பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்...

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்...

பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப் பற்றித் தெரிந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? எதை செய்யலாம்? எதை தவிர்க்கலாம் என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலை சேமித்து வைப்போருக்கும் இப்பதிவு உதவும்… தாய்ப்பாலை குழந்தைக்கு தாய் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். அன்பு, அரவணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும். இதையே அனைத்துத் தாய்மார்களும் எல்லாக் காலத்திலும் செய்ய முடியாமல் போகலாம். ஏனெனில் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை குழந்தைக்கு நேரடியாக வழங்க முடியாமல் போகலாம். அவர்களுக்கு என்ன மாற்று வழி? பார்க்கலாம் வாங்க...

பிரெஸ்ட் பம்ப்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப். மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுத்து மேனுவல் பிரெஸ்ட் பம்ப். அதாவது நாம் அழுத்தி தாய்ப்பால் எடுக்க வேண்டும். இது ஒரு வகை. எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப், இன்னொரு வகை. இதை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில், பிளக்கை சொருகி ஆன் செய்து கொள்ளலாம். இந்தக் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது தானியங்கி கருவி. இந்த இரண்டு கருவிகளில், தாய்மார்கள் தங்களது வசதி பொறுத்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஏன் பிரெஸ்ட் பம்ப் தேவை?

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும். தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும். சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். தூக்கமும் வரும் அதேசமயம் பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். நீங்கள் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை கொடுக்கலாம். how to use breast pump Image Source : FDA

பிரெஸ்ட் பம்பை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

2-3 மணி நேரத்துக்கு ஒருமுறை பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி, பால் சேமித்து வைக்கலாம். எப்படி தாய்ப்பால் நீங்கள் தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறீர்களோ அதுபோல் பிரெஸ்ட் பம்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதையும் படிக்க: ஃபார்முலா மில்க் சரியான அளவில் தருகிறீர்களா என எப்படி கண்டறிவது?

எலக்ட்ரிக் அல்லது மேனுவல் பம்ப்… எதைப் பயன்படுத்தலாம்?

இந்த இரண்டில் எது உங்களுக்கு சரி என நீங்களே தேர்வு செய்வது நல்லது. முழுக்க முழுக்க உங்கள் சாய்ஸ். மேனுவல் எலக்டிரிக்கைவிட விலை குறைவு. ஆனால், நீங்கள் உங்கள் கைகளால் அழுத்தி தாய்ப்பாலை வெளியே எடுக்க வேண்டி இருக்கும். எலக்டிரிக் பம்ப் விலை அதிகம். ஏனெனில் அதுவே மார்பகத்தை அழுத்தி பால் எடுக்கும் வேலையை செய்கிறது. தாய்ப்பாலை சேமிக்க, மேனுவல் பம்ப் 10-40 நிமிடங்கள் வரை ஆகும். ஏனெனில் நீங்கள் அழுத்தி பால் எடுக்க வேண்டி இருக்கும். இதுவே எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் 10 - 15 நிமிடங்கள்தான் ஆகும். உங்களின் நேரத்தைப் பொறுத்தும், இதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

பாலை சேகரித்து வைக்க சிந்திக்கும் தாயா நீங்கள்?

பாலை சேகரித்து வைப்பதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தாய்ப்பாலை, பிரெஸ்ட் பம்ப் மூலம் சேமித்து வைப்பது. மற்றொன்று, ஃபார்முலா மில்கை சேமித்து வைப்பது.
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
இதையும் படிக்க: தாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? தீர்வு என்ன?

ஃபார்முலா மில்க் சேமித்து வைப்பது பற்றி…

ஃபார்முலா மில்கை தயாரித்து ஒரு மணி நேரத்துக்குள் குழந்தைக்கு கொடுத்துவிட வேண்டும். ஃபார்முலா மில்கை தயாரித்து, ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல. ஒரு முறை நீங்கள் ஃபார்முலா மில்கை தயாரித்து வைத்தால், அதை இளஞ்சூடாக, குழந்தை கொடுக்கும் சூட்டில் வந்தபின் குழந்தைக்கு கொடுத்துவிட வேண்டும். தயாரித்து வைத்த ஃபார்முலா மில்கை குழந்தை கொஞ்சமாக குடித்து விட்டு, விளையாட்டு மேல் கவனம் திரும்பிவிட்டால், மீண்டும் அதே ஃபார்முலா மில்கை 10 நிமிடங்கள் ஆகி இருந்தால்மட்டுமே குழந்தைக்கு மீண்டும் கொடுக்கலாம். குழந்தை சுவைத்த ஃபார்முலா மில்கை, 10 நிமிடங்களுக்கு மேல் ஆகி இருந்து, மீண்டும் அதே ஃபார்முலா மில்கை குழந்தைக்கு கொடுக்க கூடாது. குழந்தையின் உமிழ்நீர் மூலமாக ஃபார்முலா மில்கில் கிருமிகள் பரவி இருக்கும். எனவே, எப்போதும் ஃபார்முலா மில்கை சேமித்து வைக்க வேண்டாம். ஃப்ரெஷ்ஷாக தயாரிப்பது நல்லது. ஃபார்முலா மில்க் தயாரித்த ஒரு மணி நேரத்துக்குள் கொடுத்து விடுதல் நல்லது. குழந்தை சுவைத்த ஃபார்முலா மில்கை, 10 நிமிடத்துக்கு மேல் கடந்து இருந்தால் மீண்டும் குழந்தைக்கு திரும்ப கொடுக்கவே கூடாது. நினைவில் இருக்கட்டும்.

தாய்ப்பாலை சேமிப்பது... எவ்வளவு நாள் வரை சேமித்து வைக்கலாம்?

ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், வெளியில் தாய்ப்பாலை வைக்க நினைக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது. தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது. இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும். ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். 10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? how to save breastmilk Image Source : mightyape

சேமித்து வைத்த தாய்ப்பாலை எப்படி பயன்படுத்த வேண்டும்?

தாய்ப்பாலை சேமித்து வைத்திருந்தால், அதை ஃபிரிட்ஜிலிருந்து வெளியில் எடுத்துவிட்டு மீண்டும் அந்த தாய்ப்பால் அறையின் வெப்பநிலைக்கு வந்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். அதாவது, குளிர்ச்சியோ சூடாகவோ தாய்ப்பால் இருக்க கூடாது. தாய்ப்பால் எப்படி ரூம் டெம்பரேச்சர் (அறையின் வெப்ப நிலைத்தன்மையில் இருக்கிறதோ) அதே தன்மையில் மாறிய பிறகே சேமித்து வைத்தப் பாலை கொடுக்க வேண்டும். சாதாரண நீர், அல்லது இளஞ்சூடான நீரில் சேமித்து வைத்த பாட்டிலை வைத்து குளிர்ச்சியைத் தணித்து அறை வெப்பநிலைக்கு தாய்ப்பாலை கொண்டு வர வேண்டும். இதற்கு 20-40 நிமிடங்கள்கூட ஆகலாம். ஆனால், இதுவே சரியான முறை. எக்காரணத்துக்கும் தாய்ப்பாலை சூடு செய்யவே கூடாது. இது மிக மிக முக்கியம். தற்போது கடைகளில் பாட்டில் வாம்மர் கிடைக்கிறது. அதை வாங்கியும் நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலின் குளிர்ச்சித்தன்மையை நீக்கலாம்.

தாய்ப்பால் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள்… தீர்வுகள்…

தாய்ப்பால் சேமித்து வைத்து, அதை சூடாக்கினால் தாய்ப்பாலில் உள்ள தன்மை நீங்கிவிடும். இதைக் குழந்தைக்கு கொடுக்க கூடாது. லேசாக குளிர்ச்சியாக தாய்ப்பால் இருந்தாலோ இளஞ்சூடாக தாய்ப்பால் இருந்தாலோ குழந்தை தாய்ப்பாலை குடிக்காது. குழந்தைக்கு வித்தியாசம் தெரிந்துவிடும். சிறிதளவு குளிர்ச்சியான தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுத்தாலும், குழந்தையின் தொண்டையில் புண்கள் வரக்கூடும். சேமித்து வைத்த தாய்ப்பாலை குழந்தை சுவைத்துவிட்டு, மிச்சமிருக்கும் பாலை மீண்டும் ஃபிரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ சேமித்து வைக்க கூடாது. குழந்தையின் உமிழ்நீர் பட்ட தாய்ப்பாலில் கிருமிகள் படர்ந்துகொண்டே போகும். இதைக் குழந்தைக்கு மீண்டும் கொடுக்க கூடாது. நீங்கள் சேமித்து வைக்கும் தாய்ப்பால் பாட்டிலை அவசியம் ஸ்டெரிலைஸ் செய்யுங்கள். சுகாதாரமற்ற பாட்டிலில் தாய்ப்பாலை சேமித்து வைக்க கூடாது. சேமித்து வைத்த தாய்ப்பாலை குளிர்ச்சி நீங்கி விட்டதா என அறிய, உங்களது கைகளில் 2-3 சொட்டு விட்டு பாருங்கள். பின் அதை சுவைத்துப் பாருங்கள். குளிர்ச்சி நீங்கிவிட்டதா எனத் தெரியும். பிரெஸ்ட் பம்பை நன்கு ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும். ஏனெனில் பிரெஸ்ட் பம்பில் தாய்ப்பால் இருக்கும் அல்லவா... எனவே நன்கு சுத்தப்படுத்தி, ஸ்டெரிலைஸ் செய்வது மிக மிக அவசியம். எப்போது ஃபீடிங் பாட்டில் வேறு, தாய்ப்பால் சேகரித்து வைக்கின்ற பாட்டில் வேறு எனப் பிரித்துக் கொள்ளுங்கள். தாய்ப்பால் சேமிப்பதற்கென பிரத்யேகமான பாட்டில்கள் விற்கின்றன. அதைப் பயன்படுத்துவது நல்லது. ஃபீடிங் பாட்டிலில் தாய்ப்பால் சேகரிக்க வேண்டாம். ஏனெனில் அதில் நிப்பிள் இருக்கிறது. சிறு ஓட்டையும் இருக்கிறது. அதை ஃபிரிட்ஜிலோ ஃபிரிசரிலோ வைக்க வேண்டாம். அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது. இதையும் படிக்க: மார்பகத்தில் பால் கட்டிவிடுதல்… வலி இல்லாத வீட்டு வைத்திய டிப்ஸ்... ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null