குழந்தைகளுக்கு ப்யூரி, பருப்பு சாதம் கொடுத்தே போர் அடித்திருக்கும். விதவிதமாக செய்து கொடுத்தால்தான் குழந்தைகள் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு செய்ய கூடிய சிம்பிள் ரெசிபிகளைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கான 6 சிம்பிள் இந்திய வகை ரெசிபி
6-12 மாத குழந்தைகளுக்கு கீழ்காணும் ரெசிபிகளை செய்து கொடுத்தால், உப்பு மற்றும் சர்க்கரையை தவிர்த்து விடுங்கள். சிறிய குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை தேவைப்படாது.
#1. மாம்பழ இட்லி
தேவையானவை
மாம்பழம் - ½ கப்
யோகர்ட் - ½ கப்
துருவிய தேங்காய் - ¼ கப்
வறுத்த ரவை - ¾ கப்
முந்திரி - 10
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
பாலிஷ் செய்யாத சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை
ரவை, ஏலப்பொடி தவிர அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்தவற்றை ரவையோடு சேர்த்து நன்கு கலக்கி மாவு போல செய்து கொள்ளுங்கள்.
அதில் ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும்.
இட்லி தட்டில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
Image Source : Better Butter
இதையும் படிக்க: குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி
#2.சர்க்கரைவள்ளி கிழங்கு தோசை
தேவையானவை
வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு - 50 கி
தோசை மாவு - 1 கப்
உப்பு - சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
துருவிய கேரட் - ¼ கப்
வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை
வேக வைத்த கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.
தோசை மாவில் அனைத்தையும் கலந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.
சூடான தவாவில் மாவு ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
Image Source : Pinterest
#3.வெந்தய தோசை
தேவையானவை
பச்சரிசி - 1 கப்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
அவல் - ¼ கப்
வெல்லம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்முறை
இளஞ்சூடான தண்ணீரில் பச்சரிசி, வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைக்கவும்.
இதில் வெல்லம், அவல் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த மாவில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
தவாவில் தோசைகளாக ஊற்றி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி
#4.இட்லி உப்புமா
தேவையானவை
இட்லி - 3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மிளகு தூள் - ¼ டீஸ்பூன்
செய்முறை
இட்லியை உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் சேர்க்கவும்.
உதிர்த்த இட்லியை சேர்த்து வதக்கவும்.
கால் டீஸ்பூன் மிளகு தூள் சேர்க்கலாம்.
நன்கு கலந்த பின் இறக்கி விடவும்.
Image Source : Genius Kitchen
இதையும் படிக்க:பேபீஸ் ஸ்பெஷல்... 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…
#5.ஓட்ஸ் பான்கேக்
தேவையானவை
ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கடலமாவு - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய கேரட் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர், நெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பவுலில் அனைத்தையும் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவை கரைத்துக் கொள்ளவும்.
10 நிமிடம் அப்படியே மாவை ஊற விடவும்.
சூடான தவாயில் சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
இதையும் படிக்க: 8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });
#6.பரங்கிக்காய் சாதம்
Image Source : Baby Food E
தேவையானவை
அரிசி - ¼ கப்
பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சிறிதாக நறுக்கிய பரங்கிக்காய் - ½ கப்
உப்பு , மிளகு தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
தண்ணீர் - 1 ½ கப்
செய்முறை
அரிசி, பருப்பை நன்கு கழுவி கொள்ளவும்.
குக்கரில் அனைத்தையும் போட்டு வேக வைக்கவும்.
3 விசில் வந்ததும் நிறுத்தி விடுங்கள்.
லேசான இனிப்பு சுவை கொண்ட பரங்கிக்காய் கிச்சடி ரெடி.
இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர
இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
null
null