குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது. அதன் பிறகு உடனே தாய்ப்பாலை நிறுத்தி விடலாமா… அது சரியாகுமா… குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது? தாய்ப்பாலை ஒரு நாளில் நிறுத்திவிட்டு மாற்றாக வேறு ஏதாவது உணவை வழங்கலாமா… நிச்சயம் கூடாது.

6 மாதங்கள் வரை

6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம். மருத்துவர் அனுமதித்தால் 5-6 வது மாத தொடக்கத்தில் சிறிதளவு திட உணவு தரலாம். 6 மாதத்துக்கு மேல் கட்டாயம் தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு தர வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். நோய் தாக்காது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். how to stop breastfeeding இதையும் படிக்க: தாய்ப்பால், குழந்தைகளின் உரிமை... எங்கும் எந்த நேரத்திலும்…

தாய்ப்பாலை நிறுத்துவதை எப்போதிலிருந்து தொடக்கலாம்?

ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கட்டாயம். ஒரு வயதுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதை சிறிதளவு குறைத்துக்கொண்டு திட உணவை அதிகப்படுத்துங்கள். திட உணவு என்றவுடன் எடுத்த உடனே சாம்பார் சாதம் தருவது இல்லை. கொழகொழப்பான உணவு, நீர்த்த உணவு, திரவமே சற்று கெட்டி தனமாக இருப்பது இப்படியெல்லாம் 6 வது மாதத்திலிருந்தே குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ப்யூரி, கஞ்சி, கீர், கூழ், ஸ்மூத்தி, ஜூஸ், சூப் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். களி உணவுகளைக் கொடுக்கலாம். குழைத்த சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவைத் தரலாம். இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், உப்புமா, கிச்சடி உணவுகள் தரலாம். பாயாசம், ஃபிங்கர் ஃபுட்ஸ், சப்பாத்தி, பராத்தா கொடுக்கலாம். படிப்படியாக உணவை அறிமுகப்படுத்துவதுதான் சிறந்தது. அதிக குளிர்ச்சியாகவோ அதிக சூடாகவோ இல்லாமல் இளஞ்சூடான பக்குவத்தில் உணவைத் தர வேண்டும். சுவையானதாக உணவு இருப்பது மிகவும் முக்கியம். அதுபோல சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.

தாய்ப்பால் நிறுத்த என்ன செய்யலாம்?

தாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும். தாய்ப்பால் கொடுக்காத இடைவேளிகளில் திட உணவுகளையோ திரவ உணவுகளையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே வருகையில், இறுதியில் தாய்ப்பால் நிறுத்த வேண்டும். இதையும் படிக்க: யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது?

when mom should not breastfeed ஒரு வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு இருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். ஒன்றரை வயதுக்கு மேல் இருமுறை கொடுத்தாலும் தாய்ப்பாலின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை விளையாட்டில் கவனம் செலுத்த வையுங்கள். 2 வயது முடியும் கட்டத்தில் ஒரு வேளை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். நீ வளர்ந்து விட்டாய் இனி தாய்ப்பால் உனக்கு தேவையில்லை என அடிக்கடி குழந்தைக்கு சொல்லலாம். பின்னர் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக வாரத்துக்கு 5 நாள் மட்டும் கொடுங்கள். பின்னர் அதையே 3 நாள் என மாற்றிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுப்பது போல மாற்றுங்கள். பின்னர் அதையும் நிறுத்திவிடுங்கள். இப்படி படிப்படியாக குறைப்பது நல்லது.

எந்த நேரத்தில் தாய்ப்பால் தர கூடாது?

காச நோய் டைபாய்டு தாய் மனநோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்பே தரவேண்டும். தாய் மயக்கநிலையில் இருக்கும்போது தாய்ப்பால் தர கூடாது. தொற்று நோய் கிருமிகளால் இருக்கும் பாதிப்புகள் இருந்தால் தாய்ப்பாலை குழந்தைக்கு தரவே கூடாது. மீறி தந்தால் தாய்க்கு உள்ள நோய் குழந்தைக்கும் பரவும். இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

மார்பக நோய்கள் இருந்தால் என்ன செய்வது?

மார்பக புற்றுநோய் சீழ்க்கட்டி மார்பகத்தில் வெடிப்பு மார்பகத்தில் ரத்த கசிவு மார்பகத்தில் புண் இருப்பவர்கள் தாய்ப்பால் தர கூடாது. இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க... தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null