வது உண்டு.

இந்த பிரச்னை நம் இந்தியா நாட்டிலும் பல வெளிநாடுகளிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெற்றோர்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம், அனுபவ வைத்தியம், கவுன்சலிங் போன்ற தீர்வுகளைத் தேடி செல்கின்றனர்.

உண்மையில் பெட் வெட்டிங் என்பது நோயா? குறைபாடா?

bed wetting kids

Image Source : Web MD

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? இதோ சில அறிகுறிகள்… (Signs of Healthy Babies)

 • பெரியவர்கள் கூட பயந்தால் சிறுநீர் வருவதாக சொல்கின்றனர். அத்தகைய மோசமான உணர்வு பயம். இந்த பயம் யாருக்குதான் இல்லை.
 • குழந்தைகளுக்கு பயம் இருக்கத்தானே செய்யும். தூக்கத்தில் பயந்து, உணர்ச்சிவயப்பட்டாலோ படுக்கையிலே சிறுநீர் கழிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு முக்கிய காரணம்தான்.
 • ஆனால், இது மட்டுமே காரணமா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது.

படுக்கையை நனைக்க என்ன காரணம்?

 • குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடே படுக்கையை நனைப்பதற்கு முக்கிய காரணமாகும்.
 • பல குடும்பங்களில் இந்த பிரச்னை தொடர்ந்து. தன் சந்ததிகளுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எப்போது குழந்தைகள் தானாக இந்த பிரச்னையிலிருந்து வெளி வருகின்றனர்?

 • பெண் குழந்தைகள் 6 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.
 • ஆண் குழந்தைகள் 7 வயதுக்குள்ளாகவே, படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.
 • அதாவது இந்த பெட் வெட்டிங் பிரச்னையிலிருந்து மீண்டு வருகின்றனர்.

how to stop bed wetting

Image Source : colchonescarreiro.com

இதையும் படிக்க: குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள் (Baby Sleep mistakes)

பெட் வெட்டிங் செய்யும் குழந்தைகளை எப்படி அணுகுவது?

 • அடிப்பது
 • திட்டுவது
 • கேலி செய்வது
 • கோபப்படுவது
 • மற்றவரிடம் சொல்லி குழந்தையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளுவது.
 • குழந்தையை மிரட்டுவது
 • சண்டை போடுவது

போன்றவற்றை பெற்றோரோ வீட்டு பெரியவர்களோ செய்தால் குழந்தைக்கு உடல் அல்லது மன ரீதியான பிரச்னைகள் வரலாம்.

பெட் வெட்டிங்குக்கும் உடல்நல பிரச்னைக்கும் தொடர்பு உண்டு…

 • வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகமாக படுக்கையை நனைப்பார்கள்.
 • மனநல வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்.
 • மாற்று திறனாளி குழந்தைகள்
 • நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ள குழந்தைகள்
 • வலிப்பு பிரச்னை உள்ள குழந்தைகள்
 • கெஃபைன் ன் உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள் அல்லது பெற்றோர் கெஃபைன் உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம்.

causes of bed wetting

Image Source : Espresso 77

இதையும் படிக்க: குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றலாமா? (Good Parenting)

 • டீ, காபி, சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள்.
 • மருந்துகளை அதிகமாக உண்ணும் குழந்தைகள்.
 • சிறுநீர் பாதையில் கிருமித் தொற்று உள்ள குழந்தைகள்.
 • ADH Anti-diuretic hormone சுரப்பு சீராக இல்லாத நிலை உள்ள குழந்தைகள்
 • பயம், அதிக பயம்.
 • கழிப்பறைக்கு அதிகமாக செல்லாத குழந்தைகள், பயத்தால் கழிப்பறைக்கு போகாதவர்கள்
 • உடலில் குடற்புழுக்கள் இருப்பது
 • மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படும் குழந்தைகள்.
 • குடல் பாதையில் அடைப்பு மற்றும் வீக்கம்

ஆரோக்கியமான குழந்தைகள் படுக்கையை நனைப்பார்களா?

ஆம். அவர்களும் படுக்கையை நனைப்பார்கள். ஆனால், 3-4 வயதுக்குள் இந்த பெட் வெட்டிங் பழக்கத்தை நிறுத்திவிடுவார்கள்.

குழந்தைகள் வளர வளர இந்தப் பழக்கம் படிப்படியாக குறைந்து நின்றுவிடும்.

சில குழந்தைகள் 5-6 வயதுக்கு மேல் தினமும் ஒரு முறையாவது படுக்கையை நனைத்துக் கொண்டிருந்தால் அந்தக் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கவும்.

பெட் வெட்டிங் செய்பவர்களுக்கான வீட்டு வைத்தியம்

ஒரு கைப்பிடி அளவு வில்வ இலைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். 3 மணி நேரம் கழித்து, அதைக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் குடிக்க கொடுத்து வரலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் (Thumb sucking) பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

Source :  ஆயுஷ் குழந்தைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null