சமைக்க வேண்டாம்... 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி...

சமைக்க வேண்டாம்... 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி...

நிமிடத்தில் உணவு ரெடியாக வேண்டும். பயணம் செல்லும்போது நிறைய பொருட்களை நம்மால் எடுத்து செல்ல முடியாது. எனினும் சத்தான உணவைக் குழந்தைக்கு தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எப்படி சாத்தியமாகும்? சமைக்கவே வேண்டாம். சில நிமிடங்களில் 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடியை தயார் செய்யலாம்.

இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் செய்வது எப்படி?

தேவையானவை

  • அரிசி - 100 கி
  • பாசிப்பருப்பு - 100 கி
  • சீரகம் - ½ டீஸ்பூன்
  • மிளகு - 6

செய்முறை

  • அரிசியை நன்கு கழுவிய உடனே வடிகட்டிக் கொள்ளவும்.
  • அதை பானில் போட்டு வறுக்கவும்.
  • ஈரம் நீங்கி நன்கு வறுத்து இருக்க வேண்டும்.
  • அதேபோல பாசி பருப்பை நன்கு கழுவிய உடனே வடிகட்டி கொள்ளவும்.
  • அதையும் பானில் போட்டு வறுக்கவும்.
  • ஈரம் நீங்கி நன்கு வறுத்து இருக்க வேண்டும். தீ மிதமான அளவில் இருப்பது நல்லது.
  • மிளகு, சீரகத்தை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.
  • மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  • காற்று புகாத டப்பாவில் சேமித்துப் பாதுகாக்கலாம்.
  • 2-3 மாதம் வரை வைத்திருக்கலாம்.
khichadi mix powder Image Source : Healthy Living from Nature இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு - ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1528202144377-0'); });

5 இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி

#1.டிராவல் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ்

  • ஒரு பவுலில் 2 ஸ்பூன் கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.
  • தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
  • அவ்வளவுதான் கிச்சடி தயார்.

குறிப்பு

  • பயணத்துக்கு ஏற்றது. சத்தான உணவு.
  • 6-9 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • இதில் ஏதாவது பழ ப்யூரி கூட சேர்க்கலாம்.

#2.கேரட் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ்

  • ஒரு பவுலில் 2 ஸ்பூன் கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.
  • தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
  • வேகவைத்த கேரட்டை ஸ்பூனால் நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • மசித்த கேரட்டை கிச்சடியில் சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் கேரட் கிச்சடி தயார்.
khichadi recipe Image Source : Parentlane

குறிப்பு

  • 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#3.இனிப்பு டேட்ஸ் கிச்சடி மிக்ஸ்

  • ஒரு பவுலில் 2 ஸ்பூன் கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.
  • தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
  • இதனுடன் டேட்ஸ் சிரப் சேர்க்கவும்.
  • இனிப்பு கிச்சடி தயார்.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

குறிப்பு

  • பயணத்துக்கு ஏற்றது. சத்தான உணவு.
  • 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#4.நட்ஸ் கிச்சடி மிக்ஸ்

  • ஒரு பவுலில் 2 ஸ்பூன் கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.
  • தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
  • இதனுடன் நட்ஸ் பவுடர் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
  • சத்தான நட்ஸ் கிச்சடி தயார்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

குறிப்பு

  • பயணத்துக்கு ஏற்றது. சத்தான உணவு.
  • நட்ஸ் பவுடர் சேர்ப்பதால் சுவையும் நன்றாக இருக்கும்.
  • 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
nuts khichadi mix Image Source : Youtube

#5.புரோட்டீன் கிச்சடி மிக்ஸ்

  • ஒரு பவுலில் 2 ஸ்பூன் கிச்சடி மிக்ஸ் சேர்க்கவும்.
  • தேவையான வெந்நீர் சேர்த்துக் கலக்கவும்.
  • இதனுடன் புரோட்டீன் பவுடர் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
  • சத்தான புரோட்டீன் கிச்சடி தயார்.

இதையும் படிக்க: ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்… 

குறிப்பு

  • பயணத்துக்கு ஏற்றது. சத்தான உணவு.
  • புரோட்டீன் பவுடர் சேர்ப்பதால் சுவையும் நன்றாக இருக்கும்.
  • 7+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதையும் படிக்க: 6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர் ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null