எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்?

எந்த நோயும் வராமல் தடுக்க என்னென்ன உணவுகளை குழந்தைக்கு தரலாம்?

நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருந்தால்தான் நோய்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்க முடியும். அத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் அவசியமானது. குழந்தைகளுக்கு இன்னும் கூடுதலாகவே தேவைப்படுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளைக் குழந்தைகளுக்கு அன்றாடம் தர வேண்டும்.

உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க…

#1. தாய்ப்பால்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். ஒவ்வாமை, புற்றுநோய் தாக்கம், கிருமித் தாக்குதல், இதயம் மற்றும் கல்லீரல் நோய்கள் ஆகியவைத் தடுக்கப்படும். மூளையின் செயல் திறன் அதிகரித்துக் காணப்படும்.

#2. விட்டமின் டி3

குழந்தைகளை சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் காண்பிக்க விட்டமின் டி3 சத்து கிடைக்கும். மழலைகளை சிறிது நேரம் விளையாட விடலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் ஆகியவற்றிலிருந்து, விட்டமின் டி3 குழந்தைகளைக் காக்கும். பல் வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் உதவும்.

#3. விட்டமின் சி

குழந்தையின் 6 வயது வரை ஒரு நாளைக்கு 250 மி.கி. விட்டமின் சி தேவைப்படுகிறது. சத்தான உணவுகளிலிருந்து விட்டமின் சி சத்தைப் பெறலாம். கைக்குழந்தைகளுக்கு, தாய் சத்தான உணவு உண்பதால் தாய்ப்பால் மூலம் சத்து கிடைக்கும்.

badam for babies

 

#4. பாதாம்

விட்டமின் இ சத்து நிரம்பியது. ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சிக்கு உதவும். மூளை வளர்ச்சி மேம்படும். நல்ல கொழுப்பு உடலில் சேரும். ஆன்டிஆக்ஸ்டன்ட் நிறைந்தது.

#5. காய்கறிகள்

கேரட், புரோக்கோலி, உருளை, பீட்ரூட், பீன்ஸ், அவரை, பூசணி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பல்வேறு காய்கறிகளைத் தினம் ஒரு வேளை உணவாகக் கொடுத்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#6. ப்ரோபயோடிக்

தயிர், யோகர்ட், மோர் போன்றவற்றில் உள்ளன. இவற்றைக் குழந்தைகளுக்கு போதுமான அளவில் தருவதால் நல்ல பாக்டீரியா கிடைக்கும். வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிக்கும்.

இதையும் படிக்க: 0 – 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

fish for babies

#7. மீன்

ஃபேட்டி ஆசிட் சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள். தாய் மீன் சாப்பிடுவதால், நல்ல கொழுப்பு உடலில் சேரும். நோயை எதிர்க்கும் சக்தியைக் கொடுத்து நோய் கிருமிகளை அழிக்கும். தாய்ப்பாலில் இச்சத்துகள் சேர்ந்து குழந்தைக்கு ஊட்டமளிக்கும்.

#8. சர்க்கரைவள்ளி கிழங்கு

இந்த கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கூழ் போல கொடுப்பதால் கார்டினாய்ட்ஸ் சத்து குழந்தைக்கு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடும். கிருமித் தொற்றை அழிக்கும்.

#9. சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி ஆகியவை விட்டமின் சி நிறைந்த சத்துகள். பழமாகவோ ஜூஸாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரவேண்டும்… ஏன்?

#10. குடமிளகாய்

விட்டமின்கள் நிறைந்துள்ளன. தோசை, சப்பாத்திக்கு நடுவில் ஃபில்லிங்காக குடமிளகாய்களை அறிந்து வதக்கி, மிளகு தூவி கலந்து கொடுக்கலாம். விட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்களுக்கும் சருமத்துக்கும் மிகவும் நல்லது.

#11. புரோக்கோலி

விட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளன. விட்டமின் ஏ, சி, இ, ஆன்டிஆக்ஸிடன்ட், நார்ச்சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும்.

garlic for babies

#12. பூண்டு

குழந்தைக்குத் தரும் கீரை சூப் ஆகியவற்றில் பூண்டை விழுதாக்கிக் கொடுக்கலாம். பல் முளைத்த குழந்தைகளுக்கு சாதத்தில் உள்ளே வைத்து ஊட்டி விடலாம். சல்ஃபர், அலிசின் ஆகியவை நோய் கிருமிகளை அழிக்க வல்லது.

#13. கீரைகள்

விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை தொற்றுக்களை எதிர்த்து அழிக்கும். விட்டமின் ஏ, ஆக்ஸாலிட் ஆசிட் எனும் ஊட்டச்சத்துகளும் கீரைகளிலிருந்து கிடைக்கும்.

இதையும் படிக்க: குழந்தையின் முதல் 1000 நாட்கள் … 21 கட்டளைகள்..!

#14. பப்பாளி

விட்டமின் சி அதிகமாக உள்ளது. செரிமானத்துக்கு உதவும் நொதிகளும் இதில் அதிகம். பொட்டாசியம், ஃபோலேட், விட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன.

#15. கிவி

ஃபோலேட், பொட்டாசியம், விட்டமின் கே, விட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிவியில் இருந்து கிடைக்கின்றன.

பல் இல்லாத குழந்தைகளுக்கு ஜூஸ், கூழ், கஞ்சி வகையிலும் பல் முளைத்த குழந்தைகளுக்கு திட உணவு, பழமாகவும் நொறுக்குத் தீனியாகவும் மேற்சொன்ன உணவுகளைக் கொடுப்பது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null